எங்கெங்கு காணினும் மென்பொருள் கம்பனிகளடா.. உலகின் எங்கோ மூலையில் இருக்கும் client இற்கு இங்கிருந்து மென்பொருள் என்னும் கட்டம் கட்டுகின்றார்கள் இவர்கள். உண்மையில் இதுவும் ஒரு கட்டடம் கட்டும் தொழில்தான்.. ஆரம்ப அடித்தளத்தில் இருந்து மேல் விட்டத்தில் தொங்கும் திருஷ்டிப் பூசனி வரை இங்கிருந்து தான் வடிவமைத்துக் கொடுக்கப்படுகின்றது. பலசமயங்களில் client இனை அந்தக் கட்டடித்தில் குடியமர்த்தி அவர்கள் எதுவித பிரச்சினையும் இல்லாது இயங்குகின்றார்களா என்றும் பார்க்க வேண்டியது இந்த மென்பொருள் கம்பனிகளின் வேலையாகின்றது. இப்படியான மென்பொருள் கம்பனிகள் அண்மைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டும் துளிர்த்து எழ ஆரம்பித்துள்ளகட்டம் தான் இன்று. அதிகமான வேலை, அதுவும் மூளையைக் கசக்கிப் பிழிகின்ற வேலை இத்தகைய கம்பனிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு. காலை ஒன்பது அல்லது பத்து மணிக்கு மடைதிறக்கும் இந்த மென்பொருள் கம்பனிகள் பல சமங்களில் பின்னிரவு தாண்டியும் இயங்கிக் கொண்டிருப்பார்கள். ஆண் பெண் என்ற பால் வித்தியாசம் என்பது மிகவும் குறைவாகவும் திறமை மட்டுமே ஒரேயொரு அளவுகோலாகவும் கொண்டு இயங்குவதே இவர்களின் வெற்றியின் ஆணிவேர்.
வலிந்து தேடிவந்து கொடுப்பார்கள் கைளில் HSBC கடன் அட்டைகளை வங்கிக்காரர்கள். பசித்தால் சாப்பாடு ஓடர் செய்யும் இடம் Pizza Cut அல்லது McDonald’s. இவ்வாறுதான் வாழ்கின்றார்கள் பல மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் மென்பொருள் கட்டடத் தொழிளாளர்கள்.
விந்தியாவும் அப்படியான மென்பொருள் கம்பனியில்தான் மென்பொருள் திட்டமிடல் முகாமையாளராக ஆக வேலை செய்கின்றாள். வழமைபோல அன்றும் காலை எட்டு மணிக்கு காலை அலாரம் அடிக்க, முடியாத நித்திரை தடுத்தும் கேளாது, எழவேண்டுமே என்ற நிர்ப்பந்தத்திற்காக கண்விழித்தாள் விந்தியா. எழுந்ததும் முதலில் காலை வணக்கங்களை அலைபேசியல் குறுந்தகவலாக தனது காதலனுக்கு அனுப்பி விட்டு மெல்ல காலைக்கடன்களை முடித்து ஒன்பது மணிக்கு அலுவலகம் நோக்கி தனது பிரத்தியேக Hyundai Veracruz இல் புறப்பட்டாள். போகும் வழியே இருந்து P&S இல் Hyundai Veracruz இனைச் சற்று நிறுத்தி மெல்லக் காலையுணவாகக் கடிப்பதற்கு சின்னதாக pastry ஒன்றையும் வாங்கிக்கொண்டாள்.
காலை ஒன்பது முப்பது. தன்னுடன் ஓரே குழுவாக வேலை செய்பவர்களுடன் நேற்று என்ன என்ன திட்டங்கள் முடிக்கப்பட்டது அதன் போது என்ன மாதிரியான பிரச்சனைகள் எதிர் நோக்கப்பட்டன இன்று என்ன செய்யப் போகின்றோம் என்று scrum என்ற சின்னக் கருத்துப்பரிமாற்றத்தினை நிகழ்த்தினாள்.அந்த கருத்துப்பரிமாற்றத்தின் போதே காலையுணவாக வாங்கிவந்த அந்த pastryயையும் இடைக்கிடையில் கடித்துக் கொள்ளவும் அவள் மறக்கவில்லை. இவ்வாறாகத் தொடங்கிய அன்றைய நாள் மதியம் ஒருமணிவரை தனது கணணி முன்னமே அவள் கழிக்கவேண்டியதாயிருந்து. கணணில் மென்பொருள் திட்டமிடல் வேலையும் அவ்வப்போது பொழுதுபோக்காக facebook அரட்டையும், skype அரட்டையும் என நேரங்கள் கழிந்தன. மதியம் ஒருமணிக்கு தனது காதனுடன் கொஞ்ச நேரம் அலைபேசியில் அரட்டை அடித்துவிட்டு மதியம் உணவிற்கு தோழியருடன் அருகில் இருக்கும் McDonald’s இற்குப் புறப்பட்டாள்.
