முழுமதி உன் முகமதில்
வளர்பிறையோ உன் நுதலதில்
இளம்பிறை மீதொரு முழுமதி
நின் தளிர்விரல் தொட்டிட்ட
சாந்து பொட்டதோ..
குளிர் மலர்ச்சோலை மஞ்சம்
நின்நெஞ்சம் தனில்லாடும் என்னிதயம்
முத்துச்சரம் நீ என்தாரணி உன்
மதங்கம் மீட்டும் விழியிரண்டில்
என் காதல்மீட்ட வந்தேனடி
நீயென் மதுரம் பகராய் மனதென் நுகராய்
கண்டால் நீ மாயமாய்
கண்ணில் நிறதீப சில்மிசம்
காணா கமலமலரின் மணமாய்
நீ நாளை வருமோ..
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
//இளம்பிறை மீதொரு முழுமதி
நின் தளிர்விரல் தொட்டிட்ட
சாந்து பொட்டதோ..
அழகிய வரிகள் சுபானு …..!
அழகிய வரிகள்
🙂 மிக்க நன்றி Gayathiry & archchana.. 🙂
//குளிர் மலர்ச்சோலை மஞ்சம்
நின்நெஞ்சம் தனில்லாடும் என்னிதயம்
காணா கமலமலரின் மணமாய்
நீ நாளை வருமோ..//
கவிதை வியக்கிறது நீ வரிகளை கையாளும் விதத்தைக் கண்டு 🙂 அருமை சுபானு தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள் கோடி தமிழுக்கு
//உன்
மதங்கம் மீட்டும் விழியிரண்டில்
என் காதல்மீட்ட வந்தேனடி
காணா கமலமலரின் மணமாய்
நீ நாளை வருமோ..//
சிறந்த கற்பனையும், ஒப்பீடும் கலந்த அருமையான வரிகள்
தமிழுக்கு தலை வணங்குகின்றேன்
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்