கண்கள் நான்கும் மலராகும்
காதல் அதில் தேனாகும்
பார்வை வண்டுகள் தேன்தேடும்
அதில் இன்பம் எனும்விதை கருவாகும்
மொனம் கூட மொழியாகும்
பிறர் புரியா பார்வை அதில் நயமாகும்
மொன மொழிகள் தினம் வளரும்
காதலலங்காரம் அதன் பொழிப்பாகும்
வான் மேகம் கூட தூதாகும்
கடிதம்தனில் அவை காதல் முத்திரைகுத்தும்
அடை மழை தீண்டல் புதிதாகும்
சாரல்தனில் அவை புதுப்புலன்தேடும்
வாடி போடி கூட இனிதாகும்
பரஸ்பரம் என்பது இங்கு உறவாகும்
காரணமில்லாக் கோபம் தினதாகும்
அதில் கூட பரிவென்பது முன்னிற்கும்
சிவக்கும் முத்தம் தினப்பரிசாகும்
தித்திப்பென்பது அதிலாடும் முத்தாகும்
சீண்டல் தனில் மனம் நாடும்
அவை தாண்டும் போது சிணுங்கல் புதுமைபடிக்கும்
விரல்கள் ஐநான்கும் காமன் மலரம்பாகும்
காதல் தேவன் சூட மலர் பொழியும்
மெய்கள் நிலைமறந்து தமை நாணும்
அதில்பாயும் வெப்பம் காமத்தீ மூட்டும்
சிந்தும் நாணம் தடை போடும்
மிஞ்சும் கெஞ்சல் அத்தடை உடைக்கும்
அஞ்சும் பதுமை தாழ் மூடும்
விஞ்சும் துணிவு அத்தாழ் திறப்பாகும்
காலம் மூன்றும் இனிதாகும்
அவை பாடும் கானம் புது ஸ்வரமாகும்
ஸ்வரங்கள் தோறும் ஒரே தாளம் இசையாகும்
எங்கும் காதல் காதல் காதல் எனும் தாளம் ஆர்ப்பரிக்கும்
Categories: கவிதை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
அள்ளிப் பருகிய தனிமையின் தாகத்தை
அணைத்து தீர்க்கும் அழகின் சிற்பம் காதல்
உன் இடைவிடாத பார்வைத் தீண்டலால்
குறையாமல் பெருக்கெடுத்து வழியுது காதல்
உன் அணைப்புக்குள் மெழுகாய் மெதுவாய்
தினம் தினம் உருகி ஒழுகுது ஆவி
நம் நான்கு கண்களும்
அவசரமாய் அவை தம் மொழிகளில்
பேசிக் கொள்கின்றன வாயொட்டாமல்
தன் இருதயப்பசிக்கு ஒட்சிசனை நிரப்பி
நகர்ந்து கொண்டிருந்த காற்று – உனை கண்ட பின்
சுவாசிப்பதை நிறுத்திவிட்டு உன் அழகை பருகத் துடிக்கின்றது
என்னவென்று சொல்ல உன் கற்பனையின் அழகை மகிழ்ந்தேன் ரசித்தேன்
வாழ்த்துக்கள்
/”கண்கள் நான்கும் மலராகும்
காதல் அதில் தேனாகும்
பார்வை வண்டுகள் தேன்தேடும்
அதில் இன்பம் எனும்விதை கருவாகும்”/
அருமையான வரிகள்.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் 🙂
நன்றி ஆரபி.. நீண்ட நாட்களாக உங்களின் பதிவில் எதையும் காணோமே.. என்ன நடந்தது..
ம்….கலக்கல்…. /// கண்கள் நான்கும் மலராகும்
காதல் அதில் தேனாகும்
பார்வை வண்டுகள் தேன்தேடும்
அதில் இன்பம் எனும்விதை கருவாகும்///// என்ன அனுபவத்திலிருந்தா
மொனம் கூட மொழியாகும்
பிறர் புரியா பார்வை அதில் நயமாகும்
மொன மொழிகள் தினம் வளரும்
காதலலங்காரம் அதன் பொழிப்பாகும்..
nalla kavithai nanbare.. valthukkal .
சிந்தும் நாணம் தடை போடும்
மிஞ்சும் கெஞ்சல் அத்தடை உடைக்கும்
அஞ்சும் பதுமை தாழ் மூடும்
விஞ்சும் துணிவு அத்தாழ் திறப்பாகும்
supper
அள்ளிப் பருகிய தண்ணீர்!!!(முத்தம் )
இன்று என் கண்களில் கண்ணீராக,,,!!
சிந்தும் ஒவ்வொரு துழிகளிலும் உனது நினைவுகள் கரைகின்றது,,,
இருந்தும்
வற்றாத ஜீவ நதி நம் காதல்…..