மயிலிறகு கொண்டு இதயம் வருடும்உன் மெல்லிய பார்வைகள் அங்கே மடையிலா புனல் தடைதிறக்கும் அன்பாய் உன் கனிசான பேச்சு அங்கே மலரோடு கூடும் வண்டினம் புரியும் உன் செல்லக் குறும்புகள் அங்கே மலைமீது தவழும் கரு மேகவிதானம் உன் கலைந்துள்ள கேசம் அங்கே கரையாக நீயும் கரைதேடி நானும் கடல்தாண்டி இங்கே கனக்கின்ற காதல் கழிகின்ற காலம் கடும் சுமையாக இங்கே கடலோடு வானம் கலக்கின்ற உறவாய் தொடுவானத் தீண்டல் நினைவோடு இங்கே கனக்கின்ற மனத்தில் கவிதை
“நீயே பயம் என்னும் இருளை அகற்றி நாளைய பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் சூரியனும் அந்த சந்திரனும்!” கொழும்பு முதல் அம்பாந்தோட்டை வரை எங்கும் காணப்படும் வீதியோர வாழ்த்துப் பதாதைகளில், அனேகமாக சிங்கள மொழியிலும் ஆங்காங்கே தமிழிலும் காணப்படும் வாசகம் அது. Picture-‘Sri Lanka President sworn-in ceremony for a second term’ courtesy Dailymirror.lk மகிந்த இராசபக்சவினது “அரச முடிசூட்டு விழா”(Royal Coronation) இன்று இலங்கை தலைநகர் கொழும்பில் மிகவும் ஆர்ப்பாட்டான முறையில் நடந்தேறியது. பல
சரியான நேரத்தில் சரியான கேள்விகளினால் தமக்கு தேவையானவற்றை வெல்லுகின்ற திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தொழில் தளங்களிலோ அல்லது அதற்கு வெளிக் களங்களிலோ ஏற்படுகின்ற தேவையற்ற விடயங்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவும், எமது எதிர்பார்ப்புக்களை வெற்றி கொண்டு நினைத்தவற்றை அடையவும் இந்தத் திறமை நிட்சயமாக அவசியம். அதாவது கேள்வி என்ன தந்திரத்தின் மூலம் நாம் எமது இலக்குகளை இலகுவாக அடைந்து விடலாம். எமது நண்பர்கள், அலுவலக நண்பர்கள், ஊழியர்கள், மேலும் அலுவலக மேலதிதாரிகளுடன் நாம் பல சமயங்களில்