[ மொரட்டுவைப் பல்கலைக்கழக பொறியியற் பீடத்தில் வருடாந்தம் மலரும் சங்கமம் சஞ்சிகையின் 2008ம் வருட பிரதியில் பிரசுரிக்கப்பட்ட ஆக்கம் – இங்கே மீள்பதிவாகின்றது. ]
சங்கமம் இதழிற்கு ‘எதையாவது’ எழுதித்தாடா! என்று என் நண்பன் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டான். எதையாவது எழுதுவது என்றால் எதை எழுதுவது. எதனைக் கருப்பொருளாக எடுத்துக்கொள்வது? இணைய வலைப்பதிவூகளில் எழுதுவது போன்று இங்கு அதாவது பலரதும் அபிமானம் பெற்ற இச்சஞ்சிகையில் ‘எதையாவது’ எழுதமுடியாது. இணைய வலைப்பதிவூகளைப் போலல்லாது இச் சஞ்சிகையை வாசிக்கும் வாசகர்களுக்கு எனது முகம் நிட்சயமாக பரீட்சையமானதானவே இருக்கும். அவர்கள் அனைவரையூம் திருப்த்திப்படுத்தக் கூடிய ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுப்பதென்பது நிட்சயமாக அது தண்ணீரில் மீன்பிடிக்தும் செயலாகவே அமையூம். இன்னும் ஒன்று வலைப்பதிவூகளில் எழுதுவது போன்று உரை நடைப் பாணியைப் பயன்படுத்துவதும் சிறந்த மொழிப் பிரயோகமாக இருக்கமாட்டாது. எனவே இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு ஒரு நீண்ட சிந்தனையோட்டத்திடம் எனது கற்பனைக் குதிரையின் கடிவாளத்தைக் கொடுத்திருந்தேன். அங்கும் இங்குமாகத் தாவிக் கடைசியில் ஒரு ‘வெறுமையில்’ வந்து நின்றது அந்தக் குதிரை.
ஓன்றும் அற்ற அந்த ‘வெறுமை’ நிலையென்பது என்ன? எதுவூம் இல்லாத நிலைதானே!… ஆனால் இந்த எதுவும் இல்லாத நிலையில் இருந்துதானே இந்தப் பிரபஞ்சமே தோற்றம் பெற்றது. எனவே எதுவும் இல்லாத நிலையென்பது உண்மையில் ஒரு தொடக்கத்தின் நிலையா? எனது எண்ணங்கள் திசைமாறத் தொடங்கின. ஓன்றும் இல்லாததில் இருந்துதானே எல்லாமே வந்தது. இந்தப் பிரபஞ்சம் தோற்றம் பெற்றது. காலச் காலச்கரமும் சுழல ஆரம்பித்தது. உயிரின வளர்ச்சி ஆரம்பித்தது. எனவே ஒன்றும் இல்லாத அந்த நிலைகூட ஒரு உண்மையான தொடக்த்தின் நிலைதான்!
இயற்பியலும் வானவெளி விஞ்ஞானமும் வளர்ததன் பின்னர் எமது பிரபஞ்சத்திற்கு ஒரு தொடக்கம் இருந்தாக வேண்டுமே என்ற சந்தேகங்கள் எழ ஆரம்பித்தன. அந்த சந்தேகங்களில் இருந்து தான் ‘ஓன்றும் இல்லாததில் இருந்துதானே எல்லாமே வந்தது’ (Prior to that moment there was nothing; during and after that moment there was something: our universe) என்ற கொள்கை வலுப்பெற்றது. இன்றைக்கு 13.7 பில்லியன் (billion) ஆண்டுகளுக்கு முன்னர் மிக மிக நெருக்கமாக ஒன்றறக் கலந்திருந்த ஒரு திண்ம நெருப்புக் கலவை திடீரென பெரு வெடிப்புக்குள்ளானது (Big Bank). அது ஒன்றும் சாதாரண வெடிப்பல்ல, 100 000 000 அணுக்குண்டுகளை ஒன்றாக வெடிக்கவைத்தால் எவ்வளவு சக்தி வெளிவருமோ அவ்வளவு சக்தி வெளியிடப்பட்டது. அதன் போது வெளியேறிய வெப்பம் அண்ணளவாக 1019 GeV ( 1GeV = 10,000,000,000,000K ). அவ் வெடிப்பினால் பல்லாயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு துகள்கள் தூக்கி எறியப்பட்டன. ஆரம்பித்த சில கணங்களிளேயே எளிய