வரலாறு கற்றுத் தந்த பாடங்களில் இருந்து மனிதன் எதையாவது கற்றுக் கொள்கின்றானா என்றால் இல்லை என்றே பதில் கூறவேண்டும். எப்போதும் வரலாறு சுழன்று சுழன்ற மனித வாழ்வியலில் மீண்டு வந்துகொண்டே இருக்கும். அது ஒரு வட்டப் பாதை. ஆனால் அந்த வட்டப்பாதையில் இருந்த மனிதன் கற்றுக்கொள்வது என்பது ஒன்றுமே இல்லை.
18 ஆவது அரசியலமைப்பு திருத்தம்(18th Amendment) இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. கொஞ்சம் நெஞ்சமாக இருக்கும் ஜனநாயகத்திற்கும் ஒட்டு மொத்தமாக சாவுமணி அடித்து பள்ளத்தாக்கில் ஆழக்குழிதோண்டிப் புதைக்கப்படப்போகின்றது இந்த 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துடன். ஒட்டுமொத்த முட்டாள்தனத்தின் அடிப்டையில் எழுதப்படுகின்றது 18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்த அரசியலமைப்பு திருத்தம். நாட்டின் எதிர்காலத்தின் மீது எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் தனி மனித அதிகார ஆதிக்கத்திற்காக எழுதப்படுகின்றது இந்த அரசியல் திருத்தம். மன்னிக்கவும் இது அரசியல் திருத்தமே இல்லை! இது ஏற்கனவே இருக்கின்ற நிறைவேற்று அதிகாரத்திற்கும் (Executive Presidency Plus) மேலாக இன்னும் அதிகாரத்தினை ஒருவருக்கு தாரைவார்த்துக் கொடுத்து நாட்டினை பின்நோக்கி மன்னராட்சிக் காலத்திற்கு இட்டுச் செல்வதற்கான முதற்படி. இலங்கையின் அரசியில்வாதிகள் நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து மன்னருக்கு மீண்டும் அதிகாரங்களை தாரை வார்த்துக் கொடுக்க இருக்கின்றார்கள். ஆனால் ஒன்று ஜனநாயகத்தின் அடிப்படை நாதமான தேர்கல்கள் நடைபெறும். என்ன ஒரு விடயம் தேர்தல் ஆணையாளர் மன்னரால் நியமிக்கப்பட்டவராக இருப்பார். எனவே நடைபெறும் தேர்கல்களும் வெறும் கண்துடைப்பு தேர்கல்களாகவே இருக்கும். ஒருவரே எப்போதும் தேர்தலில் வெற்றி பெறுவது தவிர்க்க இயலாது.
தற்போது நடைமுறையில் உள்ள 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் இலங்கை சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதிக்கு அரசு இயந்திரத்தினை ஒட்டுமொத்தமாக ஆட்டிவிக்கக்கூடிய நிறைவேற்று அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவரத்தனால் எழுதப்பட்ட அரசியல்சாசனத்தின் (1978 2nd Republican Constitution) மூலம் இலங்கை அரசியல் களமும் மக்களும் சந்தித்த பாதிப்புக்கள் ஏராளம். நிறைவேற்று அதிகாரம் மூலம் அடிக்கடி கலைக்கப்படும் நாடாளுமன்றம். அவசியமான சமங்களில் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படுவது. எதிர்கட்சியை அழிக்க எல்லை மீறிய பொலீஸ் அதிகாரங்களின் பயன்பாடு. இவ்வாறு பல பல அவசியமற்ற அதிகாரத் தலையீடுகள் இந்த நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் நடைபெற்றிருக்கின்றன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஜே.ஆர் ஜெயவரத்தனாவின் அரசாங்கத்திற்கு 2/3 பெரும்பான்மை பலத்தை கொடுத்ததன் விளைவுதான் இந்த நிறைவேற்று அதிகாரம் என்னும் கட்டுமீறிய செயற்பாட்டுக்கு காரணமாக அமைந்தது. அதன் விளைவுகளைப் பார்த்தவர்கள் அதாவது பெரும்பான்மைப் பலம் வந்தால் என்ன விபரீதம் ஏற்படும் என்பனை உணர்ந்தவர்கள் ஒருபோதும் இன்னும் ஒருவருக்கு அந்த பெரும்பான்மை பலத்தை கொடுக்க மாட்டார்கள். ஆனால் மீண்டும் மகிந்த அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட 2/3 பாராளுமன்ற பெரும்பான்மை இன்று இலங்கையை 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது.
