அலுவலகத்தில் நீண்ட வேலைக் களைப்பில் நள்ளிரவு தாண்டிய நேற்றைய இரவில் மெல்லக் காலாற மனதிற்கு இதமாக வெற்றி FM மை மெல்லிய தொனியில் iPod இனை காதுகளுக்கருகில் நீட்டப்பட்ட headset என்னும் தொடுப்பின் ஊடாக மெல்ல இசைக்க விட்டபடி காலி வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தேன். நள்ளிரவில் தூறிச் சென்ற மழையின் பின் இதமாக வீசிக் கொண்டிருந்த மெல்லிய காற்று முகத்தில் படும்போதெல்லாம் எனக்குள் சிலுசிலிர்க்க வைத்தன என் நரம்பு மண்டலங்கள். என்னை நான் மறந்து, கால்கள் வீடு நோக்கி மெல்ல நடை போட்டுக் கொண்டு இருந்த அந்தத் தருணத்தில் என் கண்ணெதிரே..
கால்களில் தங்க கொலுசு கலகலக்க, மின்னலில் வடம்பிடித்த கயிறென சேலைத் தலைப்பு படபடக்க, அதில் தொங்கவிட்டிருந்த மணி அலங்கார வேலைப்பாடுகள் சலசலக்க கண்களில் காந்தப் பார்வைகள் கவர்ந்திழுக்க கைதனில் அகல் விளக்கொன்னை ஏந்தியபடி பாதம் பூமிதனில் பதியாது காற்றில் மிதந்து வந்தாள் நங்கையொருத்தி.. இல்லை இல்லை தேவதை ஒருத்தி.. சொக்க வைக்கும் சொரூபம்.. உண்மையில் சொக்கிப்போய் என் கால்கள் நடை தளர்ந்தன. அந்த அகல்விளக்கைச் சுற்றி மின்னிக்கொண்டிருந்த விட்டில்களும் அவள் பின்னால் பஞ்சென இருந்த இரு இறக்கைகளும் அந்த நிசப்ப வேளையில் என் மனதில் பயம் கொள்ள வைத்தன. யாரவள் என் வீட்டுக்கருகில்? பெரிதாகக் கத்தவேண்டும்போல் இருந்தது.. தொண்டைக்குழி வரை வந்த சப்தம் அந்த இடத்தை விட்டு நகராது தொண்டைக் குழியிலேயெ சிக்கிக்கொண்டது. அவளோ என்னை மிகவும் நெருங்கி விட்டாள். இருவருக்கும் இடையில் மூச்சுக்காற்றுகள் பரிமாறும் தூரம்தான்.. என் சப்த நாடியும் ஒடுங்கியது..
சுபானு.. தேவதை ஒருதியின் குரலில் வந்தது மோகனமா ஹிந்தோளமா? பதிலாக என்னிடம் இருந்து மொனம் நிண்டது. மிண்டும் “என்ன சுபானு சுயத்திற்கு வாங்க..” நிச்சமாக ஒலித்தது ஹிந்தோளமே தான்.. யார் நீங்க? தொண்டைக்குழியில் சிக்கியிருந்த சில்லு உடைபட மெல்ல உருண்டோடும் குடத்தின் கலகலத்த ஓசையென வந்து என்குரல்..
சந்துரு என்னை ஊஞ்சலாட அனுப்பி எத்தனை நாட்களாச்சு தெரியாத உங்களுக்கு, என்னை விட வேலை தானா முக்கியம் என கனிவாக மிரட்டியது தேவதை.. அடடா.. என் விருப்பங்களை நிறைவேற்றி வைக்க வந்த தேவதையா இது.. நன்றி சந்துரு.. இப்படித்தான் தேவதை இருப்பாள் எனத் தெரிந்திருந்தால் அவளைக் காண அன்றே வந்திருப்பேனே.. காலத்தை சற்று நகர்த்தி விட்டேனே.. எனக்குள் கோபங்கள் என்மேலேயே..
என்ன மீண்டும் கற்பனையா.. ஹிந்தோளம் கணீர் என ஒலித்தது. இல்லை… நட்டநடு இராத்திரியில் வந்து இப்படி என் முன்னால் நின்றால் என்ன பேச முடியும்..? நீங்க இஸ்டப்படும் பத்து விருப்பங்ளை சொல்லுங்க நான் நிறைவேற்றி வைக்கின்றேன் என்றாள் அந்த தேவதை.. நிறையக் கேட்க வேண்டும்.. எல்லோரைப் போலவும் பணக்காரணாக மிக்க மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்.. நிறையக் காசு வேண்டும் எனக் கேட்போமா..? வேண்டாம் என்னால் பணத்தை உழைக்க முடியும்.. ஒரு வரத்தை வீணாக்க வேண்டாமே.. என் பல கனவாவே இருக்கின்ற ஆசைகளில் சிலவற்றைக் கேட்போமே என எனது சில விருப்பங்களைப் பட்டியலிட்டேன்..
