மயிலிறகு கொண்டு இதயம் வருடும்உன் மெல்லிய பார்வைகள் அங்கே
மடையிலா புனல் தடைதிறக்கும் அன்பாய் உன் கனிசான பேச்சு அங்கே
மலரோடு கூடும் வண்டினம் புரியும் உன் செல்லக் குறும்புகள் அங்கே
மலைமீது தவழும் கரு மேகவிதானம் உன் கலைந்துள்ள கேசம் அங்கே
கரையாக நீயும் கரைதேடி நானும் கடல்தாண்டி இங்கே
கனக்கின்ற காதல் கழிகின்ற காலம் கடும் சுமையாக இங்கே
கடலோடு வானம் கலக்கின்ற உறவாய் தொடுவானத் தீண்டல் நினைவோடு இங்கே
கனக்கின்ற மனத்தில் கவிதை கேட்டால் மகிழ்வோடு கவிதை வரைபதெப்படி இங்கே.. ஆ??
என் கவிதை அங்கே நிரம்பா வாக்கியம் இங்கே…
Categories: கவிதை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
Leave a Reply