logo

Miles to go before I sleep

December 13, 2009

நீண்ட நெடிய பாலைமரங்கள் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் தாம் நனைந்து அவை நின்ற குளக்கரையின் வீதியின் குளிர்ச்சிக்கும் அருகிருந்த பாலர் பாடசாலையின் சிறார்களின் பிஞ்சுத் தேகத்திற்குமாக நெடுங்குடை விரித்து எப்போதும் புன்னகைப் பூக்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தன புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் முன்பாக. அழகான என்றும் வற்றாக குளத்தின் ஒரு கரையில் விநாயகரும் மறுகரையில் ஜேசுபாலனுமாக புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் சிறார்களுக்கு அருள் ஆசியினை என்றும் குறையாது வழங்கிக்கொண்டிருந்தார்கள். வெள்ளிக் கிழமை என்றால் விநாயகரும் திங்கள் கிழமையென்றால் ஜேசுபாலனின் தரிசனமும் என இளம் பிராயத்திலேயே எம்மதமும் சம்மதம் என்ற தர்ம ஒழுக்கநெறியை அழகாகக் கற்றுகொடுத்தார்கள் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் ஆசிரிய சிற்பிகள். பசும் மண்ணென பாடசாலை நுழைந்த அந்தப் பாலகர்களை பதமாக வார்படுத்தி எடுத்தவர்கள் அந்த தெய்வீகச் சிற்கிகள்.

கிறீஸ்தவ கன்னியாசகளின் நேரடி கண்காணிப்பிலும் நேர்படுத்தலிலும் மேலும் மேலும் பதப்படுத்தப்பட்டார்கள் அந்தப் பாலகர்கள். புனித பூமி என்னும் சொல்லின் முழு அடையாளச் சின்னம் யாழ் நகரில் உள்ள தனிநிகர் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம். என்றுமே மாணவர்களின் கல்வித்திறனிலும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிலும் யாழ்குடாவிலேயே முதலாமிடம். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் பாலர் பள்ளிப்பருவத்தைக் களித்த மாணவன் என்றால் அவனை தனித்துவமாகத்தான் சமுதாயம் பார்க்கின்றது. அந்த நிலையியையும் தரத்தினையும் என்றென்றைக்கும் பேணிவருகின்றது புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்.

அங்கிருந்த அந்தக் குளத்தின் அழகிலும் மரநிழலின் குளிர்ச்சியிலும் நான் மயங்கியிருந்த காலங்கள் எத்தனை. மனதில் பசுமையாக மனதின் ஆழ் கரைகளை முட்டி மோதும் நினைவலைகள் மகிழ்ச்சியின் துமிகளை, இன்றும் நினைக்கும் போதெல்லாம் தெளித்துக் கொண்டிருக்கின்றன. ஐந்து முதல் பத்துவயது வரையான ஞாபகங்கள் அவை. ஆனால் ஐம்பதாண்டு சென்றாலும் மறக்காது. குளக்கரையில் நின்றுகொண்டு சிறு கூழாங்கற்களால் குளத்தின் நீளம் பார்க்க, கல்லை விட்டெறிந்த நாட்கள். பாலைமரத்தின் நெடிய உயரத்தை அண்ணாந்து பார்த்து பார்த்து ஆச்சரியமும் ஆசையும் அடைந்த நாட்கள். பிள்ளையார் கோவில் காண்ணடா மணியோசையும் ஐயரின் மந்திரமும் மனதில் இன்றும் கேட்கக் காரணமான அந்த நாட்கள். ஜேசு பாலனினைப் போற்றிப்பாடும் நண்பர்களின் இனிய குரலில் திழைத்த நாட்கள். மதியம் இடைவேளையில் நண்பி நண்பர்களுடன் ஓடி பிடித்து விளையாடி, விழுந்து காலில் ஏற்பட்ட காயத்தின் அடையாளத்தை இன்றும் சுமக்கக்
காரணமான அந்த நாட்கள். பொது அறிவித்தல் கரும்பலகையில் நாள்தோறும் எழுதிவைத்திருக்கும் பொது அறிவு வினாக்களை பார்த்து எழுதுவதற்கு ஆதாரமாக சுவரினைப் பயன்படுத்துகையில் நிலைக்குத்தாகப் பேனா பிடித்திருந்தால் இடைநடுவில் எழுதாமல் பேனா நின்றுவிடும். மைகீழ் இறங்கியதால் தான் பேனா எழுதாமல் நின்றது என்ற காரணத்தைக் கண்டறிந்து, பெரிய நீயூட்டன்போல நண்பர்களிடம் ஆராய்சி அறிவையினைப் பெருமையாக பேசிய நாடகள். அத்தனையும் மனதினுள் பொக்கிசமாக.

