மேகத்தில் இருந்து கால் தவறி ஒரு மழைத் துளி விழுந்து விடுகின்றது. கால்தவறித்தான் விழுந்தாலும் அடுத்த சில கணங்களில் சுதாகரித்துக்கொண்டு மெல்ல கீழ் நோக்கி தலையைத் திருப்புகின்றது அந்த துளி. அம்மாடியோவ்.. என்ன ஒரு ஆழத்தில் விடுந்துவிட்டேன்.. என் கதை இத்தோடு முடிந்ததுதான். என எண்ணும் போது கீழ் இருந்து தன்னை யாரோ பலமாக இழுப்பதனை உணர்கின்றது அந்த மழைத்துளி. எத்தனை பலங்கொண்டும் எதிர்த்தும் முடியவில்லை. துளியின் வேகம் அடுத்த கணங்களுக்குள் பலமடங்காகத் தொடங்குகின்றது. கைப்பற்றி தப்பிக்கவும்