1. நான் சின்ன வயதில் அனுபவித்த ஷெல் வீச்சுக்களும் பயந்து ஒடுங்கிப் போன விமானக் குண்டு வீச்சுக்களும் இனி இந்த உலகில் பிறக்கும் எந்தக் குழந்தையும் அனுபவிக்கக் கூடாது.. எனது தலை முறையோடே நாம் பட்ட வேதனைகள் அனைத்தும் நீங்கி சந்தோசம் மிக்க வாழ்க்கையை எமது எதிர்காலச் சமுதாயம் அனுபவிக்கட்டும் என வரங்குடு என் தேவதையே..
2. பாட்டன் முப்பாட்டன் எனப் பரம்பரை பரம்பரையாக இந்த மண்ணில் வாழ்ந்து தமது சந்தோசம் துக்கம் என எல்லாத்தையும் இங்கேயே கழித்த மக்களின் முதுகெலும்பை உடைத்தது போன்று திறந்த வெளிச்சிறைதனில் அடைக்கப்பட்டு ஒடுக்கப்ட்டுள்ளார்களே அவர்களின் அபிலாசைகள் பூர்த்திசெய்யத்தக்க நியாயமான ஆசைகளை நிறைவு செய்யக்கூடிய வாழ்க்கையை திரும்பவும் கிடைப்பதற்கு வரமளி என் தேவதையே..
4. என்தன் தாய்மொழி தமிழ் உலகெங்கும் மிக சிறந்த மொழியாகி பட்டிகொட்டி என எங்கும் பரவி தமிழ் மணம் எங்கும் பரவ நீ வரமளி என் தேவதையே..
4. காலங்கள் எவ்வளவு தான் கடந்திருந்தாலும், இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய அந்த சோழ சாம்ராச்சியத்தில் நடந்த நிகழ்வுகளை நினைப்பது எம் அனைவருக்கும் கற்பனையில் மட்டும் கிடைக்கின்ற தனிசுகம். அந்தக் காலத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும்.. குடத்தைக்குச் செல்ல வேண்டும். நந்தினியின் அழகை இரசிச்க வேண்டும். எனக்கு மிகவும் பிடித்த அந்த ஆதித்தயனோடு ஒன்றாகக் குதிரைச் சவாரி செய்ய வேண்டும்.. குந்தவையோடு அளவளாவிட வேண்டும். இதெல்லாம் நீ நடத்தித் தர வேண்டும் என் தேவதையே..
6. இந்தப் பூமி தவி்ர்ந்த வேறு எங்கெல்லாம் உயிரினங்கள் வாழ்கின்றன..? என்னை இந்தப் பிரபஞ்சம் முழுதும் சுற்றிப்பாக்கவல்ல விண்கலத்தில் என்னை சுற்றிப் பார்க்கக் கூட்டிச் செல் என் தேவதையே.. பிரபஞ்சம் முழுதும் பறக்க வேண்டும்.
7. வெற்றியோ தோல்வியோ, கவலையோ சந்தோசமோ எப்போதும் நிலைமாறாத மனநிலையை நான் பெற நீ வரமளிக்க வேண்டும் என் தேவதையே..
8. என் பள்ளி காலம் எனக்கு இன்னும் ஒரு முறை வேண்டும் என் தேவதையே.. : கஸ்தூரியார் வீதி Bus-halt இல் நாள் தோறும் நான் இந்துக் கல்லூரிக்குச் செல்லும் போது அங்கே ஒரு நங்கை வேம்படிப் பாடசாலைக்குச் செல்லதற்காக காத்திருக்கும் பொழுதுகளில் : காணும் போதெல்லாம் எப்போதும் நம் இரண்டு சோடிக் கண்கள் வீசும் அந்த முறைப்புப் பார்வைகளின் வீச்சு : நான் இரசித்த அந்த நாட்கள் : அந்த “பிரியங்க”மான தோழியுடன் மீண்டும் மீண்டும் எமது இரண்டு ஜோடிக்கண்களில் முறைப்புக்கள் : அந்த நாட்கள் எனக்கு வேண்டும் என் தேவதையே..