அப்படி என்னதான் இந்த 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் இருக்கின்றது என்று பார்ததால். இது ஒரு பொறுப்பற்ற எதிர்கால நலன்கருதாத அரசியலமைப்பு திருத்தம். ஒரு கட்சி ஜனநாயக நாடு என்றும் பதத்தில் இனிமேல் இலங்கையை கொண்டுவருவதற்கான முதலாவது அடித்தளம். பெயருக்க இருக்கும் ஜனநாயம். ஆனால் எப்போதுமே ஆட்சியமைக்கப் போவது ஒரே ஒரு கட்சி. இன்னும் சொல்லப் போனால் ஒரு குடும்ப அரசியல் இனிமேல் இலங்கையில் நடைபெறும். நாங்கள் மீண்டும் மன்னராட்சிக் காலத்திற்கு மாற்றப்படப் போகின்றோம்.
இந்த 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி ஒருவர் எத்தனை தடவை வேண்டுமென்றாலும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும். முன்னர் இருந்த இரண்டு தடவை என்ற பதம் நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதியின் இரண்டாம் பதவிக்காலத்தில் நான்கு வருடங்களின் பூர்த்தியின் பின்னர்கூட ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதி தேர்வுக்கு அழைப்பு விடுக்க முடியும். அதைவிடவும் தேர்தல் திணைக்களம் பொலீஸ் திணைக்களம் என்பன ஜனாதிபதியின் கைகளிலும் கொடுக்கப்படப் போகின்றன.
ஏற்கனவே காற்றுப் பிடுங்கிய பலூன் போல இருக்கும் எதிர்கட்சியால் எதுவும் செய்ய இயலாது. தற்போதய ஜனாதிபதி அதி மேதகு மகிந்த இராஜபக்க 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பின்னர் பிரதமராக பதவி ஏற்பார். அதன் பின்னர் தன்னால் முடியும் மட்டும் அதாவது அடுத்து 12 அல்லது 18 வருடங்களுக்கு அல்லது நாமல் இராஜபக்க முடிக்கு வரும்வரை அவர்தான் பிரதமர். யாரும் அசைக்கவோ அல்லது ஆட்டிப் பார்க்கவோ முடியாது. எதிர்பவர்களுக்கு எதிராக சட்டம் பாயும். முன்னால் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு நடந்து கொண்டிருக்கும் கதை இதற்கு சின்ன உதாரணம். மகிந்த இராஜபக்கவின் சிரித்த முகத்தின் பின்னால் நடந்துகொண்டிருக்கும் ஆயுட்கால அரசாட்சி கொள்கை இது.
மகிந்த இராஜபக்க எதிர்காலத்தைப் பற்றி சற்றும் சிந்திக்காது இந்த திருத்தத்தினை கொண்டு வந்துள்ளார். சற்று சிந்தியுங்கள் பின்னாட்களில் வரப்போகின்றர்களுக்கு இந்த அதிகாரம் கைகளில் கிடைத்தால் சர்வாதிகாரம் நாட்டில் நடாத்தப்படும். அதாவாது ஜனநாயம் என்றும் போர்வையில் நடைபெறப்போகின்ற சர்வாதிகாரம். சர்வாதிகார ஜனநாயம் என்றும் ஒரு புது சட்டத்தை வரையத் தொடங்கியுள்ளார்கள் இந்த 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம். மகிந்த தானும் தனது மகன் நாமலும் தான் சிறந்த தலைவர்கள் என்று நினைத்திருக்கக்கூடும். மக்களிடம் இருந்து நாட்டின் பிரதமரை தெரிவுசெய்வதற்கான உரிமையினை மிகவும் இலகுவாபப் பறித்தெடுத்துள்ளார். அவருக்கு அதனை பறிப்பதற்கான உரிமையினை 2/3 பெரும்பான்மையுடன் கொடுத்தவர்களே மக்கள்தானே.
சரி ஒருவேளை மகிந்தவ சிறந்த தலைவராகவே இருக்கட்டும். ஆனால் அதன் பிறகு வருபவர்கள். அவர்களின் பிறகு வருபவர்கள்? எவ்வாறு பின்னாளில் வருபவர்களை இப்பொழுதே நம்பி இந்த புது அரசியலமை மேற்கொள்ள எத்தணித்தார். மாறாக இவ்வாறான எதிர்கால ஆபத்துக்களில் இருந்து சட்ட திருத்தங்களில் இருந்து இலங்கை ஜனநாயகத்தை காப்பற்ற ஒரு அரசியலமைப்பு திருத்ததை மேற்கொண்டிருக்கலாமே. நிலையான அமைதியையும் உறுதியான அரசியலமைப்பு சாசனத்தையும் தளம்பாத பொருளாதாரத்தையும் ஏற்படுத்தத் தக்கதான உறுதியான அரசியலமைபினை வரைந்திருக்கலாமே.
