இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான, மிகவும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்கப்பட்ட தேர்தல் இன்று (27-01-2010) கணிப்புக்களை தவிடுபொடியாக்கி நிறைவினை நோக்கி வந்துள்ளது. சற்று முன்னர் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ்ஸநாயகத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையின் படி அதிமேதகு ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஜ அவர்கள் 6.01 மில்லியன் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னோடு போட்டி இட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினை விட 1.84மில்லியன் வாக்கு அதிகமாகப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிங்கள மக்களின் முழுயையான வாக்கு வங்கியினால்தான் இராசபக்கவின் இந்த வெற்றி சாத்தியமாகியது என்பது இந்த தேர்தலின் முடிவுகளைப் பார்க்கும் போது தெளிவாகின்றது. மேலும் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு மிகக் கூடுதலான ஆதரவு பதியப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற இந்த முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தெளிவாக தமது வாக்குளின் மூலமாக தமது விருப்பங்களைத் தெரிவித்துள்ளனர். அதாவது தமிழர்கள் தமக்கு நம்பிக்கையான எதிர்காலத்தின் மீதுதான் அதிக வாக்குகளை வழங்கியுள்ளார்கள். மாற்றம் வேண்டும் என்பதுவே அவர்களின் அந்த முடிவின் வெளிப்பாடு. கடந்த காலங்களில் ஏற்பட்ட இராஜபக்ச அரசின் மீதான நம்பிக்கையற்ற தன்மையின் வெளிப்பாடுதான் இந்த வாக்குகள் சொல்லும் உண்மை. ஆனால் பெரும்பான்னைச் சிங்கள மக்களோ தமக்கு வளமான எதிர்காலம் போதும் என்றும் அது மகிந்த இராஜபக்ஜவினால்தான் முடியும் எனவும் உறுதியாகக் கூறியுள்ளார்கள்.
ஒன்றுபட்ட தமிழிரின் இந்த வாக்குப்பதிவு மிகவும் அழுத்தமாக ஒன்றைக் கூறிவிட்டுச் சென்றிருக்கின்றது. தங்களுக்கு நம்பிக்கையான எதிர்காலம் வேண்டும் என்பது வெளிப்படையா இருந்தாலும் சிங்கள மக்களின் தேவைகள் வேறு தமிழரின் தேவைகள் வேறு, விருப்பங்கள் வேறு, அரசியல் அபிலாசைகள் வேறு என்பதை மறைமுகாமாப் பறைசாற்றிவிட்டு சென்றிருக்கின்றது இந்த வாக்குப்பதிவு. இலங்கையின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்றான தேர்தல்தான் என்றாலும் நாங்கள் இந்த மக்கள் விட்டுச் சென்ற இந்த பதிவினை சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கை என்னும் ஐக்கிய நிலையில் ஒரு நிரம்பல் நிலையினை அடைவதற்கு நாங்கள் நடக்கவேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது என்பதுவே அது.
இன்னும் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் இலங்கையின் அரசியலில் தமிழ்பேசும் சிறுபான்மையினர்தான் இலங்கையின் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் இயங்கு சக்தி என்று நிலவிய மாயை உடைத்தெறியப்பட்டிருக்கின்றது. பெரும்பான்மையினரின் விருப்புக்களில் பெரிய அளவில் தொங்கல் நிலைவரும் போது சிறுபான்மைத் தமிழ் மக்களின் விருப்புக்கள் நசுக்கப்பட்டிருக்கின்றது. இனிவரும் தேர்தல்களில் சிறுபான்மைச் சமூகத்தின் விருப்புக்கள் மீது அதிக அக்கறை காட்டப்படுமா என்பது கேள்விக்குறியே! இந்த நிலை ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வினைத் தரமுயலும் அரசியலமைப்பிற்கு ஆரோக்கியமான விடயமில்லை. அதாவது இந்த நிலையானது எதிர்காலத்தில் சிறுபான்மைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பாதிக்கின்ற நிலைக்குத் தள்ளப்படலாம். இந்த பாகுபாட்டைத் தோற்றுவிக்கக்கூடிய நிலைப்பாடானது களைபயப்பட்டாலே ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறந்த நிலையான தீர்வினை இலங்கை மக்கள் அனுபவிக்க முடியும். இலங்கையின் அரசியல் புத்திஜுவிகள் மற்றும் அரசியல்வாசிகள் கவனிக்க வேண்டிய முக்கியமான தேர்தல் முடிவு இது.
மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அதிமேதகு இராஜபக்க அவர்களே, உங்களுக்கு தமிழராகிய எங்களது வாழ்த்துக்கள். அரசியல் பழிவாங்கல்கள் என்பது கடந்த காலத்துக்குரியவையாக இருக்கட்டும். சிங்கள மக்களைப்போல நாங்களும் வளமான எதிர்காலத்தினை ஐக்கிய இலங்கைக்குள் ஓர் குடையின் கீழ் நல்லாட்சியில் சந்தோசமாக அனுபவிக்க நாங்களும் விருப்புகின்றோம்.
Categories: அரசியல், இலங்கை, எனது பார்வையில், பார்வை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
தமிழர்கள் என்றுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னால்தான் என்பதை இந்தத் தேர்தல் காட்டிநிற்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தவேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு. யதார்த்தவாதி மகிந்தவின் எதிர்வருகின்ற ஆட்சியே எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்.
//மீஅரசியல் பழிவாங்கல்கள் என்பது கடந்த காலத்துக்குரியவையாக இருக்கட்டும். சிங்கள மக்களைப்போல நாங்களும் வளமான எதிர்காலத்தினை ஐக்கிய இலங்கைக்குள் ஓர் குடையின் கீழ் நல்லாட்சியில் சந்தோசமாக அனுபவிக்க நாங்களும் விருப்புகின்றோம்.
This is what called opportunism, if we had swayed to this side a long ago we would have saved a lot. There have been a tradition of calling the people who take this stance a “traitor”, well is it vanished from the face of earth? if so it indicates something……..
தமிழர்கள் என்றுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னால்தான் என்பதை இந்தத் தேர்தல் காட்டிநிற்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தவேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு. யதார்த்தவாதி மகிந்தவின் எதிர்வருகின்ற ஆட்சியே எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்.