“Welcome to life !” அறுபத்து ஒன்பது நாட்களாக நிலத்தடியில் 2000 அடி ஆழத்தில் சிக்குண்டிருந்த 33 சிலி சுரங்க தொழிலாளர்களினை எந்தவித பாதிப்பும் இன்று நேற்று மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள். 15ஆவது ஆளாக பூமிக்கு மேல் வந்த Victor Segvia யினைப் பார்த்து சந்தோசத்தில் சிலியின் ஜனாதிபதி Sebastian Pinera ஒரே வார்த்தையில் வாழ்த்தி வரவேற்ற வசனம் தான் “Welcome to life!”.
மனிதாபிமானா மீட்பு நடவடிக்கை என்றால் என்ன என்ற அர்த்தத்தை உலகிற்கு அழகாக உணர்த்தியுள்ளார்கள் சிலி மக்களும் சிலி மீட்புக்குழுவும் சிலி அரசாங்கமும். மனித உயிரின் மகத்துவத்தை உலகிற்கு காட்டியுள்ளார்கள். மீட்டு நடவடிக்கையின் போது மீட்புக் குழுக்களுடன் உடனிருந்து உற்சாகப்படுத்திய சிலியின் ஜனாதிபதி Sebastian Pineraயினைப் பார்க்கும் போது மனதில் ஏதோ ஒரு ஏக்கம். என்ன ஒரு தலைவர் Sebastian Pinera. முதலாவதாக மீட்கப்பட்டு வெளிவந்த Florencio Avalos இனை தனது மகன் மீண்டது போல் உற்சாகமாக கட்டித் தழுவி ஆறுதல்படுத்தி ஆனந்தப்படும் தலைவனை பெற அந்த சிலி மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சில கணங்கள் நெஞ்சம் கனத்து விடுகின்றது.
மீட்புத் தொடங்கும் முன்னர் ஸ்பெயினில் இருந்த போப் பெனடிக் XVI, “இறைவனின் கருணையை தொடர்ந்தும் நம்பிக் கொண்டிருப்போம்” என்று பிராத்தித்தார். ஆனால் எந்த விதமான சேதாரமும் இல்லாமல் எல்லோரையும் பாதுகாப்பாக மீட்டேடுத்த இந்த முழுமையான மனித மீட்புக்கு உறுதுணையாக இருந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் தான் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த மீட்புக்காக மதிப்பிடப்பட்ட மொத்தத் தொகை 22 மில்லியன் டொலரிலும் அதிகம். இந்தப் பெருந்தொகையிலும் 33 பேருடைய உயிர்தான் முக்கியம் என்று அரசாங்கம் துணிந்து இந்த மீட்பை முன்னேடுத்திருந்தது.
முதலாவதாக மீட்டெடுக்கப்பட்ட Florencio Avalos பூமிக்கு வெளியே வந்ததும் தனது ஏழு வயது மகனை ஆரத்தழுவும் போதும், மனைவியினை இறுக்கி ஆறுதல்படுத்தும் போதும் வார்த்தைகளால் சொல்ல முடியாது உணர்வுகள் பதிபப்படுகின்றது. அதன் பின்னர் தான் இந்த மீட்புக்கு உறுதுணை வழங்கிய ஜனாதிபதியினைத் தழுவி நன்றி சொல்கின்றார். ஏக்கம் கவலை சோகம் எல்லாம் பறந்து மகிழ்ச்சியும் சந்தோசமும் மட்டும் அழகாக பதியப்பட்டுள்ளது அங்கே.