காலம் இன்று மிகவேகமாக மின்னல்போல நகர்கின்றது. போய்ச் சேர வேண்டிய, அடைய வேண்டிய இலக்குகள் என் முன்னே. ஆனால் அவைகளை நினைக்கும் போது அந்த பொக்கிசங்களை மனதின் ஓரத்தில் மெல்ல வைத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான். நம் வாழ்வில் ஒவ்வொரு கட்டமும் மகத்தான பொக்கிசங்கள். அவைகளை அவ்வப்போது இரசித்துவிட்டு நினைவுகளின் பொக்கிசவறையில் சேமித்து விட்டு நாம், நம் இலக்குகளை நோக்கிய எமது நெடிய பயணத்தினைத் தொடர வேண்டியதுதான். எனது பாடசாலைக் காலத்தில் ஆங்கில இலக்கியத்தில் படித்த கவிதை ஒன்று அண்மையில் மீண்டும் ஞாபகத்தின் கதவுகளைத் தட்டிச் சென்றது.

Robert Frost இனால் 1922 இல் எழுதப்பட்ட “Stopping by Woods on a Snowy Evening” என்ன கவிதையை நீங்களும் வாசித்து இரசித்துப் பாருங்கள். என்ன ஒரு தத்துவ வரிகளை மிகவும் எளிமையாகவும் அழகாகவும் சொல்லியிருக்கின்றார் அந்த அற்புதக் கவிஞர் Robert Frost. மிகவும் மிருதுவான rhymeஇனை இந்தக் கவிதையை வாசிக்கும் போது உணர்வீர்கள். AABA BBCB CCDC DDDD என்ன தொடர்சியில் வளர்கின்றது அந்த rhyme. இந்தக் கவிதையின் இறுதிப் பந்தியில் நேர்த்தியாக தனது கருத்தினை முன்வைத்துள்ளார் கவிஞர். நமது வாழ்க்கையில் போச் சேர வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கின்றது. நம்முடைய இலக்குகளை நாம் நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கவேண்டும் எனமுடிக்கின்றார் கவிஞர்.

Stopping by Woods on a Snowy Evening

Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sounds the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

Categories: எனக்குத் தெரிந்தவை, எனது பார்வையில், பாடசாலை நாட்கள், பாதித்தவை

Tags: பாடசாலை

6 comments

  • காருண்யா December 14, 2009 at 4:18 AM -

    பசுமையான பள்ளிநாட்கள் உங்கள் வார்த்தை செதுக்கலில் இன்னும் அழகாக இருக்கிறது சுபானு 🙂

    Even though we have to go to miles before sleeping these memories are giving the extra power to achieve that 🙂

  • சந்ரு December 14, 2009 at 11:58 PM -

    அழகாக சொல்லி இருக்கிறிர்கள் நல்ல பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.

  • v.sinthuka January 5, 2010 at 4:52 AM -

    “மதம் என்னும் மதம் ஓயட்டும்..” – ஒரு பாடல் வரி இது நன்கே விளக்குகிறது மத ஒருமைப்பாட்டை, நாம் தான் இந்தி எப்போது கடைப் பிடிக்கப் போறோமோ தெரியவில்லை.

    Robert Frost is one of my favorite poet. Nice opeom. Thanks for that.

  • Amy June 5, 2010 at 2:32 AM -

    “மதம் என்னும் மதம் ஓயட்டும்..” – ஒரு பாடல் வரி இது நன்கே விளக்குகிறது மத ஒருமைப்பாட்டை, நாம் தான் இந்தி எப்போது கடைப் பிடிக்கப் போறோமோ தெரியவில்லை.

    Robert Frost is one of my favorite poet. Nice opeom. Thanks for that.

  • craig ballantyne September 6, 2010 at 2:56 PM -

    This informative post helped me a lot! Saved your site, extremely excellent topics everywhere that I read here! I appreciate the info, thanks.

