“நீயே பயம் என்னும் இருளை அகற்றி நாளைய பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் சூரியனும் அந்த சந்திரனும்!” கொழும்பு முதல் அம்பாந்தோட்டை வரை எங்கும் காணப்படும் வீதியோர வாழ்த்துப் பதாதைகளில், அனேகமாக சிங்கள மொழியிலும் ஆங்காங்கே தமிழிலும் காணப்படும் வாசகம் அது.
மகிந்த இராசபக்சவினது “அரச முடிசூட்டு விழா”(Royal Coronation) இன்று இலங்கை தலைநகர் கொழும்பில் மிகவும் ஆர்ப்பாட்டான முறையில் நடந்தேறியது. பல நாட்டு அரச பிரதிநிதிகள், பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட படைவீரர்கள், ஏராளமான பாடசாலை மாணவர்கள், ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என எல்லோரும் வீற்றிருக்க தனது இரண்டாவது தடவைக்குரிய மகுடத்தை கூடிக்கொண்டார் மகிந்த இராசபக்க. மக்களது நிதி பெருமளவில் இந்த முடிகூட்டு விழாவிற்கு வாரி இறைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மகிந்த தனது மூன்றாவது நான்காவது ஏன் ஐந்து ஆறு என்று நீளக்கூடிய அளவிற்கு முடிசூட்டு விழாக்களை தனக்கு நடாத்தக் கூடியதான அரசியலமைப்பு மாற்றத்தினை அண்மையில் மகிந்த ஏற்படுத்தியிருந்தார். எல்லையற்ற அதிகாரங்களின் சக்தி அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை விடவும் இலங்கை அரசின் அனைத்து முக்கியமான அமைச்சுப் பொறுப்புக்களும் அவருக்கு உட்பட்டே இருக்கின்றது; அவருடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டிலிலே இருக்கின்றது. முற்று முழுதான இராசபக்ச குடும்ப அரசாட்சி இலங்கையில் இன்று முடிகூடிக்கொண்டுள்ளது.
பிரதமர் DM ஜெயரத்ன மகிந்தவிற்கு வாழ்த்துத் தெரிவிக்கையில் “இலங்கை மக்கள் எல்லோருக்கும் நிழலைக் கொடுக்க காத்திருக்கும் இராட்சத மரம்” என்று தெரிவித்தார். அவர் மிகச்சரியாகத்தான் வாழ்த்தியுள்ளார். இலங்கை மக்களை “என்றென்றைக்கும்” “இருட்டினுள்” வைத்திருக்கப் போகின்ற ஒரு “இராட்சத” “மரம்” இந்த மகிந்த என்பதனை சொல்லாமல் சொல்லியிருக்கின்றார் DM ஜெயரத்ன.
இத்தகைய பாரிய, மிகக்கூடுதலான பொருளாதார வளங்களை விழுங்கிய இந்தக் முடிசூட்டு விழா இலங்கையில் தேவைதானா? தேவைதான் என்கிறது அரசாங்கம். அனாவசியச் செலவுகள் என இந்த முடிசூட்டுவிழாவினை புறக்கணிக்கின்றது எதிர்க்கட்சி. நாட்டின் அரச நிதியின் 75% அதிகமான பணத்தை செலவிடக்கூடிய அதிகாரங்களை இராசபக்ச குடும்பம் கொண்டிருப்பதன் விளைவு இந்த மிகப்பிரமாண்ட முடிகூட்டு விழா நிகழ்வுகள்.
அதைவிடவும் கின்னஸ் சாதனைக்காக இன்று சமைக்கப்பட்ட 12 கிலோவிலும் அதிகாமான கிரிபத்(பால்சோறு) இவர்களின் பொறுப்பற்ற ஆடம்பரப் பிரியத்தனமான சர்வாதிக நடவடிக்கையின் உச்சக்கட்டம். 12 கிலோ வெள்ளை பச்சை அரிசி, 1,500 தேங்காய் மற்றும் 3 கிலோ கஜூ முந்திரிப்பருப்பு என்பன இந்த கின்னஸ் சாதனை கிரிபத்தினுள் இடப்பட்ட இலங்கை மக்களுக்கு சேரவேண்டிய உணவுப் பொருட்கள். பாராட்டுகளுக்கும், வரலாற்றில் தனது பெயரினை பதிவதற்கும் பிரிப்படும் ஒரு நபராக மகிந்த தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார். இந்த சாதனைக் கிரிபத்திற்கு செலவு செய்த தொகையினை நாளாந்தம் உணவிற்காக அல்லற்படும் வறிய இலங்கைமக்களுக்கா சிறிதாவது செலவு செய்திருப்பாராயின் பௌத்த தருமத்தில் குறிப்பிட்டபடி சிறந்த பௌத்தனாகவாவது ஏற்றுக் கொண்டிக்கலாம். ஆனால் தினமும் விரும்பியபடி செலவு செய்து விரும்பிய ஆகாரம் புசிக்கும் மேல்தட்டு கொழும்பு அரச ஆதரவாளர்களுக்கு இந்த கின்னஸ் கிரிபத்தினை ருசிக்கக் கொடுத்து ஒரு சாதாரண பிரஜையிலும் கீழ்ப்பட்டுள்ளார் இந்த “இராட்சத” “மரம்” மகிந்த இராசபக்க.
வன்னியில் உள்ளகஇடம்பெயர்ந்த ஒரு குடிமகனுக்கு 165 வருடங்களுக்கு பதிர்ந்து கொடுத்திருக்க கூடிய அரிசியினை இந்த கின்னஸ் சாதனைக் கிரிபத்திற்கு ஒருநாளில் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று பெரியவர்களையும் இரண்டு சிறுவர்களையும் கொண்ட ஒரு உள்ளகஇடம்பெயர்ந்த குடும்பத்திற்கு 41 வருடங்களுக்கு கொடுத்திருக்கக்கூடிய அளவான பொருட்களை ஒருநாளில் இன்று வீணாக தனது பெயர் கின்னஸில் பதியப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளாதாக தகவல் கணக்கு தருகின்றது Groundviews.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.[திருக்குறள் – 551]
பொருள் : குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.
இதனை நான் சொல்லவில்லை. வள்ளுவரே சொல்லிவைத்திருக்கின்றார். பார்ப்போம் மகிந்தவின் தான்தோன்றித்தனமான செயல்கள் எங்குவரை நீள்கின்றது என்று. அதன் பிறகு நாமல் வருவார். மிகுதியையும் ஆட்டிவைக்க. பாவப்பட்டது இலங்கை மக்கள். அதுதான் DM ஜெயரத்ன மறைமுகமாக இன்றே சொல்லிவிட்டார் இருண்ட காலத்திற்கு மக்களை இட்டுச்செல்லும் இராடசத மரம் மகிந்த.
Categories: அரசியல், இலங்கை, எனது பார்வையில், பார்வை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
//12 கிலோவிலும் அதிகாமான கிரிபத்(பால்சோறு)…., 12,000 கிலோ வெள்ளை பச்சை அரிசி, 1,500 தேங்காய் மற்றும் 300கிலோ கஜூ…/
தரவு முரண்படுகிரதே! 12000 கிலோவா?
காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்! வந்ததை நினைத்து அழுகின்றோம்… வருவதை நினைத்து சிரித்திடுவோம்…
@Abimaran
மாற்றம் செய்யப்பட்டது. தவறுதலாக பதியப்பட்டது. சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்.
சுபானு,இது மன்னர் பட்டாபிசேகம் ஆயிற்றே..!!!