எமகெல்லாம் ஒளி கொடுக்க நீர் நெய்விளக்கானீர்
அந்திவானம் சிவக்கும் நேரம் கீழ்வானக் கரையில்
அந்த சூரியனே உங்களுக்காக சிலகணம் செந்தழலாய்யொலிக்கும்
மண்ணகத்தில் மரங்களும் உங்களின்மீது பூமழை தூவும்
விண்ணகத்து விண்மீன்கள் காரிருளையும் கிழித்து ஒளிமழைதூவும்
நிலையில்லா மேகமும் தன்நினைவாக பன்னீரிரைத் தெளிக்கும்
இத்தனையும் அவைகள் செய்ய…!!!!
நாங்கள் …??????
எமகாக உணர்வைச் சுமந்து மீளாத்துயிலில்
இன் உயிரை ஒளியாக்கி
எம் இருளகற்ற முயன்றீர்களே..
காலங்கள் தோறும் உங்கள் நினைவு சுமக்கும்
சிலுவைகளாவோம்…!!!
காலங்கள் தோறும் உங்கள் புகழினை பறைசாற்றும்
பாலங்களாவோம்…!!!
காலங்கள் தோறும் உங்கள் வீரம் புகழும்
பறைகளாவோம்…!!!
இதுவே நாங்கள் உங்களுக்குச் செய்யும்
பிரதியுபகாரம்..!!!!!
Categories: எனது பார்வையில்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
// எமகெல்லாம் ஒளி கொடுக்க நீர் நெய்விளக்கானீர்
அந்திவானம் சிவக்கும் நேரம் கீழ்வானக் கரையில்
அந்த சூரியனே உங்களுக்காக சிலகணம் செந்தழலாய்யொலிக்கும்
மண்ணகத்தில் மரங்களும் உங்களின்மீது பூமழை தூவும்
விண்ணகத்து விண்மீன்கள் காரிருளையும் கிழித்து ஒளிமழைதூவும்
நிலையில்லா மேகமும் தன்நினைவாக பன்னீரிரைத் தெளிக்கும்
இத்தனையும் அவைகள் செய்ய…!!!!
நாங்கள் …?????? ////
அழுகின்றோம்…………
நித்தமும் அழுவதை தவிர
வேறென்ன செய்யமுடியும் ..எம்மால்…
தங்களின் கவிதை தான் எமது பதிலும்.
ம்…அருமையான வரிகள்…வாழ்த்துக்கள்………
உணர்வுகளின் வெளிப்பாடு நன்று.
\\அந்திவானம் சிவக்கும் நேரம் கீழ்வானக் கரையில்
அந்த சூரியனே உங்களுக்காக சிலகணம் செந்தழலாய்யொலிக்கும்
மண்ணகத்தில் மரங்களும் உங்களின்மீது பூமழை தூவும்
விண்ணகத்து விண்மீன்கள் காரிருளையும் கிழித்து ஒளிமழைதூவும்
நிலையில்லா மேகமும் தன்நினைவாக பன்னீரிரைத் தெளிக்கும்//
நல்ல வரிகள் சுபானு…
எங்களாலும் இந்த பதிலை தவிர வேறென்ன முடியும்
\\அந்திவானம் சிவக்கும் நேரம் கீழ்வானக் கரையில் அந்த சூரியனே உங்களுக்காக சிலகணம் செந்தழலாய்யொலிக்கும் மண்ணகத்தில் மரங்களும் உங்களின்மீது பூமழை தூவும் விண்ணகத்து விண்மீன்கள் காரிருளையும் கிழித்து ஒளிமழைதூவும் நிலையில்லா மேகமும் தன்நினைவாக பன்னீரிரைத் தெளிக்கும்//நல்ல வரிகள் சுபானு…எங்களாலும் இந்த பதிலை தவிர வேறென்ன முடியும்
ம்…அருமையான வரிகள்…வாழ்த்துக்கள்………