  • Mr Peace April 4, 2011 at 12:48 AM -

    What a wonderful world!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram post 17877259802674648 Instagram post 17877259802674648
Little far from the busy town. Every morning and e Little far from the busy town. Every morning and evening I walk through this little heaven. I love this place and could willingly waste my time in it. #home #life #nature.
Elegant! #srilanka #nature #love #life #lka Elegant! 
#srilanka #nature #love #life #lka
Be Positive. #moneta Be Positive. #moneta
Would like to hear how fintech innovations can hel Would like to hear how fintech innovations can help with your personal financial issues. We are going live in #CinnamonChat with Amithe Gamage 
@moneta.lk #fintech #fintechinnovation #lka #srilanka #technology
Happy Independence Day to my fellow Sri Lankan. Ma Happy Independence Day to my fellow Sri Lankan. May God bless our country and let us keep enjoying the freedom to its fullest while respect other fellow citizens' identity, dignity, and believes. One county with multi identity. What makes us different makes us stronger as One. 

#lka #independenceday #srilanka
Keep your face always toward the sunshine, and sha Keep your face always toward the sunshine, and shadows will fall behind you. 
#2022 #lka #jaffna #nature
Instagram post 17890328996541867 Instagram post 17890328996541867
Wish you a Happy New Year to Everyone. Wish you a Happy New Year to Everyone.
If you have the power to make someone smile 😊 d If you have the power to make someone smile 😊 do it.
Got the green light to open the window of my trave Got the green light to open the window of my travel plan. #vaccinationdone✔️ ️#covid_19 #lka
Somewhere, something incredible is waiting for you Somewhere, something incredible is waiting for you. #lka #srilanka #roadtrip #travel
தொடர்க

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்

தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.

இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…

Instagram post 17877259802674648 Instagram post 17877259802674648
Little far from the busy town. Every morning and e Little far from the busy town. Every morning and evening I walk through this little heaven. I love this place and could willingly waste my time in it. #home #life #nature.
Elegant! #srilanka #nature #love #life #lka Elegant! 
#srilanka #nature #love #life #lka
Be Positive. #moneta Be Positive. #moneta
Would like to hear how fintech innovations can hel Would like to hear how fintech innovations can help with your personal financial issues. We are going live in #CinnamonChat with Amithe Gamage 
@moneta.lk #fintech #fintechinnovation #lka #srilanka #technology
Happy Independence Day to my fellow Sri Lankan. Ma Happy Independence Day to my fellow Sri Lankan. May God bless our country and let us keep enjoying the freedom to its fullest while respect other fellow citizens' identity, dignity, and believes. One county with multi identity. What makes us different makes us stronger as One. 

#lka #independenceday #srilanka
Keep your face always toward the sunshine, and sha Keep your face always toward the sunshine, and shadows will fall behind you. 
#2022 #lka #jaffna #nature
Instagram post 17890328996541867 Instagram post 17890328996541867
Wish you a Happy New Year to Everyone. Wish you a Happy New Year to Everyone.
If you have the power to make someone smile 😊 d If you have the power to make someone smile 😊 do it.
Got the green light to open the window of my trave Got the green light to open the window of my travel plan. #vaccinationdone✔️ ️#covid_19 #lka
Somewhere, something incredible is waiting for you Somewhere, something incredible is waiting for you. #lka #srilanka #roadtrip #travel
தொடர்க

Archives

  • November 2020 (1)
  • October 2016 (1)
  • December 2011 (2)
  • November 2011 (1)
  • October 2011 (1)
  • August 2011 (1)
  • July 2011 (2)
  • June 2011 (1)
  • May 2011 (2)
  • April 2011 (2)
  • March 2011 (2)
  • February 2011 (1)
  • December 2010 (2)
  • November 2010 (3)
  • October 2010 (3)
  • September 2010 (3)
  • April 2010 (1)
  • February 2010 (3)
  • January 2010 (4)
  • December 2009 (1)
  • November 2009 (7)
  • October 2009 (3)
  • September 2009 (10)
  • August 2009 (10)
  • July 2009 (7)
  • June 2009 (9)
  • May 2009 (1)
  • April 2009 (8)
  • March 2009 (3)
  • February 2009 (1)
  • January 2009 (2)
  • December 2008 (1)
  • November 2008 (2)
  • October 2008 (6)
  • March 2008 (2)
  • February 2008 (2)
  • January 2008 (1)
  • December 2007 (2)
  • March 2007 (1)

Copyright ஊஞ்சல் 2022 | Powered by WordPress