வரலாற்றின் சாலையில் இருந்து ஈராயிரத்து பத்து கழிந்து செல்வதற்கான தூரம் இன்னும் சற்றுத்தான் இருக்கின்றது. கடந்து வந்த பாதையில் கண்ட சந்தோச சாரல்கள், சந்தித்த மனிதர்கள், புகட்டிய பாடங்கள், தித்தித்த நிமிடங்கள், கனத்த நொடிகள், பெற்ற வெகுமதிகள், வலித்த விபத்துக்கள், விபத்துக்கள் தந்த இழப்புக்கள்.. இன்னும் எத்தனையோ எத்தனையோ சங்கதிகள் எல்லாம் சிறிது நேரத்தில் இந்த ஈராயிரத்து பத்து என்னும் சாலையின் பணயக்குறிப்புகளாக பதியப்படப் போகின்றன. புதிதாக இன்னும் ஓர் புதிய சாலை எம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது.
மொறட்டுவப் பல்கலைக்கழத்தில் கணணிப் பொறியியல் பிரிவில் இறுதியாண்டில் எமது விருப்பத் தெரிவாக இரண்டு பாடங்களை தெரிவு செய்ய முடியும். அப்படி நானும் எனது நண்பர்களான நிமல் மற்றும் ரமணன் ஆகியோர் கணித மாணவர்களுக்கு கசக்கும் என எண்ணும் பாடமான Bio Informatics இனை தெரிவு செய்தோம். சுவாரசியமான பாடம். பலவிதமான புதிய தேடல்களை எங்களுக்குள் விதைத்தது அந்த பாடம். அந்தப் பாடத்தில் வருகின்ற பலசொற்பதங்கள் எமது மூளையில் உற்கார வைக்க முடியாமல் போனாலும் உயிரியல் கூர்ப்புக் கொள்கைகளும்