logo

Month: November 2009

யார் நீங்கள்..?

November 26, 2009

எமகெல்லாம் ஒளி கொடுக்க நீர் நெய்விளக்கானீர் அந்திவானம் சிவக்கும் நேரம் கீழ்வானக் கரையில் அந்த சூரியனே உங்களுக்காக சிலகணம் செந்தழலாய்யொலிக்கும் மண்ணகத்தில் மரங்களும் உங்களின்மீது பூமழை தூவும் விண்ணகத்து விண்மீன்கள் காரிருளையும் கிழித்து ஒளிமழைதூவும் நிலையில்லா மேகமும் தன்நினைவாக பன்னீரிரைத் தெளிக்கும் இத்தனையும் அவைகள் செய்ய…!!!! நாங்கள் …?????? எமகாக உணர்வைச் சுமந்து மீளாத்துயிலில் இன் உயிரை ஒளியாக்கி எம் இருளகற்ற முயன்றீர்களே.. காலங்கள் தோறும் உங்கள் நினைவு சுமக்கும் சிலுவைகளாவோம்…!!! காலங்கள் தோறும் உங்கள் புகழினை

Read More

அவன் சூரியன்!

November 25, 2009

புரட்சி கவிஞர் பாரதிதாசனின் இந்தக் கவிதை அந்த வானத்து சூரியனின் புகழ்தனை அழகாகச் சொல்கின்றனது. என்ன ஒரு கவிதை.. இன்று ஏனோ மிகவும் ஆழமாக உணர்வுகளைப் பிழிந்து இரசிக்கச் சொல்கின்றது. இளங்கதிர்எழுந்தான்; ஆங்கே இருளின்மேல் சினத்தை வைத்தான்; களித்தன கடலின் புட்கள்; எழுந்தன கைகள் கொட்டி! ஒளிந்தது காரி ருள்போய்! உள்ளத்தில் உவகை பூக்க இளங்கதிர், பொன்னிண றத்தை எங்கணும் இறைக்க லானான். என்றென்னைக்கும் அவன் சூரியன்தான்.. நினைத்தாலே சுட்டெரிக்கும் இருள்களுக்கு..

Read More

மின்மினி தேசம் : பாகம் 3

November 21, 2009

முன்கதை : பீனிக்ஸ் விண்வெளியோடத்தில் இதுவரை மனித சஞ்சாரமே கண்டிராத தடங்களை நோக்கி ஒளியின் வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தார்கள் இளம் விஞ்ஞானிகள். பீனிக்ஸின் கலந்துரையாடல் அறையில் தமது பயணத்தின் நோக்கம் பற்றியும் வியாழன் கிரகத்தின் நடத்தை மாற்றம் பற்றியும் விளக்கங்களை பானு தனது சக விஞ்ஞானிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான். வியாழனின் மேற்பரப்பில் சடுதியாகத் தோன்றிய ஒளிக்கீற்றின் காரணம் என்ன என அனைவரும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்…. பாகம் 1    ||    பாகம் 2இனி… பிரபஞ்சத்தின் காரிருளையும் ஊடறுத்து மின்னலெனெப்

Read More

என்னை தேடி காதல் என்ற வார்த்தையனுப்பு

November 20, 2009

சில பாடல்கள் அப்படியே மனதின் அடி நாதத்தை வருடிச்சென்று விடுகின்றன. கேட்கக் கேட்கத் திகட்காமல் மேலும் மேலும் பாடலின் ஊடே இலயித்துப் போய்விடும் மனது. மென்மையாக பரவும் சங்கீதம் மனதின் அந்தரங்கத்தில் எப்போதும் மீள மீள ஒலிபரப்பாகிக் கொண்டே இருக்கும். அத்தகைய பாடல்கள் முன்னர் திரைப்படங்களின் ஊடாகவே மக்களின் மனங்களை அடைந்தது. ஆனால் இன்று பற்பல பாடல்கள் பல்வேறு வழிகளில் மனங்களை நிறைக்கின்றன. அது போலத்தான் இந்தப் பாடல் காதலிக்க நேரமில்லை என்ற விஐய்த் தொலைக்காட்சி தொடருக்காக

Read More

உன் விழித்தீண்டல்

November 16, 2009

உன்னைக் காணாத பொழுதுகளில் என் விழி மடல் துடிக்கும் ஓசை உன் அனித்த செவிகளுக்கு ஏன் இன்னும் கேட்கவில்லையடி.. உன் விழிகளோடு பேசாதபோது என் விழிகளில் நிலவும் மௌன வறட்சி உன் ஈரக் கண்களுக்கு ஏன் இன்னும் தெரியவில்லையடி.. உன் மௌனப் பார்வைகளின் நெருடலில் என் இதயத்தில் வழிகின்ற இரத்தம்தான் உன் உதட்டுச் சிவப்பென ஏன் இன்னும் புரியவில்லையடி.. உன் தலைதுவட்ட பறக்கின்ற துமிகளாய் என் கண்களின் ஈரமும் உன் என்விழி தீண்டாப் பார்வைகளில் காய்கின்றதே ஏன்இன்னும்

Read More

IT பொண்ணா?

November 13, 2009

எங்கெங்கு காணினும் மென்பொருள் கம்பனிகளடா.. உலகின் எங்கோ மூலையில் இருக்கும் client இற்கு இங்கிருந்து மென்பொருள் என்னும் கட்டம் கட்டுகின்றார்கள் இவர்கள். உண்மையில் இதுவும் ஒரு கட்டடம் கட்டும் தொழில்தான்.. ஆரம்ப அடித்தளத்தில் இருந்து மேல் விட்டத்தில் தொங்கும் திருஷ்டிப் பூசனி வரை இங்கிருந்து தான் வடிவமைத்துக் கொடுக்கப்படுகின்றது. பலசமயங்களில் client இனை அந்தக் கட்டடித்தில் குடியமர்த்தி அவர்கள் எதுவித பிரச்சினையும் இல்லாது இயங்குகின்றார்களா என்றும் பார்க்க வேண்டியது இந்த மென்பொருள் கம்பனிகளின் வேலையாகின்றது. இப்படியான மென்பொருள்

Read More

மயிலிறகாய் உன் பார்வை

November 7, 2009

இமைகளின் பின்னால் உன் விழி வரைந்த கோடுகள் விழிகளின் நடுவே உன் பார்வை ஸ்பரிசங்களாகி சிந்தையில் எப்போதும் உன் நினைவுகளில் யாசகனாக்கி இதயத்தின் அந்தரங்கத்தில் உன் காதலை கவிதையாக படிக்கின்றனவே மயிலிறகாய் உன் பார்வைகள்

Read More

Recent Posts

  • அழகிய விழியாள் தரிசனம் தேடி
  • நாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்
  • “வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா
  • நான்தான்… ஆறாம் திணை!
  • மரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…?. இது ஏழம் அறிவு
  • மாயாவியுடன் சில காலம்
  • ஊஞ்சல் iOS அலைபேசி இணைய உலாவிகளில்
  • ஒரு குட்டி ஏஞ்சல் – தெய்வத் திருமகள்
  • மனிதாபிமானம் பலியாகும் போது…

Copyright ஊஞ்சல் 2023 | Powered by WordPress