பிற்பகல் இரண்டு மணிக்கு மீண்டும் அலுவலகத்திற்கு மீண்டு, வேலையின் நீட்சிக்குள் மெல்ல ஊடுறுவத் தொடங்கினாள். பிற்பகல் நான்கு மணிக்கு முழுமூச்சாக தனது மென்பொருள் திட்டமிடல் வேலைக்குள் ஊடுருவியிருக்கும் போது அலைபேசியில் காதலன் அழைத்தான். பின்நேரம் ஐந்து மணிக்கு கடற்கரைக்கு போகலாமா என்றான் காதலன். தனக்கு முடிக்க வேண்டிய வேலைகளே தலைக்கு மேல் கத்தியாக தொங்கவதால் வரமுடியாது என்று செல்லமாக மறுத்துவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கிவிட்டாள் விந்தியா. தொடங்கப்பட்ட வேலை இரவு பத்து மணிதாண்டியும் முடியாது தொடர்ந்தது. இரவு உணவினை ஓடர் செய்து பெற்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் வேலையெனும் கடலுக்குள் மூழ்கினாள். நள்ளிரவு பதின்னொன்று மணிக்கு அன்று திட்டமிட்ட வேலைகள் யாவும் நிறைவடையவே ஜாலியாக தனது வீடு நோக்கி Hyundai Veracruz இல் புறப்பட்டாள். அவளுடைய அன்றைய நாள்ப்பொழுதும் பாதி இரவும் அலுவலகத்திலேயே கழிந்திருந்தது.
நள்ளிரவு தாண்ட நித்திரை முழிப்புக்கள். அதிகாலை கண்டிராத கண்விழிப்புக்கள். அவள் வீட்டுப் பாத்திரங்களில் புகைக்கரி என்றுமே படிந்ததில்லை. யாரோ சமைத்த உணவு. இரசித்து ருசித்து ஒருவேளை ஆர அமர இருந்து உணவு உண்ண முடியாத வேலைப்பழு. காதலுக்காக, காதலனுக்கா சில மணித்துளிகளும் ஒதுக்க முடியாத ஜீவன். நள்ளிரவுப் பிரயாணங்கள். கணணி கணணி கணணி… ! இதுவே இவளைப் போன்ற கணணிப் பெண்களின் நாளாந்த வாழ்க்கை. ஆனால் என்ன இலட்சங்களில் கொட்டும் சம்பளம். சில மாதங்களுக்குள் பல லட்சங்களின் அதிபதி அவள். ஆனால்…
இவள் காதலனை நினைத்துப் பார்த்தேன். இவளைப் போன்ற பெண் என் காதலியாக இருந்தால்.. இவளைப் போன்ற பெண்ணை நான் காதலித்தாள்..? இவளைவிட இவள் அலைபேசி நன்றாகக் சிணுங்கும்.. இவர்களை விட அதைனைக் காதலிக்கலாம்.. என்றே தோன்றியது. இவளைப் போன்றவள் காதலியாக வேண்டவே வேண்டாம் என்று IT படித்த பெண்களை விட்டு தூரமாக ஓடிவிடுவதே மேல்.. சரி.. பெண்கள் இப்படி என்றால் ஆண்கள்.. நான் என்ன சொல்ல..
Categories: எனது பார்வையில்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
இப்பிடி எல்லாரயும் வெருட்டக் கூடாது என்ன. பிறகு IT படிச்ச பிள்ளையல் எல்லாருமே பாவம்…. :O 🙁
//சரி.. பெண்கள் இப்படி என்றால் ஆண்கள்.. நான் என்ன சொல்ல.. //
என்ன சொல்ல, ஆண்களும் இப்படியே தான்…!!!
