Month: April 2010
முழுமதி உன் முகமதில் வளர்பிறையோ உன் நுதலதில் இளம்பிறை மீதொரு முழுமதி நின் தளிர்விரல் தொட்டிட்ட சாந்து பொட்டதோ.. குளிர் மலர்ச்சோலை மஞ்சம் நின்நெஞ்சம் தனில்லாடும் என்னிதயம் முத்துச்சரம் நீ என்தாரணி உன் மதங்கம் மீட்டும் விழியிரண்டில் என் காதல்மீட்ட வந்தேனடி நீயென் மதுரம் பகராய் மனதென் நுகராய் கண்டால் நீ மாயமாய் கண்ணில் நிறதீப சில்மிசம் காணா கமலமலரின் மணமாய் நீ நாளை வருமோ..