சில பாடல்கள் அப்படியே மனதின் அடி நாதத்தை வருடிச்சென்று விடுகின்றன. கேட்கக் கேட்கத் திகட்காமல் மேலும் மேலும் பாடலின் ஊடே இலயித்துப் போய்விடும் மனது. மென்மையாக பரவும் சங்கீதம் மனதின் அந்தரங்கத்தில் எப்போதும் மீள மீள ஒலிபரப்பாகிக் கொண்டே இருக்கும்.
அத்தகைய பாடல்கள் முன்னர் திரைப்படங்களின் ஊடாகவே மக்களின் மனங்களை அடைந்தது. ஆனால் இன்று பற்பல பாடல்கள் பல்வேறு வழிகளில் மனங்களை நிறைக்கின்றன. அது போலத்தான் இந்தப் பாடல் காதலிக்க நேரமில்லை என்ற விஐய்த் தொலைக்காட்சி தொடருக்காக விஐய் அன்ரனியால் இசையமைக்கப்பட்ட காதலிக்க நேரமில்லையின் தலைப்பு பாடல்.
இந்தப் பாடல் ஓர் பெண்ணின் உணர்வுகளினூடு கலந்திருந்தாலும் தன் காதலை தன் பிரியங்கமானவளுக்கு உணர்த்த துடிக்கும் ஓர் ஆணுக்கும் பொருந்தும்.
தேக்கி வைத்த காதல்தனை அவளிடம் சேர்க்க வழிதெரியாது, அவள் விழிதனில் வழி தேடிய காதல்.. கனவில் மட்டும் காதல் செய்து தன் இரவை தொலைத்த காதல்.. மஞ்சள் பூக்கள் உதிரும் சாலைவழி பேசிச் சென்ற காதல்.. இந்த வரிகளை எழுதும் போதுகூட என் மனதில் மென்மையாக எதிரொலிக் கொண்டிருக்கின்றது இந்தப் பாடல்.. பாடல் வரிகள் காதலை அற்புதமாக வடிக்கின்றன. உயிர் உருகும் வரிகள்..
பாடகியின் குரல் இன்னும் அழகு சேர்கின்றது பாடலுக்கு. வார்த்தைகளின் உச்சரிப்பின் தெளிவும் மயக்கும் குரலும் பாடலின் சிறப்பிற்கு அணிகள். இசை அதைவிடவும் அற்புதம். சற்றுக் கேட்டுபாருங்கள் பாடலை. பாடல் எப்போதோ வெளிவந்து விட்டது. ஆதனால் என்ன, நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற சின்ன ஆசையில் பதிகின்றேன்..
பாடலாசிரியர் : தேன்மொழி தாஸ் (Thenmozhi Das)
பாடகி : சங்கீதா (Sangeetha)
இந்தத் தகவல்களைத் தேடிப்பெற்றுத் தந்த நண்பனுக்கு நன்றிகள்.
பாடலை தரவுறக்கி சேமிக்க இங்கே சொருகுங்கள்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வரத் தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லியனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகின்றேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவைக் கொல்கின்றேன்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
யாரோ..
உன்காதலில் வாழ்வது யாரோ..
உன் கனவினில் நிறைவது யாரோ..
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ..
ஏனோ…
என் இரவுகள் நீள்வது ஏனோ..
ஒரு பகல் எனச் சுடுவதும் ஏனோ..
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..
காதல் தர நெஞ்சம் காத்திருக்கு
காதலிக்க அங்க நேரம் இல்லையா..
இலையைப் போல் என் இதயம் தவறிவிழுந்தேன்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வரத் தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லியனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்.
Categories: எனது பார்வையில், குறிப்புக்கள், பாடசாலை நாட்கள், பாதித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
நீங்கள் பெண்ணாயிருந்தால் இப்பாடலில் உணர்வுகள் மிகவும் பாதிக்கும். நான் கர்மவினைப்லனால் பெண்ணாக பிறக்கும் பாக்கியம் அடைந்திலேன். எனினும். இப்பாடல் என் மகள் ஒருத்தி பாடுவது போல ஒரு சோகம்.
பாடலும் இசையும் இனிமை. கவிச்சுவை நன்று.
பாவலர் மற்றும் பாடகர் பெயர்களை வெளிவிட மறந்தது ஏனோ?
ஆமாம், ஒரு அற்புதமான் பாடல். ஒரு வருடத்திற்கு முதலே இதைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்து இருந்தது. அப்போ தரவு இறக்கி வைத்து இருந்ததை வைரசுக்கும் ரொம்ப பிடிச்சு போனதில் பறித்து விட்டது. இன்று facebook மூலம் திருப்ப கிடைச்சு இருக்கு. 🙂
aww! i love this song more than anything:) thanks for sharing the lyrics.
@கள்ளபிரான்
உண்மைதான் உணர்வுகள் என்னை பாதித்ததை விடவும் வரிகளின் எளிமையும் இசையின் ஆழமும் மிகவும் கவர்ந்துள்ளது. பாடலிற்கு கவிஞர் வார்த்தைகளைத் தேடித்து கோர்த்துள்ளார்.. அழகு.
பாடலாசிரியர் மற்றும் பாடகியின் பெயர்கள் இதுவரை அறியமுடியவில்லை.. அறிந்ததும் கண்டிப்பாகப் பகிர்வேன்..
நன்றி deepika..
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
அருமையான பாடல், நீண்ட நாட்களுக்குப்பிறகு மீண்டும் கேட்டிருக்கிறேன். நன்றி
ஆரபி உங்கள் வீட்டுக் கணணியின் வைரசுக்கும் உங்களைப்போலவே நல்ல இரசனை போல. பாடலை இங்கே தரவுறக்கிச் சேமித்துக் கொள்ளுங்கள்.
பாடலை தரவுறக்கி சேமிக்க இங்கே சொருகுங்கள்
நன்றி சுபாங்கன் மற்றும் செ.சரவணக்குமார் 🙂
பாடகி: Febiயாம் சிறிகாந்த் தேவாவின் மனைவியாம்…
Hai
migavum alagana padal varigal
song super da machi