கவிப் பேரரசு வைரமுத்துவின் காதலித்துப் பார் என்ற கவிதையை வாசிச்சிருப்பீர்கள். அழகான காதல் கவிதை. அண்மையில் லோசன் அண்ணாவின் ஃபெயில் பண்ணிப்பார் என்ற சுவாரஸ்யமிக்க கவிதையை வாசித்தேன். அழகாக ஃபெயில் பண்ணிய மாணவன் ஒருவனின் உணர்வுகளை வடித்திருந்தார். மிகவும் இரசித்து வாசித்தேன்.
சரி ஃபெயில் பண்ணிய மாணவன் ஒருவனின் உணர்வுகளை தெளிவாக பிரதி பண்ணியிருந்த அந்தக் கவிதைப் படித்திருப்பீர்கள். இப்போது அதே மாணவன் 3 A எடுத்திருந்தால் எப்படியிருக்கும். இதோ லோசனின் ஃபெயில் பண்ணிப்பார் இற்குப் போட்டியாக சுபானுவின் இந்த 3 A எடுத்துப்பார் (இங்கு 3 A என்பதை Three A என வாசியுங்கள்).
லோசன் அண்ணா மன்னித்து விடுங்கள்… சும்மா ஒரு கற்பனைக் கவிதை அவ்வளவுதான். வைரமுத்துவே நன்றி..
3 A எடுத்துப்பார்
உன் பாடசாலை
அறிவிப்புப் பலகையில்
உன் பெயர் மிளிரும்
எத்தனை பெயர்கள் இருந்தலும்
உந்தன் பெயர் மட்டும்
கண்களுக்கு தனித்துப் பிரகாசிக்கும்
கால்கள் தரையில் இருந்தும்
இரண்டடி மேலே மிதப்பாய்
உனது பெயர் உனக்கே அழகாய்த் தெரியும்
உலகமே புதிதாய்த் தெரியும்
3 A எடுத்துப்பார்
இனிமேல் தொட்டுவிடும் தூரம் தான்
வானத்து சூரியன் என்பாய்
மேகங்களை விசிறிவிட
அழைத்தாலும் அழைப்பாய்
நாள் தோறும் நாளேடுகளில்
உன்பெயர் தேடுவாய் – பெயர்
வரும் வரை தவித்திருப்பாய்
வந்து விட்டால் பரவசப்படுவாய்
பன்னிரண்டில் font size இருந்தும்
நாற்பத்தெட்டில் உன்பெயர் இருப்பதாய் உணரவாய்
உனக்கே நீ இறக்கை பூட்டி பறக்கப்பார்ப்பாய்
நீ நடக்கும் பாதைகளில் எல்லாம்
உன்னைப் பாராட்டத்தான்
மரங்கள் பூ மழை பொழிகின்றதென்பாய்
நிலவும் உன்னைப் பாராட்டவே வந்ததென்பாய்
3 A எடுத்துப்பார்
சந்தோசத்தில் மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா?
வாழும் போதே அந்த வானைத்
தொடவேண்டுமா?
உள்ளம் துள்ளுகின்ற சுகம்
அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள்ளே
காதலிக்கத் தெரியுமா?
3 A எடுத்துப்பார்
உன் நெஞ்சில் உறுதி பிறக்கும்
உன் நடையில் திமிர் தெறிக்கும்
உன் பேச்சில் தனித்துவம் மிளிரும்
உன் கண்களில் ஒளி பிறக்கும்
3 A எடுத்துப்பார்
பாராட்டுமழையில் நனைந்து நனைந்தே
திழைக்க வேண்டுமா
சந்தோசக் கடலில் மூழ்கி மூழ்கியே
மூச்சுத் திணற வேண்டுமா
உனக்கே நீ புதியாய் வேண்டுமா
சபையில் தனியாகவும்
தனியே சபையாக்கவும் திகழ வேண்டுமா
3 A எடுத்துப்பார்
சின்னச்சின்னப் பாராட்டுகளில்
திணற முடியுமே
அதற்காகவேனும்
நீ பார்த்தும் திரும்பாத பெண்ணின்
உதட்டிலும் சிரிப்பு வேண்டுமா
அதற்காகவேனும்
தென்றலும் உன் பக்கம் திசைமாறி வீச
நீ நடைபோட வேண்டுமா
அதற்காகவேனும்
3 A எடுத்துப்பார்
சின்னச் சின்ன
சந்தோசங்களில் நீ
தொலைந்து போக வேண்டுமா
அதற்காகவேனும்
நடந்துகொண்டே மிதக்கவும்
மிதந்துகொண்டே நடக்கவும்
அதற்காகவேனும்
புலன்கள் ஐந்தையும்
புதுப்பிக்க முடியுமே
அதற்காகவேனும்
3 A எடுத்துப்பார்
சொர்க்கம் என்பது
இங்கேயே நிச்சயம்
3 A எடுத்துப்பார்
பிற்குறிப்பு : யாழ்பாணத்தில் படித்தவர்களுக்குத்தான் மேல் உள்ள அனுபவங்கள் கூடுதலாகப் பொருந்தும். பத்திரிகைச் செய்திகள், மற்றும் பாராட்டு நிகழ்வுகள் போன்றன.
