இமைகளின் பின்னால்
உன் விழி வரைந்த கோடுகள்
விழிகளின் நடுவே
உன் பார்வை ஸ்பரிசங்களாகி
சிந்தையில் எப்போதும்
உன் நினைவுகளில் யாசகனாக்கி
இதயத்தின் அந்தரங்கத்தில்
உன் காதலை கவிதையாக படிக்கின்றனவே
மயிலிறகாய் உன் பார்வைகள்
Categories: கவிதை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
கவிதை நன்றாக இருக்கிறது ஆனால் உங்களுக்கு ஏதோ ஆச்சுது என்பது மட்டும் உண்மை…
அருமை அருமை!
கவிதை நல்லாருக்கு சுபானு.
ஆனால் இருந்தாற்போல் இப்படி எப்படி?
நன்றி சந்ரு.. அப்படி ஒன்றும் ஆகவில்லை.. சும்மா நீண்ட காலமாக எதுவும் எழுதவில்லை.. அதுதான் சும்மா கிறுக்கினான்.. மற்றும்படி கவிதை என்று ஒன்றும் இல்லை..
நன்றி ஊர்சுற்றி..
நன்றி jeyamee
//
ஆனால் இருந்தாற்போல் இப்படி எப்படி?
// அதுவா தோணிச்சு.. இதுக்கெல்லாம் என்ன ரூம் போட்டா யோசிப்பாங்க என்ன..?
அருமை,அருமை.
🙂
இதயத்தின் அந்தரங்கத்தில்
எத்தனை இரகசிய நாடகங்கள்.
நன்றி raj
அருமை சுபானு தொடருங்கள் வாழ்த்துக்கள்
இமைகளில் ஊடலோ
உயிர்களின் ஆடலோ
உணர்வுகளின் பாடலோ – இது
இரு இதயங்களின் கூடலோ???
//இமைகளின் பின்னால்
உன் விழி வரைந்த கோடுகள்
நல்லாயிருக்கு சுபானு…
கவிதை ரொம்பவே நல்லா இருக்கு….
ஆனால், அனுபவம் இல்லை. கிறுக்கள் என்று நீங்க சொல்லுறதையும் நம்பீட்டம்… 🙂
நன்றி நங்கை… நம்பியதற்கும்..
உன் நினைவுகளில் யாசகனாக்கி
அருமை அருமை