சரியான நேரத்தில் சரியான கேள்விகளினால் தமக்கு தேவையானவற்றை வெல்லுகின்ற திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தொழில் தளங்களிலோ அல்லது அதற்கு வெளிக் களங்களிலோ ஏற்படுகின்ற தேவையற்ற விடயங்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவும், எமது எதிர்பார்ப்புக்களை வெற்றி கொண்டு நினைத்தவற்றை அடையவும் இந்தத் திறமை நிட்சயமாக அவசியம். அதாவது கேள்வி என்ன தந்திரத்தின் மூலம் நாம் எமது இலக்குகளை இலகுவாக அடைந்து விடலாம்.
எமது நண்பர்கள், அலுவலக நண்பர்கள், ஊழியர்கள், மேலும் அலுவலக மேலதிதாரிகளுடன் நாம் பல சமயங்களில் விவாதிக்க நேர்கின்றது. விவாதங்கள் நிட்சயமாக ஏற்படும். ஏன் என்றால் நாம் மனிதர்கள். அவ்வாறு விவாதிக் கொண்டிருக்கின்ற பல சந்தர்ப்பங்களில் எம்மிடம் வார்த்தைகளுக்கு தட்டுப்பாடும் வசனங்களுக்கு தேடலும் ஏற்படுவதுண்டு. அவ்வாறான சமங்களில் நாங்கள் “என்ன சொல்லலாம்” இப்போது என்றுதான் தேடுவோம். நம்மிடம் விவாதித்துக் கொண்டிருப்பவர் புத்திசாலியாகவோ அல்லது சமயோகியாகவோ இருப்பாராயின் அந்தக் கணத்திலிருந்தே அவர் எம்மை வெல்லத் தொடங்கி விடுவார். அதன் பிறகு அவரின் இழுப்புகளுக்கும் அசைவுகளுக்கும் நாங்களும் இழுபடவும் அசைக்கப்படவும் நேடுரும். மாறாக “என்ன கேட்கலாம்” அவர்களிடத்தில் என தேடினால்… அவர் எம்மிடம் மெல்ல மெல்ல வீழ்வது நிட்சயம்.
அண்மையில் இலங்கை சென்று திருப்பிய போது, எனது வீட்டில் இருந்து முன்னர் பல்கலைகழகக்காலங்களில் வாசித்து இடைநடுவே வாசிக்காது விட்டிருந்த புத்ததங்கள் சிலவற்றையும் கொண்டு வந்திருந்தேன். அவற்றில் நான் முன்னர் மிகவும் விருப்பி ஆர்வத்தோடு வாசித்த Samuel D. Deep மற்றும் Lyle Sussman இன் “What to Ask When You Don’t Know What to Say” இன் புத்தகத்தினை இன்று MRT(Mass Rapid Transit) Train இல் வரும் போது மீளவும் வாசித்துக் கொண்டு வந்தேன். பெயரினைப் வாசித்தாலே புரியும் புத்தகத்தின் உள்ளடக்கம். ஓடும் கடுகதி இரயிலில் வாசிப்பதற்கு ஏற்ற புத்தகம். நயமாக விளங்கப்படுத்திச் சொல்லும் ஆங்கிலம்.
பயனுள்ள இந்தப் புத்தகத்தை ஒரு தடவை வாசித்துப் பார்க்கத் தொடங்கினால்; இந்தப் புத்தகம் நிட்சயமாக எப்போதும் உங்களின் கைகளிலோ அல்லது உங்களின் மடிக்கணணிப் பையினுள்ளோ அல்லது அலுவலக மேசையிலோ அல்லது உங்கள் இரவுக் கட்டிலின் அருகிலோ இடம்பிடித்து விடும்.
முடிந்தால் ஒருதடவையாவது இந்த The Magic of Questionsஇனைப் பற்றி வாசித்துப் பாருங்கள். பிறகு நீங்கள் இந்த ஆங்கிலப் புத்தகத்தை விலக்கமாட்டீர்கள். நான் வாசித்து விட்டேன்.. இப்போது மீண்டும் வாசிக்கின்றேன்..( ஒரு தடவை வாசிக்கும் போது பலவிடயங்கள் விளங்காமலும் ஆங்கிலம் புரியாமலும் இருந்தது. எனக்கு ஆங்கிலம் அவ்வளவு மட்டம். இப்போது மீண்டும் வாசிக்கின்றேன்.. இப்போதாவது முழுமையாகப் புரிகின்றதா என்று பார்ப்போம்.:-) )
Categories: எனது பார்வையில், படித்தவை ரசித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
நல்ல,பயனுள்ள பகிர்வு
தேடி வாசிக்க வேண்டும்
LOSHAN
http://www.arvloshan.com