புரட்சி கவிஞர் பாரதிதாசனின் இந்தக் கவிதை அந்த வானத்து சூரியனின் புகழ்தனை அழகாகச் சொல்கின்றனது. என்ன ஒரு கவிதை.. இன்று ஏனோ மிகவும் ஆழமாக உணர்வுகளைப் பிழிந்து இரசிக்கச் சொல்கின்றது.
இளங்கதிர்எழுந்தான்; ஆங்கே
இருளின்மேல் சினத்தை வைத்தான்;
களித்தன கடலின் புட்கள்;
எழுந்தன கைகள் கொட்டி!
ஒளிந்தது காரி ருள்போய்!
உள்ளத்தில் உவகை பூக்க
இளங்கதிர், பொன்னிண றத்தை
எங்கணும் இறைக்க லானான்.
என்றென்னைக்கும் அவன் சூரியன்தான்.. நினைத்தாலே சுட்டெரிக்கும் இருள்களுக்கு..
Categories: எனது பார்வையில், வாழ்த்துக்கள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
விண்முதல் மண் வரைக்கும் வியக்கும் உன் தனித்தன்மை தன்னைக் கண்ணிலே கண்டேன்..
//என்றென்றைக்கும் அவன் தான் சூரியன்