நண்பர் ஆதிரையின் கடலேறி : பல்கலை வந்து பார் என்றும் பதிவையும் இந்தப் பதிவுடன் வாசித்துப்பாருங்கள். பின்னரான நிகழ்வுகள் இங்கே தெரியும்..
Categories: எனது பார்வையில், கவிதை, குறும்புகள், பாடசாலை நாட்கள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
எல்லாம் ஒரு அனுபவம்தான். இல்லையா?
அனுபவித்து எழுதியதா?அருமையான வடிப்பு…
வாவ் சுபானு! உண்மையிலே அருமையாக இருந்தது. அழகான வரிகள். கவிதை மிக மிக நன்று. வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் சுபானு.. 3A எடுத்ததற்கும்,கவிதைக்கும்..
நேற்றே உங்கள் பாராட்டு பின்னூட்டம் பார்த்தேன்.. நன்றி..
வைரமுத்துவின் அதே சந்தங்களில் உங்கள் வார்த்தைகள் அழகாய் வந்துள்ளன..
ரசித்த சில வரிகள்..
//பன்னிரண்டில் font size இருந்தும்
நாற்பத்தெட்டில் உன்பெயர் இருப்பதாய் உணரவாய்//
//சபையில் தனியாகவும்
தனியே சபையாக்கவும் திகழ வேண்டுமா//
//நீ பார்த்தும் திரும்பாத பெண்ணின்
உதட்டிலும் சிரிப்பு வேண்டுமா //
3A எடுத்தவனுக்கும் என் போல் பெயிலானவன் தான் கவிதைக்கு வழிகாட்டிறான் பார்த்தீர்களா? 😉
ம்ம் எனக்கும் ஞாபகம் வருது…
என்ன ஒரு மகிழ்ச்சி.. ஆனால ஒரு 5 மாசத்தில எல்லாம் காலி..
இப்ப மறுபடியும் மகிழ்ச்சி…
@Subankan
//எல்லாம் ஒரு அனுபவம்தான். இல்லையா?
//
ம்.. கொஞ்சம் சுயதம்பட்டமும் கலந்தது.. 😉
@Sinthu
//அனுபவித்து எழுதியதா?அருமையான வடிப்பு…
//
அனுபவித்ததை எழுதியது… மிக்க நன்றி சிந்து…
@யாழினி
// வாவ் சுபானு! உண்மையிலே அருமையாக இருந்தது. அழகான வரிகள். கவிதை மிக மிக நன்று. வாழ்த்துக்கள்!
//
நன்றி நன்றி நன்றி .. யாழினி
@LOSHAN
//வாழ்த்துக்கள் சுபானு.. 3A எடுத்ததற்கும்,கவிதைக்கும்..
//
மிக்க நன்றியண்ணா.. அதெல்லாம் பழைய கதை. மீள ஞாகப்படுத்தியது உங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். 🙂
// வைரமுத்துவின் அதே சந்தங்களில் உங்கள் வார்த்தைகள் அழகாய் வந்துள்ளன..
ரசித்த சில வரிகள்..
//பன்னிரண்டில் font size இருந்தும்
நாற்பத்தெட்டில் உன்பெயர் இருப்பதாய் உணரவாய்//
//சபையில் தனியாகவும்
தனியே சபையாக்கவும் திகழ வேண்டுமா//
//நீ பார்த்தும் திரும்பாத பெண்ணின்
உதட்டிலும் சிரிப்பு வேண்டுமா //
//
ஆகா.. நன்றி.. சும்மா ஒரு முயற்சிபண்ணிப்பார்த்து. நல்லா வந்திருக்கு போல.. 😉
//
3A எடுத்தவனுக்கும் என் போல் பெயிலானவன் தான் கவிதைக்கு வழிகாட்டிறான் பார்த்தீர்களா? 😉
//
அதெல்லாம் சும்மா பில்லப்புக்கு மட்டும்தான்.. வேற எதுக்கும் உதவாது அண்ணா..