மிகவும் கவனமாகவும் நேர்த்தியாவும் ஒழுங்கமைக்கப்பட்டு தொடங்கப்பட்டது இந்த மீட்பு நடவடிக்கை. பூமியில் 28-இன்ச் விட்டம் கொண்ட ஒரு நீண்ட துளை ஏற்படுத்தப்பட்டு அதனூடாகத்தான் 2000 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுரங்க பணியாளர்களை மீட்டேடுத்தார்கள். இடையில் தடைப்பட்ட பெரிய பாறைகளைக் குடைந்து அதன் பின்னர் தொடர்பை இழந்திருந்த சுரங்கத்திற்குள் இந்தத் துளையினூடாக தொடர்பை முதலில் ஏற்படுத்தினார்கள். பின்னர் Phoenix என்ற 13 அடி உயரங் கொண்ட ஒரு உருளை வடிவ ஏற்றியினை உள் இறக்கி அதன் ஊடாக அதனுள் மீட்கப்பட்டவர்களை ஒவ்வொருவராக ஏற்றி மேல் அனுப்பி எடுத்தார்கள். Phoenix இன் சுவர்களில் சிலியின் தேசியக் கொடியின் வெள்ளை சிவப்பு நீல நிற வண்ணங்கள் பூசப்பட்டு இருந்தன. அத்தோடு ஒரு கதவும் சில சக்கரங்களும் Phoenixயின் பொருத்தப்பட்டிருந்தது. 2000 அடி ஆழத்தில் இருந்து அவர்கள் மேலே வரும்போது ஏற்படக்கூடிய முறுக்கல் சுழற்றி இயக்கத்தினால் தலை சுற்றல் மற்றும் மயக்கத்தினைத் தவிர்பதற்கு NASAவினால் வழங்கப்பட்ட மிகக்கூடிய கலோரிப் பெறுமானம் கொண்ட திரவத் தன்மையான மருந்து ஒன்று அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அத்தோடு ஒக்சியன் முகக்கவசமும் கண்களுக்கு கறுப்புக் கண்ணாடியும் அணிவிக்கப்பட்டு அதன் பின்னரே அவர்கள் மேலே கொண்டு வரப்பட்டார்கள். சிறந்த மனோதத்துவ நிபுணர்கள், பொறியியலாளர்கள், இராணுவம் மற்றும் மருந்துவர்கள் என 300இற்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த 33 உயிர்களைக் காக்கும் மகத்தான மீட்பு நடவடிக்கையில் பங்கேற்றிருந்தார்கள். பரக் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில் உலகிற்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணம் எனக்குறிப்பிட்டு இருந்தார். அதைவிடவும் முழு சிலி மக்களுமே அந்த 33 சுரங்கப் பணியாளர்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெளிவர வேண்டும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். மீட்பு நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த பாடசாலைகள் முற்றாக விடுமுறைவிட்டிருந்தார்கள் என்றால் எந்த அளவிற்கு சிலி மக்கள் இந்த மீட்ப்பை கருத்தாகக் கொண்டிருந்தார்கள் என விளங்கிக் கொள்ளலாம்.
இதுவரை பதியப்படாத வரலாறு. நிலத்தடியில் அதுவும் 2041 அடி ஆழத்தில் சிக்குண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களை 69 நாட்களின் பின்னர் மீட்பது. மனித மீட்பு என்றால் என்ன என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது சிலி.
எந்த உயிருக்கும் சேதாரம் இல்லால் நடைபெற்ற இந்த மீட்பு நிகழ்வினை பார்க்கும் போது மனித மீட்பு என்னும் பேரில் இலங்கையில் நடாத்தப்பட்ட கொலை வெறித் தாண்டவம் கண்முன் வந்து நிற்கின்றது. சிலியில் சுரங்கத்தில் சிக்குண்டவர் போல இங்கே எத்தனை எத்தனை ஆயிரம் மக்கள் சிக்குண்டு இருந்தார்கள் வன்னிப் போர் அரங்குக்குள். அவர்களை உயிர்களாக மதிக்கவில்லையா? நமது நாட்டில் உயிருக்கு மதிப்பே இல்லையா.. இல்லை நம் நாட்டவருக்கு மனிதப் பண்பே இல்லையா? ஒரு உயிர்கூட போகக்கூடாது என அவர்கள் நினைத்து காப்பாற்றினார்கள். ஆனால் எமது நாட்டில் தயவின்றி கொன்றுகுவித்தார்கள். ஆனால் அதற்குப் பெயர்வைத்தார்கள் மனிதாபிமான மீட்டு நடவடிக்கை என்று. மனிதாபிமானம் என்னால் விளக்கம் தெரியவில்லையா அவர்களுக்கு? இல்லை மீட்பு என்றால் என்னவென்று தெரியவில்லையா?. அந்த சிலிமக்களுக்குதான் கருணையும் இரக்ககுணமும் இருக்கின்றதா.. எமது நாட்டவர்கள் என்ன மிருகங்களாகியா விட்டார்கள்? மிருகங்களோடு ஒப்பிட்டால் மிருகங்கள் என்னைக் கோபிக்கப் போகின்றன. மிருகங்களுக்குக்கூட கருணையும் இரக்கமும் தாராளமாக இருக்கின்றது. இந்த காணொளித் தொடுப்பை சற்றுப் பாருங்கள்.
கொமன்வெல்த் விளையாட்டுப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளவர் புலியினத்தை எண்ணி வெட்கித் தலைகுனிய வேண்டும்.
Categories: பாதித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
Leave a Reply