மூலக்கூறுகள் உருவாகிவிட்டன, பல்லாயிரம் ஒளியாண்டுகள் தூரத்ததிற்கு விரிந்துவிட்டது பிரபஞ்சம். அந்தக் கணத்திலிருந்துதான் காலச்சக்கரம் (Time line என இயற்பியலில் முன்னர் படித்த ஞாபகம்) சுழல ஆரம்பிக்கின்றது. அந்தக் கணத்திலிருந்துதான் ‘எல்லாமும்’ தோற்றம் பெறுகின்றது. ( மின்காந்த தொலைநோக்கிகளினூடாகப் பெறப்பட்ட கொஸ்மிக் நுண்அலைகளின் பின்புலத்தில் காணப்படும் வெப்ப நிலைப் பரம்பலை வைத்தும் பால்விதியின் நீளத்தினையும் வைத்து correlation function மூலமாக பிரபஞ்பத்தின் ஒரு பக்க நீளம் 13.73 பில்லியன் ஒளியாண்டு எனக்கணிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு பிரபஞ்பத்தின் வயது 13.73 பில்லியன் (billion) எனக் கணிக்கப்பட்டுள்ளது. ). அந்த பெரு வெடிப்பின் போது தூக்கி எறியப்பட்ட நெருப்புக் கோளங்கள் காலப்போக்கில் தமது தண்மையை இழந்து இறுகிக் கிரகங்களாக மாற்றம் பெறுகின்றன. அவை சில நட்சத்திரங்களை மையமாக வைத்து நீள்வட்ட சுழற்சிப் பாதையையும் உருவாக்கிக் கொள்கின்றன. இவ்வாறு எமது சூரியன் என்னும் நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு சுழல ஆரம்பித்த கிரகங்கள் எமது சூரிய மண்டலத்தை உருவாக்கிக்கொள்கின்றன. இச் சூரியமண்டலம் உருவாகியது இன்றைக்கு 6.4 பில்லியன் (billion) ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உயிர்ப்பல்வகைமை ஆரம்பித்தது 4.7 பில்லியன் (billion) ஆண்டுகளுக்கு முன்னர்.
இவ்வாறு தோற்றம் பெற்ற பிரபஞ்பம் தோற்றம் பெற்ற கணம் முதல் விரிவடைந்து கொண்டே செல்கின்றது. எமது கண்ணுக்கு மின்னி மின்னித் தெரியும் நட்சத்திரங்கள் எம்மில் இருந்து விலகிச் செல்கின்றது. அந் நட்சத்திரங்கள் காலும் ஒளியில் இருந்து எமக்கு இது புலனாகும். அவை காலும் ஒளியில் இருந்து பெறப்படும் மின்காந்தத் திருசியத்தில் பார்வை வீச்சிளுள்ள சக்தி குறைந்த சிவப்பு அலையின் மீடிறனில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு இது கணிக்கப்படுகின்றது. சிகப்பு அலையின் மாற்றம் (Red Shifting) என்றால் என்ன? பிரபஞ்ச விரிவிற்கும் Red Shifting இற்கும் என்ன தொடர்பு? முன்னர் எனக்கு யாழ் இந்துக் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் ஒலியியல் பற்றி ஆசிரியர் கற்பித்த சில விதிகளை ஞாபகப்படுத்ததிப் பார்க்கலாம் எனத் தோணுகின்றது. 1845இல் டொப்லரினால் கண்டுபிடிக்கப்பட்ட அலைமுகலின் இயக்கம் பற்றிய Doppler-effect விதியே அது. அதாவது ஒலிவை எழுப்பியபடி அவையும் ஒலிமுதலில் இருந்து எமது காதுகளுக்கு வந்தடையூம் ஒலியலையில் காணப்படும் மாற்றத்தினைக் கொண்டு, அவ் ஒலிமுதலின் வேகத்தையும், அது அசையும் திசையையும் அறியலாம். இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே! ஒலிமுதலுக்குப் பதிலாக ஒளிமுதலான நட்சத்திரத்தை கருதுங்கள். எமக்குக் கிடைத்த சிகப்பு அலையின் மாற்றத்தைக் கொண்டு அந் நட்சத்திரம் அயையும் வேகத்தையும் திசையையும் அறியலாம் தானே.