முழுக்க முழுக்க இராஜபக்க (அரச)வம்சம் ஒன்றை உருவாக்குவதை அவருடைய எண்ணமென்பது தெளிவாகின்றது. மரணம் ஒன்றுதான் ஆட்சியில் இருந்து விலகுவதற்கான முடிப்பு என்னும் கால வரையறையற்ற நீட்சி இந்த 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பெறப்போகின்றார்கள் இராஜபாக்கள்.
அரசியலமைப்பு மாற்றம் என்பது அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு வரையப்படும் குறுகிய ஒழுங்கைகள் இல்லை. நுற்றாண்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டிய தெளிவான அகலப்பாதை பாதையாக இருக்கவேண்டும். மகிந்த வரலாற்றையும் தெறிவாக உணராது, முன்னர் நடந்த பாரதூரவிடயங்ளையும் கணக்கெடுக்காது பயணிக்கின்றார் தலைவருக்குரிய நெறியினை மறந்து.
மீண்டும் பழைய வரலாறு எம்முன்னே தோன்றுவதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. கண்மூடி வாய் பொத்தி எனக்கென்ன என்ன என்று இருக்காது இனிமேலாவது எமது கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடங்ளை தெளிவாகப் படிப்போம்!
Download Full Text of Proposed 18th Amendment To The Sri Lankan Constitution
Categories: அரசியல், இலங்கை, எனது பார்வையில், பார்வை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
தமிழ் மக்கள் தமிழ் மக்கள் என்று TVயில் கத்தி பிறகு மேடையில் கத்தி நாடாளுமன்றத்துக்கு போன சிறீரங்கா கூடி ஆதரவா வாக்களிக்கேக்க மகிந்த இந்த கூத்து செய்யுறதெல்லாம் எனக்கு பெரிய விடயமாக படவில்லை. கேவலங்கெட்ட அரசியல்வாதிகளும் அரசியலும். வாய்சவடால் பேர்வழிகள் இவர்கள்.
கார்த்தி சிறீரங்காவினைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிறீரங்கா மகிந்தவின் மிகவும் நெருங்கிய நண்பர். அவர் ஐ.தே.க தேர்தலில் நின்றதே பின்னாட்களில் இம்மாதிரியான சூழ்நிலைகள் வரும்போது ஆதரவு தருவதற்காகத் தான்.. மகிந்தவிற்கு இன்று மேலதிகமாக ஐ.தே.க இருந்து கிடைத்திருக்கின்றார். சிறீரங்கா மகிந்தவின் கட்சியுடனேயே போட்டி போட்டிருந்தால் ஐ.தே.க யின் வாக்குவங்கியை வென்றிருக்க முடியாது.. இதெல்லாம் அரசியலப்பா கார்த்தி..
// இந்த 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி பிரதமர் பதவி(முதல் மந்திரி) அதிகார சக்தியாகவும் ஜனாதிபதி பதவிஒரு பொம்மைப் பதவியாகவும் மாற்றப்படப் போகின்றது. இதில் முக்கியம் என்னவென்றால். ஒருவர் எத்தனை தடவை வேண்டுமென்றாலும் பிரதமராக மீண்டும் மீண்டும் பதவி வகிக்க முடியும். //
இது என்ன? விளங்கவில்லை….
இல்லை இல்லை. ரங்காவைப்பற்றி நண்பன் ரம்மி சொல்ல கேள்விப்பட்டிருந்தேன். அவன் அப்போதே இதை எதிர்வு கூறியிருந்தான். மகிந்தவின் மகனுடன் ரங்கா கொந்தாயாக இருந்த படமும் இணையங்களில் வெளியாகியிருந்தது என நினைக்கிறேன்.???
எனினும் நான் ரங்காவில் நம்பிக்கை கொண்டிருந்தேன். துரோகம் செய்துவிட்டார்.
என்.கே.அஷோக்பரன் ‘Powers and functions of the Cabinet of Ministers and of the Commission’. என்னும் பகுதியில் குழம்பி விட்டேன். தவறினைச் சுட்டிக்காட்டியதற்கும் திருத்தங்களை மேற்கொள்ள உதவியதற்கும் நன்றிகள். 🙂
இல்லை இல்லை. ரங்காவைப்பற்றி நண்பன் ரம்மி சொல்ல கேள்விப்பட்டிருந்தேன். அவன் அப்போதே இதை எதிர்வு கூறியிருந்தான். மகிந்தவின் மகனுடன் ரங்கா கொந்தாயாக இருந்த படமும் இணையங்களில் வெளியாகியிருந்தது என நினைக்கிறேன்.??? எனினும் நான் ரங்காவில் நம்பிக்கை கொண்டிருந்தேன். துரோகம் செய்துவிட்டார்.