காதலை தேடிக்கிட்டு போக முடியாது…
அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்…
நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்…
எப்பவுமே கூடவே இருக்கணும்…
அதான் ட்ரூ லவ்…
அது எனக்கு நடந்தது!…
விண்ணைத்தாண்டி வருவாயா – மின்னலேயின் பின்னர் முழுக்க முழுக்க காதலை மட்டும் வைத்து கௌத்தம் மேனனால் செதுக்கப்பட்ட அழகான காதல் சிற்பம் இந்த விண்ணைத் தாண்டி வருவாயா. எந்தவிதமான அடதடி வீர வசனங்கள் இல்லாமல் யதார்தமாக காதலை மட்டும் நம்பி கதையினை மெல்ல அழகாக நேர்த்தியாக பின்னியிருக்கின்றார் கௌத்தம் மேனன். இயல்பாக ஒட்டிய ஊடல், கூடல் காட்சிகள். ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமானின் இசை இன்னும் மனதில் ஆழமாக அந்தக் காதலை இறக்கிவிட்டுச் சென்றிருக்கின்றது.
பொதுவாக நான் திரைப்பட விமர்சனங்கள் வாசிப்பதும், திரைப்பட விமர்சனம் எழுதுவதும் மிக மிக குறைவு. எனது பார்வையில் எந்தவிதமான நிறப் பிரிகையினையும் வேறுயாரும் ஏற்படுத்திவிடக்கூடாது என்கின்ற ஒரு பாதுகாப்புத் தன்மைதான். இந்தப் படம் – படம் என்பது பொருத்தமற்றது போலத்தான் தோன்றுகின்றது. கார்த்தி(சிம்பு) ஜெஸ்ஸி (த்ரிசா) இருவரது காதலையும் கௌத்தம் மேனன் தனது இயக்குனர் பார்வை என்னும் கமராவினால் அழகாகப் பதிவெடுத்துத் தந்திருக்கின்றார். அந்த அளவிற்கு யதார்த்தம் அங்கே நிறைந்திருக்கின்றது. அதைவிடவும் கார்த்தியினது கதாபாத்திரம் எனக்கென்னவோ கௌத்தம் மேனன் தனது பாத்திரத்தை பதிந்துள்ளதாகவே தோன்றுகின்றது. பல குறியீட்டு தடையங்களை படம் முழுவதும் அதற்கு சான்றாக விட்டுச்சென்றுள்ளார்.
இயல்பாக முதல் பார்வையில் தன்னை அசத்திய ஜெஸ்ஸியிடம் வாய்தவறி பிசகாக காதலை சொல்லிவிடும் கார்த்தி அடுத்த கணத்தில் வருத்தப்படுவது யதார்த்தம். பின்னர் ஜெஸ்ஸியினை கேரளாவில் சந்திக்கும் போது நிதானமா அழகாக காதலை சொல்வதும் யதார்ததம். ஆண்கள் திடீர் எனபோட்டு உடைத்துக் காதலை சொன்னாலும் பெண்கள் உள்ளுக்குள் அனலாகும் காதலைக் கொண்டிருப்பதை சில நிமிட ரயில்க் காட்சிகளில் தெளிவாக யதார்த்தமாக சொல்லியிருக்கின்றார் மேனன். யதார்த்தமான அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சி. முடிவெடுக்க முடியாமல் காதலை வைத்துக் குழம்பும் ஜெஸ்ஸியின் யதார்த்தம். தன்னை விட்டு தூரமாக சென்றுவிட்டாயே ஜெஸ்ஸி என்று கார்த்தி தனது மனதுக்குள் கதறும் போது சிம்பு முத்தில் காட்டும் உணர்வுகள் அருமை. மொத்தத்தில் த்ரிசாவையும் சிம்புவையும் இன்னும் ஓர் தளத்திற்கு மாற்றிவிட்டுச் சென்றிருக்கின்றது இந்த விண்ணைத் தாண்டி வருவாயா.
குளத்தில் இறங்கினால்தான் மீன் பிடிக்கலாம் காதலைச் சொன்னால்தான் நினைத்த காதலை அடையமுடியும் என தனக்குத் தெரிந்த உதாரணத்தின் மூலம் கார்த்தி சொல்லும் போது மனதில் ஏதோ உறுத்த சில நிமிடங்கள் மொனித்து விட்டேன். காதலித்த பொண்ணுடம் நண்பியாகவும் பழகலாம் என ஜெஸ்ஸி சொல்லும் போது ஒருமுறை சிரித்தும் விட்டேன். காதலி எப்பொழுதும் காதலியே அன்று நண்பியாக முடியாது என்ற யதார்த்தை நினைத்து.
ஏ.ஆர். ரகுமானின் பாடல்களைப் பற்றி சொல்லவேதேவை இல்லை. படம் வருவதற்கு முன்னர் அனைவரது உதட்டிலும் தடம் பதித்திருந்தன அத்தனை பாடல்களும். “ஹோசானா” , “ஓ மணப்பெண்ணே”, “மன்னிப்பாயா”, “ஆரோமலெ”, பாடல்கள் மட்டுமல்ல காட்சிகளும் அற்புதம். பின்னி எடுத்திருக்கின்றார் மனோஜ் தனது கமராமூலமாக. கவிதாயினி தாமரையின் பாடல் வரிகள் அத்தனையும் காதலோடு இழையோடியிருக்கின்றன.
