மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே.. என் நீண்ட இரவுகளிலும் நெடுந்தூரப் பயணங்களிலும் பலசமயங்களில் என் துணையாக வந்திருந்த சுவர்ணலதா இன்று இல்லை என்னும் போது ஏதோ மனதினுள் கனக்கின்ற உணர்வு. என் செவிகளுக்குள் ஊடுருவி இதயம் வரை நுழைந்து என் உணர்வுகளை இனிமையாக கட்டிப் போட்ட மானசீகக் குரலுக்கு சொந்தக்காரி சுவர்ணலதா. போதும் போதும் என செவிகள் சொன்னாலும் இன்னும் வேண்டும் உன்குரலில் மயங்கிடும் இன்பம் என
வரலாறு கற்றுத் தந்த பாடங்களில் இருந்து மனிதன் எதையாவது கற்றுக் கொள்கின்றானா என்றால் இல்லை என்றே பதில் கூறவேண்டும். எப்போதும் வரலாறு சுழன்று சுழன்ற மனித வாழ்வியலில் மீண்டு வந்துகொண்டே இருக்கும். அது ஒரு வட்டப் பாதை. ஆனால் அந்த வட்டப்பாதையில் இருந்த மனிதன் கற்றுக்கொள்வது என்பது ஒன்றுமே இல்லை. 18 ஆவது அரசியலமைப்பு திருத்தம்(18th Amendment) இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. கொஞ்சம் நெஞ்சமாக இருக்கும் ஜனநாயகத்திற்கும் ஒட்டு மொத்தமாக சாவுமணி அடித்து பள்ளத்தாக்கில்
என்ன சொல்லுகிறீர்கள் மந்திரியாரே ? ஆம் மகாராணி! நமது மன்னர் போரிலே வெற்றி பெற்று வேங்கிநாட்டு மன்னனை கொன்று படையினரை புறமுதுகு காட்டி ஓட விட்டு விட்டார். பரிவாரங்களுடன் மன்னர் அரண்மனைக்கு வந்துகொண்டிருக்கின்றார். என் மனம் இப்போதுதான் அமைதியுறுகின்றது மந்திரியாரே. மிக்க நன்றி! என் மனமுகந்த தகவலை விளம்பியதற்கு. வாருங்கள் சேடிப் பெண்களே மன்னனை அரண்மனை வாசலிலேயே வைத்து ஆரார்த்தி எடுத்து வரவேற்போம். என்று அந்தப்புரத்து சேடிப்பெண்கள் சதிதம் அரண்மனை வாசலுக்கு விரைந்தாள் சோழ அரசின் மகாராணி