என்ன எங்கள் சமுதாயத்தில் ஆண்கள் அடுப்பில் பாத்திரம் கரிபடிய சமைப்பதில்லை ஆதலால் இப்படி வித்தியாசமாக தெரிகிறது…
So.. ITஇல் இல்லாத பெண்களே, IT ஆண்களிடமிருந்தி எஸ்கேப்…!
ஹலோ எனக்கென்னவோ இது உங்கள் அனுபவம் போல தெரிகிறது முதலில் காதல் கவிதை இப்போது ஊடலா….சரி சரி என்ன பண்ணுறது பாத்து அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கோ…………
IT யிலுள்ள பெண்ணை நான் காதலிக்க போவதில்லை
பகிர்வுக்கு நன்றிகள்
கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்.
🙂
@ஆரபி
//இப்பிடி எல்லாரயும் வெருட்டக் கூடாது என்ன. பிறகு IT படிச்ச பிள்ளையல் எல்லாருமே பாவம்…. :O 🙁
//
வெருட்டவில்லை.. உண்மையைத்தானே சொன்னேன் ஆரபி..
"மென்பொருள் கம்பனியில் வேலை பார்க்கும் IT பெண்ணா? " என்று தலைப்பு இருந்த்திருக்கலாமோ என்று தோனுது. 🙂
@ஆரபி
//
"மென்பொருள் கம்பனியில் வேலை பார்க்கும் IT பெண்ணா? " என்று தலைப்பு இருந்த்திருக்கலாமோ என்று தோனுது. 🙂
//
தலைப்பு நீண்டுவிடும்.. அத்துடன் IT படித்த பெண்கள் அதிகமாக இருப்பது மென்பொருள் கம்பனியில் தானே.. எனவே அதனை வேறாகச் சொல்ல வேண்டுமா.. அதனால்தான் தவிர்த்தேன்.. அத்தோடு இக்கரைக்கு அக்கரை பச்சைதானே அதுதான்.. அதுதான் IT துறையே பச்சையாகத் தோணவில்லை… 🙂
@நிமல்-NiMaL said…
// என்ன சொல்ல, ஆண்களும் இப்படியே தான்…!!!
என்ன எங்கள் சமுதாயத்தில் ஆண்கள் அடுப்பில் பாத்திரம் கரிபடிய சமைப்பதில்லை ஆதலால் இப்படி வித்தியாசமாக தெரிகிறது…
So.. ITஇல் இல்லாத பெண்களே, IT ஆண்களிடமிருந்தி எஸ்கேப்…!
//
இதைத்தான் எதிர்பார்த்தேன்.. நன்றி நிமல்..
@Balavasakan
// ஹலோ எனக்கென்னவோ இது உங்கள் அனுபவம் போல தெரிகிறது முதலில் காதல் கவிதை இப்போது ஊடலா….சரி சரி என்ன பண்ணுறது பாத்து அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கோ…………
//
🙂 .. என்ன Balavasakan இது.. சும்மா கிறுக்கிய கவிதைகளுக்கும் இந்தப் பதிவிற்கும் முடிச்சுப்போடுகின்றீர்கள்.. எப்படித்தான் உங்களால் இப்படி எல்லாம் யோசிக்கத் தோன்றுகின்றதோ.. முடியல… 😉 😉
@யோ வொய்ஸ் (யோகா)
// IT யிலுள்ள பெண்ணை நான் காதலிக்க போவதில்லை//
ஆமாம்.. உங்களையும் என்னையும் காதலிக்க IT பொண்ணுங்க லையினில நிக்கிறாங்க பாருங்கோ.. 😉 😛
நான் சும்மா எழுத அதுக்கு நீங்க இப்படி எல்லாம் முடிவெடுத்தா பாவமுங்க அவங்க… 😛
@வலசு – வேலணை
//
கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்.
🙂
//
நீங்க இந்தக் கத்தரிக்காயை விடமாட்டீங்க போலக்கிடக்கு.. பார்ப்போம்..
@சந்ரு
// பகிர்வுக்கு நன்றிகள்
நன்றிகள் சந்ரு… 🙂