மூன்று இலட்சம் மக்களின் கண்ணீரும், இருபதாயிரம் மக்களின் இரத்தமும், அவர்களின் மண்ணிலேயே சிந்தவைத்தது- ஒருவரின் உத்தரவினால் எனில், அவரின் அதிகாரத்தினை உடைத்து வெறும் ஜடமாக உட்காரவைப்பதே அவருக்கு நாம் திருப்பி அடிக்கும் மரண அடி. ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்ற கூத்தவைப்புலவனின் வாக்கைப் பொய்க்க விடலாமா??? எய்தவன் இருக்க அம்பினை நோவானேன்.. எய்தவனை அவன் எய்த அம்பினால் திருப்பியடிப்பவனே சாணக்கியன். சத்திரியனாய் வாழ்ந்தது போதும் சாணக்கியனாகுவோம்!!!!
இந்தப் பூமிப்பந்தில் தமது வாழ்வினை நிலைநிறுத்துவதற்காக உயிரினைக் கையில் பிடித்துக் கொண்டு இரண்டரை வருடங்களாக ஓடி ஓடிக் களைத்தவர்களை துரத்தித் துரத்தி வேட்டையாடியர்களுக்கு அரசனாக தன்னைக் காட்டிக் கொள்வதில் பெருமைப்பட்ட ஒருவர் தனது பதவியினைத் தக்கவைப்பதற்கான இறுதிக்கட்ட போராட்டங்களில் இன்று நிற்கின்றார். அவரைப்பொறுத்த மட்டிலும் அந்தப் பதவிதான் மிகப்பெரிய ஆன்மா. அந்த ஆன்மா இருக்கும்வரைதான் அவரின் இயக்ககும். அந்த ஆன்மாவினை நிறுத்தி இயக்கமற்றுமாத்துவதே மிகப்பெரிய தண்டனை. அதிகார மூச்சு நிறுத்தப்படும் போது ஏற்படும் வலி மரணத்திலும் கொடியது. ஆயுசு மூழுக்க மரணவலி கொடுக்கக்கூடிய காயம் அதுதான்.
வன்னி மக்கள்மீது எந்த அம்பினை ஏவினாரோ அதனைக் கொண்டே திருப்பி அவரைத் தாக்குவதே இறைவனின் சித்தமும் போல. அதனால்தான் அந்த அம்பினைத் திருப்பி விட்டு வேடிக்கை பார்க்கின்றான் அவன். திருப்பிவிட்டது மாத்திரம்தான் அவன் செயல், ஆனால் திருப்பி அந்த அம்பினை சரியான இலக்கினை நோக்கி குறிபார்த்து எய்வது நம் எல்லோர் கைகளிலும்தான் இருக்கின்றது.
மனிதம் போற்றும் பௌத்த மார்க்கத்தை பின்பற்றும் ஒருவருக்கு ஏழைகளின் கண்ணீரின் வலியை உரத்து உணர்த்துவோம். சுதந்திரம் கேட்ட ஒரே பாவத்துக்காக மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு நிர்க்கதியாக நிற்கும் தமிழினமே, ஓடாத ஆறும் திருப்பித் தாக்காத மக்களும் இந்த உலகில் வாழ்ந்ததாக வரலாறு இல்லை! திருப்பித் தாக்கு!!!!
Categories: அரசியல், இலங்கை, சிங்களம், வன்னி
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
திருப்பித் தாக்கியே தீருவோம்……
வலியை அவர்களும் அனுபவித்தால் தான் நாம் பட்ட வலியை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். ஆனால் இதனால் நாம் இழந்தது ஏதும் திரும்பி வரப்போவதுமில்லை. எமது வலியை ஆற்ற எவரும் முன் வரப் போவதுமில்லை. எவரை நம்பியும் பயன் இல்லை. நம்மை நாங்களே தேற்றுவதற்குரிய வழியைத் தான் பார்க்க வேண்டும்.
//அதிகார மூச்சு நிறுத்தப்படும் போது ஏற்படும் வலி மரணத்திலும் கொடியது… எந்த அம்பினை ஏவினாரோ அதனைக் கொண்டே திருப்பி அவரைத் தாக்குவோம்//
ஒட்டு மொத்த தமிழரின் உணர்வுகளையும் சுமந்துள்ளன உன் வரிகள்.
ஆம் சுயத்தோடு செயற்படுவோம்
தனஞ்சி..
சத்தியமான வார்த்தைகள். ஆனால் நாங்கள் என்னதான் செய்தாலும் திருப்பித் தரமாட்டோம் என்று நினைத்தவரையும் அவருடன் சேர்ந்தியங்கி எத்தனை தாய்மார்களின் கண்ணீருக்கு காரணமானவர்களையும் பழிக்குப் பழி வாங்க சரியான சந்தர்ப்பம் இது. சந்தர்ப்பம் பாத்திருந்து பாய்வதில் புலியினம் எனக்காட்ட வேண்டாமா.. அம்புமாத்திரம் எமக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லவில்லை.. சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றுதான் சொல்கின்றேன்..
கீர்த்தி.. உண்மைதான்.. பார்ப்போம்..!!!
திருப்பித் தாக்கியே தீருவோம்……
வலியை அவர்களும் அனுபவித்தால் தான் நாம் பட்ட வலியை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். ஆனால் இதனால் நாம் இழந்தது ஏதும் திரும்பி வரப்போவதுமில்லை. எமது வலியை ஆற்ற எவரும் முன் வரப் போவதுமில்லை. எவரை நம்பியும் பயன் இல்லை. நம்மை நாங்களே தேற்றுவதற்குரிய வழியைத் தான் பார்க்க வேண்டும்.
Amazing write up, bookmarked the blog for hopes to read more information!