“நாங்கள் முன்னர் குடியிருந்தோம். இப்போது இங்கே நாங்கள் மீளக்குடியமர எங்களுக்கு அரசகாணிகளை பகிர்ந்து தாருங்கள்..” யாழ்ப்பாணத்தில் புகையிரத நிலையக் கட்டடத்தில் வந்து தங்கியிருக்கும் 193 சிங்கள குடும்பங்கள் யாழ்ப்பாண அரச அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பியிருக்கும் மனுவின் சாரம்சம் இது.
எங்கள் சொந்த நிலத்தில் சொந்த வீட்டீல் எங்களை வாழவிடாது எல்லாவழிகளையும் மூடிவிட்டு முன்னர் எங்களிடம் வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கு எங்களுடைய வீடுகளையும் நிலத்தையும் கொடுக்கத் தயாராகின்றது சிங்கள அரசு.
1983 முன்னர் தாங்கள் தமிழ் மக்களோடு ஒன்றாக வாழ்ந்தகவும் தமிழர்களோடு திருமண உறவுகள் கூட செய்துள்ளதாகவும் கூறிக் கொண்டு வந்துள்ள இவர்கள் புதிதாக தயாரிக்கப்பட்ட 4ம் இலக்க அடையாள அட்டைகளை வரும் பத்திரிகையாளர்களுக்கு காட்டுகின்றார்கள். தங்களுக்கு வாழ அரச காணிகள் வழங்கி தங்களை சகயமாக குடியமர்த்தும் வரை தாங்கள் யாழ் புதையிரத நிலையக் கட்டடத்தை விட்டு விலகப்போவதில்லை எனவும் கூறுகின்றார்கள். அதற்கு ஏற்றாற் போல் தங்களுடைய முச்சக்கர வண்டிகள் உடுபுடவைகள் என்பன சகயம் வந்து முகாமி்ட்டுள்ளார்கள் இந்த சிங்கள குடும்பங்கள். மிகவும் ஏழ்மை நிலையில் அதாவது சராசரி வருமானத்திலும் மிகவும் குறைந்த வருமானம் வெற்று அனுராதபுரம் மற்றும் மிகிந்தலைப் பகுதிகளில் வசித்து வந்து இவர்கள் இப்படி யாழ்ப்பாண்த்தில் வந்து தங்கியிருப்பது ஏதோதான்தோன்றித் தனமாகத் தெரியவில்லை.
இதே யாழ் புதையிரத நிலையத்தில் சில காலங்களுக்கு முன்னர், இடம்பெயரந்து தற்காலிகமாக வசித்து வந்த தமிழ் மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டு இருந்தார் யாழ் அரச அதிபர். அந்த மக்கள் இராணுவக் கெடுபிடுகளால் தமது வாழ்நிலங்களை இழந்து, இருக்க வழியின்றி பாழடைந்து கிடந்த புதையிரத நிலையக் கட்டடத்தை சிறிது சிறிதாகப் புனரமைத்து அங்கே தமது வாழ்வினை தொடர்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஒதுக்கக்கூட சிறிய அளவான அரச நிலமோ அல்லது அதனை ஒதுக்குவதற்கு சிறிதளவான கருணை மனப்பாங்கோ அரசிடம் இருக்கவேயில்லை. அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தது. அதே இடத்தில் எந்தவிதமான உரிமையும் இல்லாது திடீர் என வந்து புகுந்துள்ள இந்த சிங்களர்கள் தங்களுக்கு அரச காணிகளைத் தாருங்கள் எனக்கேட்பது எந்த விதத்தில் ஏற்றுக் கொள்ள முடியும். அதனை விடவும் அவரகளுக்கு செவி சாய்க்க முயல்வது எந்த விதத்தில் சரியாகும். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களே தமது சொந்த நிலங்களில் வாழ வழியில்லாமல் தவித்துக்கொண்டு கூடாரங்களிலும் வாடகை நிலங்களிலும் பரிதவிக்கும் போது, இவர்கள் வந்து தமக்கு நிலம் தா எனக்கேட்பது சரியா? அதாவது வாழ அரச காணிகளைத் தா! இன்னும் அழுத்தமாகப் பார்த்தால் தமக்கு தமிழர் நிலம் தா! தரும் வரை தாங்கள் வெளியேறமாட்டோம்..
ஒட்டுமொத்தத்தில் தமிழன் தலையையும் மொட்டை அடித்து உச்சந் தலை மேல் இறுக ஆணியடிக்கப் பார்க்கின்றது சிங்கள அரசு. இத்தனை தெனாவெட்டாக வந்திறங்கியிருக்கின்ற சிங்கள ம(மா)க்களினைப் பார்த்தால் இந்த தெனாவெட்டுக்குப்பின்னால் இருப்பது சிங்கள அரசு என்பது தெள்ளத்தெளிவு.
“கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம்” என்றும் ஆணைக்குழு என்பது ஒரு கண்துடைப்பு ஆணைக்குழு. சிங்கள அரசு எழுபது வருடங்களாகக் கற்றுக் கொண்ட பாடம் ஏதுவுமே இல்லை.பழைய பேரினவாத குட்டையில் கிடந்து உருளும் மட்டமான அட்டைகள் சிங்களப் பேரினவாக அரசுகள். கல்வியறிவு வளரும் போது கொஞ்சமாவது மனிதப் பண்பும் உயரிய மனப்பாங்கும்(Attitude) சேர்ந்து வளரவேண்டும். இல்லாது போனால் அந்தக் கல்விக்கு அர்த்தமே இல்லை. சிங்கள மக்களின் மனதிலோ அல்லது ஆளுகின்ற அரசிடமோ எந்தவிதமான மனிதப் பண்பும் இல்லை உயரிய மனப்பாங்கும் இல்லை. 1983 கலவரத்தில் வீடுழந்த வாழ்விழந்த தமிழ் மக்களுக்கு இன்னமும் அதற்குரிய நிவாரணம் முழுமையாக கிடைக்கவில்லை. அப்படியிருக்க இந்த சிங்களவர்களை யாழ்பாணத்திற்கு உசுப்பேற்றி அனுப்பிவைத்திருக்கின்றது. இதுதான் சிங்கள அரசுகள் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்துகின்ற அழகா?
யாழ் கோட்டை முனியப்பர் கோவில் பகுதி மற்றும் துரையப்பா விளையாட்டு அரங்கு பகுதிகளில் நாளாந்தம் குவியல் குவியலாகக் குவிகின்ற சிங்கள மக்களின் மனிதக் கழிவுகளால் தொடங்கியிருக்கின்ற மழைகாலத்தில் பெரும் சுற்றாடல் பாதிப்புகள் வரப்போவதாக யாழ்ப்பாண மக்கள் அஞ்சிக்கொண்டிருக்க, இப்போது யாழ் புகையிரத நிலையத்தில் புதிதாக புதுப்பிரச்சனையை விதைக்கின்றது சிங்கள அரசு. எதிர்ப்பலைகளை பகிரங்கமாக வெளியிட்டு இதனை தவிர்கவேண்டிய அரசியல் கட்சிகள் மௌனம் சாதிப்பது மிகவும் வெட்கக் கேடாகவும் வருத்தம் தருவதாகவும் இருக்கின்றது. இந்த சிங்களக் குறியேற்றங்களுக்கு அப்பால் உள்ள சூட்சுமங்களை வெட்டக் கூடிய எந்த ஒரு நடவடிக்கைகளையும் தமிழர் தரப்பு அரசியல் கட்சிகள் செய்யாதிருப்பது, மிகவும் பாரதூரமான விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போவது திண்ணம். நாளைய தமிழர் குழந்தைகள் சிங்களவரிடம் வீடுகளுக்கு கையேந்தும் நிலையினை இன்றைய சிங்கள அரசுகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதனை தமிழர் தரப்பு அரசியல் கட்சிகள் தடுக்காது விட்டால்… இன்று நாம் நமது அரசியல் உரிமைக்காகப் போராடி ஒரு இரத்தாபிசேகம் நடத்தி முடித்திருப்பது போன்று … நாளை நமது சந்ததிகள் வீடுகளுக்காகவும் உணவுக்காகவும் இன்னும் ஓர் இரத்தாபிசேகத்தினை நடாத்தியே தீரும்…
1983 கலவரத்திற்கு முன்னர் கொழுப்பிலும் காலியிலும் “சொந்த” வீடுகளில் வசித்து வந்த பல தமிழர்களை காலி முகத்திடலில் கொண்டு வந்து சேர்த்து அரசிடம் “சொந்த வீடு கொழும்பில்” கேட்க இந்த தமிழ் கட்சிகள் ஆவன செய்தால்… சிங்களவருக்கு கொஞ்சமாவது தமது எதிர்ப்பையும் உரிமையையும் புரியவைக்க முடியும். அங்கே சிங்களவர் எடுக்கப்போகின்ற நடவடிக்கை யாழ் வந்திறங்கிய சிங்களவர் மேலும் பாயும் என்பதை யதார்த்தமாக எடுத்துரைக்கலாம். தந்திரத்தினை தந்திரத்தால் தான் முறியடிக்க வேண்டும்!
Categories: அரசியல், இலங்கை, எனது பார்வையில், சிங்களம்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
Leave a Reply