உன்னைக் காணாத பொழுதுகளில்
என் விழி மடல் துடிக்கும் ஓசை
உன் அனித்த செவிகளுக்கு ஏன் இன்னும் கேட்கவில்லையடி..
உன் விழிகளோடு பேசாதபோது
என் விழிகளில் நிலவும் மௌன வறட்சி
உன் ஈரக் கண்களுக்கு ஏன் இன்னும் தெரியவில்லையடி..
உன் மௌனப் பார்வைகளின் நெருடலில்
என் இதயத்தில் வழிகின்ற இரத்தம்தான்
உன் உதட்டுச் சிவப்பென ஏன் இன்னும் புரியவில்லையடி..
உன் தலைதுவட்ட பறக்கின்ற துமிகளாய்
என் கண்களின் ஈரமும்
உன் என்விழி தீண்டாப் பார்வைகளில் காய்கின்றதே ஏன்
இன்னும் பார்க்கவில்லையடி..
உன் நிலம் பார்த்த பார்வைகளில்
என் காதல் உரைக்க காலடிச் செடி கொடிகளுங் கூட
உன் காலடியில் பூக்களாப் பூத்துக் குலுங்குகின்றனவே ஏன் இன்னும் ஏற்கவில்லையடி..
உன் கண்களின் கவசம்
என் காதல் பார்வைதனைக் குருடாக்க
உன் வேல் இமைகளில் நடாத்தும் தந்திரப்போர் ஏன் இன்னும் உனதவைக்கு வரவில்லையடி..
உன் பார்வைகள் எனதாகி
என் பார்வைகள் உனதாகி
நம் பாதைகளில் காதல் பூக்களை காலெமெல்லாம்
தூவுவதற்கு ஒரே முறை பாராயோடி..
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
பிரமாதம் சுபானு ….
தாங்கள் சிக்கிகொண்ட அந்த வேல் விழியால் யாரோ????? 😉
அருமை இன்னாடா இது கணினி பொறியியலாளர் நிலமையே இப்பிடியா அட…யார்ரா அது பொண்ணு இவ்வளவு திமிரு…………
@காருண்யா
//பிரமாதம் சுபானு ….
தாங்கள் சிக்கிகொண்ட அந்த வேல் விழியால் யாரோ?????
//
நன்றி காருண்யா.. அப்படியாரும் இல்லை… சும்மா கற்பனையில் கிறுக்கிய கிறுக்கல்கள்..
@Balavasakan
//அருமை இன்னாடா இது கணினி பொறியியலாளர் நிலமையே இப்பிடியா அட…யார்ரா அது பொண்ணு இவ்வளவு திமிரு…………//
நன்றி Balavasakan. சும்மா கற்பனைதானப்பா… கவிதைக்கு கற்பனையென்னும் பெண்தான் காரணம்.. வேறுயாருமல்ல..
எல்லோரும் சொல்லும் பதில்தான்… இருந்தாலும் நல்ல வரிகள்
சுபானு, வழமை போல் உங்கள் கிறுக்கல் பிரமாதமா இருக்கு.. இது உங்கள் அனுபவம் இல்லை. முற்று முழுதாக கற்பனையில் எழுதிய கிறுக்கல் என்பதை 100% நம்பிறன்… 🙂
நன்றி சந்ரு
@ஆரபி
//சுபானு, வழமை போல் உங்கள் கிறுக்கல் பிரமாதமா இருக்கு.. இது உங்கள் அனுபவம் இல்லை. முற்று முழுதாக கற்பனையில் எழுதிய கிறுக்கல் என்பதை 100% நம்பிறன்… 🙂
//
நன்றி ஆரபி.. உண்மைகள் சொன்னா நம்பவேண்டும்.. சரிதானே..
Labels: கிறுக்கல்கள், பாதித்தவை
அப்படீன்னு இருந்திச்சு அதான் கேட்டன் :p
@காருண்யா
//Labels: கிறுக்கல்கள், பாதித்தவை
அப்படீன்னு இருந்திச்சு அதான் கேட்டன் :p
//
ஆகா.. விடமாட்டீங்க போலக்கிடக்கு.. சும்மா ஒரு பில்டப்தான்…
\\என் விழிகளில் நிலவும் மௌன வறட்சி
உன் ஈரக் கண்களுக்கு ஏன் இன்னும் தெரியவில்லையடி.. //
\\உன் கண்களின் கவசம்
என் காதல் பார்வைதனைக் குருடாக்க //
மிக அழகான வரிகள் சுபானு…
மிக அழகான ………………………..(கற்பனை/உண்மை)
சரியானதைநீங்களே கோடிட்டு கொள்ளுங்கள்.
@jeyamee
//
\\என் விழிகளில் நிலவும் மௌன வறட்சி
உன் ஈரக் கண்களுக்கு ஏன் இன்னும் தெரியவில்லையடி.. //
\\உன் கண்களின் கவசம்
என் காதல் பார்வைதனைக் குருடாக்க //
மிக அழகான வரிகள் சுபானு…
மிக அழகான ………………………..(கற்பனை/உண்மை)
சரியானதைநீங்களே கோடிட்டு கொள்ளுங்கள்.
//
நன்றி ஜெயமே.. நான் என்ன சொல்ல.. உங்களுக்குத் தெரியாதா.. கற்பனையின் வரிகள் இப்படித்தான் இருக்கும் என்று,…
🙂
// யார்ரா அது பொண்ணு இவ்வளவு திமிரு…..
இருக்குமிடத்தில் இருப்பதாலேயே இந்நிலமை. கொஞ்ச நாள்ல எல்லாம் சரிய வரும். உதாரணமாக Expo நிறுவனம் கொஞ்ச நாளா காட்டின திமிரு இப்ப கொஞ்சம் அடங்கிப் போச்சுத் தானே..
நல்ல கற்பனை வளம்.
எளிமையான வார்த்தைகளை கையாண்டு நல்லதொரு கவிதையை தந்துள்ளீர்
ஏன் இந்த புன்முறுவல் ஜெயமே.. ??
@பால்குடி
//
இருக்குமிடத்தில் இருப்பதாலேயே இந்நிலமை. கொஞ்ச நாள்ல எல்லாம் சரிய வரும். உதாரணமாக Expo நிறுவனம் கொஞ்ச நாளா காட்டின திமிரு இப்ப கொஞ்சம் அடங்கிப் போச்சுத் தானே..
//
🙂 உள்துத்து என்கின்றது இதுதான்..
@இளவழுதி வீரராசன்
// நல்ல கற்பனை வளம்.
எளிமையான வார்த்தைகளை கையாண்டு நல்லதொரு கவிதையை தந்துள்ளீர்..
//
நன்றி இளவழுதி வீரராசன்..
இல்லை சுபானு!!
உங்கள் பதிலில் முரண்படுடா இல்லை உடன்பாடா
உள்ளது என்பதில் ஏற்பட்ட சந்தேகத்தில்,
என்னால் முடிந்தது
இவ்வளவே…..
ஆகா..
ஒன்றும் இல்லை ஜெயமே..
//கற்பனையின் வரிகள் இப்படித்தான் இருக்கும் என்று,…உங்களுக்குத் தெரியாதா என்ன..? //
ஏன் என்றால் நாங்கள் பில்டப் மட்டும்தான் கொடுப்பவர்கள்.. 😉