ஆனால் எனக்கு இதுவரை விளங்காத ஒன்று அது எப்படிதான் மேனனின் படங்களில் மட்டும் நாயகனும் நாயகியும் எப்படி இவ்வளவு அழகாகத் தெரிகின்றார்கள் என்று. எளிமையான உடைத்தெரிவுகள். கதைக்கு ஏற்றாற்போல ஒப்பனைகள். படம் முழுவதும் ஆங்கிலம் கலந்த தமிழ் இனிமையாக தொடர்கின்றது. ஆங்காங்கே சில சில இடங்களில் மட்டும் மலையாளம் தொட்டுச்செல்கின்றது. இந்த உலகத்தில எத்தனை பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸியினைக் காதலிக்க வேண்டும் என ஒவ்வொரு முறை கார்த்தி கேட்பதும் பின்னர் சந்தர்பவசமாக ஒரு முறை ஜெஸ்ஸி கார்தியிடமே கேட்பதற்கும் விடை இந்த அழகான காதலை நாங்கள் எல்லோரும் பார்ப்பதற்குதான் என முடிவில் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார் கௌத்தம் மேனன். விண்ணைத்தாண்டி வருவாயா மொத்தத்தில் Beautiful.
Categories: எனது பார்வையில், பாதித்தவை
///குளத்தில் இறங்கினால்தான் மீன் பிடிக்கலாம் காதலைச் சொன்னால்தான் நினைத்த காதலை அடையமுடியும் என தனக்குத் தெரிந்த உதாரணத்தின் மூலம் கார்த்தி சொல்லும் போது மனதில் ஏதோ உறுத்த சில நிமிடங்கள் மொனித்து விட்டேன். காதலித்த பொண்ணுடம் நண்பியாகவும் பழகலாம் என ஜெஸ்ஸி சொல்லும் போது ஒருமுறை சிரித்தும் விட்டேன். காதலி எப்பொழுதும் காதலியே அன்று நண்பியாக முடியாது என்ற யதார்த்தை நினைத்து. ////
அப்படியா???????
ஆமா சார், பர்ஸ்ட் ஷோ பார்த்தேன். செம பீலிங்க்ஸ் ஆயிடிச்சி. கெளதம் பின்னிட்டாரு. வாரணம் ஆயிரத்தின் முதல் பாதிய ஆக்ஷன் அப்றோம் அப்பா சென்டிமென்ட் எல்லாத்தையும் கழட்டி வச்சிட்டு மறுபடியும் ரீமேக் பண்ணின மாதிரி இருக்கு. ஆனாலும் இது ஒரு குறையாவே படல்ல. டச் பண்ணிட்டாங்க…
நான் இன்னும் படம் பார்க்கேல்ல… ஆனா பார்த்தா எனக்கும் நிச்சயம் பிடிக்கும் என்றுதான் நினைக்கிறேன்… 😉
ஆமாம் மூர்சிட்.. அழகான படம்..
நிமல் நிட்சயமாக பார்த்து இரசிக்க வேண்டிய படம்..
@kajee என்ன கேள்வி.. உங்களுக்கு என்னமாதிரி இருந்துச்சோ.. யாரறிவார்.. (ஆனால் நான் அறிவேன்)
Nice! Thanks!
நான் இன்னும் படம் பார்க்கேல்ல. பாத்த பிறகு வாசிக்கின்றேன். படம் நிச்சயம் நல்லா இருக்கும் என்ட நம்பிக்கை இருக்கு. 🙂
//
காதலித்த பொண்ணுடம் நண்பியாகவும் பழகலாம் என ஜெஸ்ஸி சொல்லும் போது ஒருமுறை சிரித்தும் விட்டேன். காதலி எப்பொழுதும் காதலியே அன்று நண்பியாக முடியாது என்ற யதார்த்தை நினைத்து.
//
ஓ… அப்படியா கதை போகிறது?
ம்ம்ம்………
நானும் படம் பார்க்கனும்
அதென்ன யதார்த்தத்தை நினைத்து?? என்னவோ எனக்கென்றால் இந்த வரிதான் இந்த விமர்சனத்தில் என்னை அடித்தது…..
நன்றி அபிமாறன். ஆரபி. படம் பார்த்த பின்னர் எப்படி என்று கூறுங்கள்..
யோகா.. போய்பாருங்கள்.. நிட்சயமாக படம் உங்களுக்கும் பிடிக்கும்..
@RANGAN
🙂 இப்ப என்ன சொல்ல வாறீங்க.. ஆனா.. நீங்க நினைக்கிற மாதிரி ஏதும் இல்லை..
@வலசு-வேலணை
இன்னொரு யதார்த்தத்தையும் சொல்லியிருந்தேனே கவனிக்கவில்லையா..?
வசனங்கள் கூட மிக அழகாக இருந்தது. “உன் விழியால் என்னை பார்க்கணும்” என ஜெஸ்ஸி சொல்லும் போது அற்புதமாக இருந்த்தது.
//விடை இந்த அழகான காதலை நாங்கள் எல்லோரும் பார்ப்பதற்குதான் என முடிவில் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார் //
உண்மை தான்
அலைபாயுதே படத்தின் பின் மிகவும் ரசித்து பார்த்த ஒரு காவியம் 🙂
விண்ணத்தாண்டு “”என்னை அடிச்சது இந்தக் காதல்””
நல்லாருக்கு பார்க்கத்தூண்டுது
அதென்ன யதார்த்தத்தை நினைத்து?? என்னவோ எனக்கென்றால் இந்த வரிதான் இந்த விமர்சனத்தில் என்னை அடித்தது…..