யாழ்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலங்களை என்றும் மறக்க முடியாது. என் பள்ளிக் காலங்களை பசுமையாக்கிய என் இனிய கல்லூரி இந்துக் கல்லூரி.. யாழ் இந்துக் கல்லூரியின் பெருமைகளைப் பற்றிக் பேசுவதே மிகப் பெருமையான விடயம்.. யாழ் இந்துக் கல்லூரியில் கற்பதற்கு முன்ஜென்மத் தவங்கள் நிறைந்திருக்க வேண்டும்.. யாழ் இந்துக் கல்லூரியைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நான் மேலதிக விளக்கங்களையோ அல்லது மேலும் அதன் புகழையோ சொல்லத் தேவையில்லை.. வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும் என்றென்றும்..
அண்மையில் கலையரசி 2009 சஞ்சிகைக்காக இலண்டன் பழையமாணவர் சங்கக் கிளையினால் வெளியிடப்பட்ட “தரணியெல்லாமே புகழ்ந்திடும்” பாடலினைச் சற்றுக் கேட்டுப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.. நீண்ட காலத்தின் பின் வலைப்பதிவின் பக்கம் திரும்புவதற்கும் அந்த திருப்பமும் என் பாடசாலை பற்றி ஓர் பதிவாகுவதும் இந்தக் கலையரசி சஞ்சிகைப் பாடல்தான் காரணம் என நினைக்கும் போது மனதில் மகிழ்ச்சி அலையை பொங்குகின்றது. யாழ் இந்துக் கல்லூரிப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மனமெங்கும் சந்தோசமும் அந்த நாட்கள் மீண்டும் திரும்பாதா என்ற ஏக்கம் மிக்க கவலையும் ஒன்றுசேர மனதில் அலையடிக்கின்றது. என்ன ஒரு கலவையான மனநிலை.. அனுபவிக்க வேண்டும் இந்த அற்புத உணர்வுகளை..
பாடலை சற்றுக் கேட்டுப்பாருங்கள்..
தரணியெல்லாமே புகழ்ந்திடும்
யாழ் இந்துக் கல்லூரியைப் போற்றிடுவோம்
அறிவெனும் கோவில் வாசல்கள்
திறக்கும் அன்னையைப் போற்றிடுவோம்
திசைகள் மாறியே பறந்த போதிலும்
என்றும் எண்ணியே போற்றிடுவோம்
இலங்கை மாநகர் சிறக்க விளங்கிடும்
கல்வி தெய்வத்தைப் போற்றிடுவோம்
தமிழர் யாவரும் தலைகள் நிமிர்ந்திடும்
பெருமை தந்தவளைப் போற்றிடுவோம்
ஈழப் போரிலே வீர மறவரைப்
படைத்தவளைப் போற்றிடுவோம்
தரணியெல்லாமே புகழ்ந்திடும்
யாழ் இந்துக் கல்லூரியைப் போற்றிடுவோம்
Categories: சுயதம்பட்டம், படித்தவை ரசித்தவை, பாடசாலை நாட்கள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
மீண்டும் வாழவிரும்பும் வாழ்க்கை அது.
//யாழ் இந்துக் கல்லூரியில் கற்பதற்கு முன்ஜென்மத் தவங்கள் நிறைந்திருக்க வேண்டும்.. யாழ் இந்துக் கல்லூரியைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நான் மேலதிக விளக்கங்களையோ அல்லது மேலும் அதன் புகழையோ சொல்லத் தேவையில்லை//
உண்மை.
பதிவிற்கு நன்றி
சோதிலிங்கம் sir இடமிருந்து அறிந்தது போதாதா? இங்குமா?
lol