இம் முடிவுகளை வைத்துதான் ஐன்ஸ்டீன் பிரபஞ்சத்தின் மேற்பரப்பு வளைபரப்பு எனக் கணித ரீதியாக நிருவினார். ஐன்ஸ்டீன் என்றவுடன் அவர் வெளியிட்ட சார்புக் கொள்கைதான் ஞாபகத்தில் வருகின்றது. அந்த சார்புக் கொள்கையைப் பரிசோதனை செய்வதென்றால் நாம் ஒளியின் வேகத்தில் அல்லவா பயணிக்க வேண்டும். ஒளியின் வேகத்தில் 3*108 ms-1 இல் பயணித்தால் எமது கால அளவானது மாற்றமடையாது. எமக்கு வயதே போகாதாமம். ஆனால் ஒளியின் வேகத்தை எவ்வாறு பெறுவது என்பதுதான் இப்போது உள்ள பிரச்சனை. ஒளியின் வேகத்தில் பறக்கும் விண்கலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால்…. எமக்கு ஒளியின் வேகத்தில் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தால்…. எமக்கு வயது போகாது என்பது ஒரு விடையம். ஆனால் நாம் பூமியிலிருந்து புறப்படுகின்றோம் என வைத்துக்கொள்ளுங்கள் நாம் பூமியுடனான தொடர்பை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாகலாம். பூமியில் இருந்து அனுப்பும் தகவலோ, நாம் பூமிக்கு அனுப்பும் தகவலோ முடிவிடத்தை அடையமாட்டாது. அது சரி, அந்தப் பிரச்சனையெல்லாம் எமக்கெதற்கு, ஒளியின் வேகத்தில் பயணிக்கும் வாகனம் கண்டு பிடிக்கப்படும் போது அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்…. நாம் ஒளியின் வேகத்தில் (3*108 ms-1 ) பயணித்தால் எமக்கு காலமாற்றம் பூச்சியம்.
அதாவது கணிதம் சார்பாகக் கூறுவதாயின் δt = 0.
ஒளியின் வேகத்திலும் குறைவாக ( < 3*108 ms-1 ) பயணித்தால் δt > 0..
எனவே நாம் ஒளியின் வேகத்திலும் கூடுதலாகப் ( > 3*108 ms-1) பயணித்தால் காலம் எதிர்திசையில் நகருமா ( ie δt < 0 ) ….?
என்ன குழப்பமாக இருக்கின்றதா? சற்று சிந்தித்துப் பாருங்கள்…. எமது முதலிரண்டு முடிவுகளும் சரி எனில் மூன்றாவது சாத்தியக் கூறும் சாத்தியமே.. அவ்வாறு மாறினால்… நாம் ஒளியின் வேகத்திலும் கூடுதலாகப் பயணித்தால்… நாம் எமது கடந்த காலத்திற்கு போய்வரலாம். இராமாயணம், மகாபாரதம் போன்ற வரலாற்று சம்பவங்களை கண்கூடாகப் பார்த்து இரசிக்கலாம். தமிழர் வரலாற்றில் பொன் எழுத்துக்கலாற் பொறிக்கப்பட்ட கி.பி 11 ம் நூற்றாண்டிற்கு சென்று வரலாம். கடல் கடந்து கடாரம் வென்ற ‘புலிக் கொடியை’ நாட்டிய இராஐ இராஐ சோழனுடனும், அவன் மகன் இராயேந்திர சோழனுடனும் ஒரு கலந்துரையாடலை நடாத்தலாம். ஆசியாவிலேயே மிகப் பெரும் சாம்ராச்சியமாக விளங்கிய அந்த சோழ காலத்திற்குச் சென்று வந்தால் எப்படி இருக்கும். என்ன கற்பனையிலேயே சோழ அரசமாளிகைக்குச் சென்று விட்டீர்களா? இராஐ இராஐ சோழன் கொலு மண்டபத்தே வீற்றிருக்க அவனுக்குப் பக்கத்திலே பட்டத்தரசி வானதியும் கீழே தமக்கையார் குந்தவையும் அவைப் பெரியவர்களும் பாத்திருக்க பல்லவ, சாளுக்கிய, பாண்டிய மற்றும் கடார மன்னர்கள் பயத்துடன் வந்து கப்பம் கட்டிவிட்டுச் செல்லும் காட்சி மனக்கண் முன் வருகின்றதா? தமிழர் பெருமையோடு தலை நிமிர்ந்து வாழ்ந்த அந்தப் பொற்காலம் இனி வருமா?
… பாத்தீர்களா, ஒன்றும் இல்லாததில் தொடங்கி எவ்வளவோ விடயங்களைத் தெளிவுபடுத்திய தமிழ் மொழியின் அருமையை…இதுவரை உங்களை அழைத்து வந்து இப்போது முடிவுரையில் நிற்கின்றேன். ஒரு உண்மையான தொடக்கத்திற்கு ஒரு இனிய முடிவும் அவசியமே. இந்த ஆக்கத்தை எழுதத் தொடங்கும் முன்னர் எனது உரைநடைப் பாணியியைத் தவிர்க்க வேண்டும் என்றே நினைத்துத் தொடங்கினேன். ஆனால் இங்கே அது என்னையூம் அறியாமல் எனது தமிழ்ப் பிரயோகத்தில் புகுந்து விட்டது. எனது எழுத்திற்து அழகும் தனித்துவமும் இதுதான் போலவும். அது தொடரட்டும்… அப்போ முடிவு! …?
####@!!!@##!…மீண்டும் சந்திப்போம்..
சுபானு
Categories: அறிவியல், எனக்குத் தெரிந்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
Leave a Reply