@புல்லட்
// ம்ம் எனக்கும் ஞாபகம் வருது…
என்ன ஒரு மகிழ்ச்சி.. ஆனால ஒரு 5 மாசத்தில எல்லாம் காலி..
இப்ப மறுபடியும் மகிழ்ச்சி…
//
ம்… நீங்களும் அனுபவித்தவர்தானே.. 5 மாதங்களில் எல்லாம் காலி என்பது நிட்சயமான உண்மை அண்ணா..
அடப்போடா ஒரு S எடுப்பதே எவ்வளவு கஸ்டம் என்பது என்னைப்போன்றவர்களுக்குத் தான் தெரியும். ஒன்று மட்டும் சொல்கின்றேன் கோபிக்காமல் கேட்கவும்
3A எடுத்தவன் எல்லாம் புத்திசாலி அல்ல All F எடுத்தவன் எல்லாம் முட்டாளும் அல்ல.
கவிதையும் வரிகளும் அழகு.
இன்னொரு விடயம் பெரும்பாலும் கணிதம் விஞ்ஞானம் படிக்கும் மாணவர்கள் அவ்வளவாக கவிதை கதை எழுதமாட்டார்கள் என சிலர் சொல்வார்கள் அவற்றைப் பொய்யாக்கியதில் நீங்களும் ஒருவர். ஹாஹா மற்றவர்களை நான் சொல்லமாட்டேன்
//3A எடுத்தவன் எல்லாம் புத்திசாலி அல்ல All F எடுத்தவன் எல்லாம் முட்டாளும் அல்ல.
//
உண்மைதான் அண்ணா.. நானும் எனது அனுபவத்தில் பார்த்திருக்கின்றேன்..
//கவிதையும் வரிகளும் அழகு.
இன்னொரு விடயம் பெரும்பாலும் கணிதம் விஞ்ஞானம் படிக்கும் மாணவர்கள் அவ்வளவாக கவிதை கதை எழுதமாட்டார்கள் என சிலர் சொல்வார்கள் அவற்றைப் பொய்யாக்கியதில் நீங்களும் ஒருவர். ஹாஹா மற்றவர்களை நான் சொல்லமாட்டேன்.. //
நன்றி வந்தி அண்ணா..
அந்த மற்றவர்களை எனக்கும் தெரியுமே.. 😉 😉 😉
//பன்னிரண்டில் font size இருந்தும்
நாற்பத்தெட்டில் உன்பெயர் இருப்பதாய் உணரவாய் //
அருமை…
ஆனால் என்ன… எனக்கும் உங்கள் தலைப்பிற்கும், கவிதைக்கும் இடையில் பல்லாயிரம் மைல் இடைவெளி…
நல்ல கவிதை…
வாழ்த்துக்கள்…
// வந்தியத்தேவன் said…
அடப்போடா ஒரு S எடுப்பதே எவ்வளவு கஸ்டம் என்பது என்னைப்போன்றவர்களுக்குத் தான் தெரியும். ஒன்று மட்டும் சொல்கின்றேன் கோபிக்காமல் கேட்கவும்
3A எடுத்தவன் எல்லாம் புத்திசாலி அல்ல All F எடுத்தவன் எல்லாம் முட்டாளும் அல்ல. //
பதிவர் சிங்கம், தன்மானத் தமிழன், பதிவர்களின் நாயகன், தானைத்தலைவன், மக்களின் நாயகன் வந்தியத்தேவன் வாழ்க வாழ்க…
@கனககோபி
//
அருமை…
ஆனால் என்ன… எனக்கும் உங்கள் தலைப்பிற்கும், கவிதைக்கும் இடையில் பல்லாயிரம் மைல் இடைவெளி…
நல்ல கவிதை…
வாழ்த்துக்கள்…
//
மிக்க நன்றி கனககோபி.. 🙂
@கனககோபி
//
பதிவர் சிங்கம், தன்மானத் தமிழன், பதிவர்களின் நாயகன், தானைத்தலைவன், மக்களின் நாயகன் வந்தியத்தேவன் வாழ்க வாழ்க…
//
இவ்வளவு பட்டப் பெயர்களா..????
3A super ennum ethu pola arumaiyana kavithaikalai varavekkiren
நன்றி அனோஜன்.
very, very nice