நீண்ட நெடிய பாலைமரங்கள் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் தாம் நனைந்து அவை நின்ற குளக்கரையின் வீதியின் குளிர்ச்சிக்கும் அருகிருந்த பாலர் பாடசாலையின் சிறார்களின் பிஞ்சுத் தேகத்திற்குமாக நெடுங்குடை விரித்து எப்போதும் புன்னகைப் பூக்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தன புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் முன்பாக. அழகான என்றும் வற்றாக குளத்தின் ஒரு கரையில் விநாயகரும் மறுகரையில் ஜேசுபாலனுமாக புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் சிறார்களுக்கு அருள் ஆசியினை என்றும் குறையாது வழங்கிக்கொண்டிருந்தார்கள். வெள்ளிக் கிழமை என்றால் விநாயகரும் திங்கள்