9. நாள் தோறும் கேட்டு மகிழும் வெற்றியின் விடியல் நிகழ்ச்சியினை லோசன் அண்ணாவுடன் சேர்ந்து ஒருநாளுக்கு நானும் ஒலிபரப்புச்செய்து லோசன் அண்ணாவினை விட நான்றாக சுபானு தொகுத்து வழங்குவான் என பெயர் பெறவேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேற வரமளி என் தேவதையே..
10. நான் காதலிக்கும் சங்கீதத்தை எனக்கு எப்போதும் தடங்களின்றிக் கிடைக்கவும் மாசறாது நான் எப்போதும் காதலித்துக் கொண்டே இருப்பதற்கும் எனக்கு வரமளி என்தேவதையே..
என அந்தக் கணத்தில் மனதில் தோன்றிய பத்து விருப்பங்களை அந்த தேவதையிடம் தெரிவித்தேன். புன்னகைத்து மீண்டும் ஹிந்தோளம் அந்த வீதிகளில் பரவியது. ஆம்.. புன்னதைத்து, உன்விருப்பம் நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் உன்னோடு என் கண்சிரித்தது அந்தத் தேவதை.. சரி நான் உனக்கு வரமளித்தேன் நீ பதிலுக்கு என்னை ஊஞ்சலாட்டுவாய? நி்ட்சயமாக நாளை என் ஊஞ்சலுக்கு வாயேன் என்றேன்.. ம்.. வேறு எங்கெல்லாம் நான் சென்று ஆசைளை நிறைவேற்ற வேண்டும் எனச் சொல்லடா எனச்சிரித்தது என் தேவதை..
TalkOut in Tamil நிமல்
SShathiesh சதீஸ்
மருதமூரான் மருதமூரான்
டயானா ‘அறிந்ததும் அனுபவமும்’ டயானா
இந்த நண்பர்களுக்கும் நான் பெற்ற இன்ப அனுபவத்தை பெற வழிசெய் என் தேவதையை என்றேன்.. அப்போ இப்போது உன்னிடம் இருந்து விடைபெறுகின்றேன்.. மீண்டும் காலம் கனியும் போது சந்திப்போம் என்று விடைபெறும் போது என் காதுகள் மீண்டும் ஹிந்தோளத்தை இரசித்தன, கண்கள் அவளின் அழகையும் தான்.
Categories: எனது பார்வையில், குறும்புகள், ச்சீசி
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
ஆழமாக யாரையோ காதலித்திருக்கிறீங்க போல இருக்கு…
//இருவருக்கும் இடையில் மூச்சுக்காற்றுகள் பரிமாறும் தூரம்தான்..//
நான் என்னவோ ஏதோ எண்டு நினைச்சன்….
உங்கள் வரம் கிடைக்க வாழ்த்துக்கள்.
உங்கள் வர்ணனைகள் அழகாக இருக்கின்றன…. வரங்களும் நல்ல வாரங்களாகக் கேட்கின்றீர்கள். அனைத்து வரங்களும் கிடைக்க வாழ்த்துகின்றேன்.
//செல்வன்
ஆழமாக யாரையோ காதலித்திருக்கிறீங்க போல இருக்கு…
அப்பாடியோ.. அப்படி ஒன்றும் இல்லை.. இங்கு நான் காதலைப்பற்றி ஏதும் எழதவில்லையே.. அப்புறம் எப்படி காதலிப்தாகக் கூறுவீங்க செல்வன்.. அதுவும் ஆழமாக.. சும்மா என் தலையை உருட்டிப்பார்க ஆசைப்டுகின்றீர்களா..
@வேந்தன்
//இருவருக்கும் இடையில் மூச்சுக்காற்றுகள் பரிமாறும் தூரம்தான்..//
// நான் என்னவோ ஏதோ எண்டு நினைச்சன்….
சும்மா சும்மா கற்பனை பண்ணாதீங்க வேந்தன்..
// உங்கள் வரம் கிடைக்க வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள்..
ஆரம்பத்தைப் பாத்ததும் கொஞ்சம் அரண்டுதான் போனேன். வரங்கள் பலிக்க வாழ்த்துக்கள்.
@சந்ரு
//உங்கள் வர்ணனைகள் அழகாக இருக்கின்றன…. வரங்களும் நல்ல வாரங்களாகக் கேட்கின்றீர்கள். அனைத்து வரங்களும் கிடைக்க வாழ்த்துகின்றேன்.
மிக்க நன்றிகள்.. சந்ரு.. எல்லாம் நீங்கள் அனுப்பிய தேவதையின் ராசிதான்..
@Subankan
//ஆரம்பத்தைப் பாத்ததும் கொஞ்சம் அரண்டுதான் போனேன். வரங்கள் பலிக்க வாழ்த்துக்கள்.
😉 என்ன கற்பனைக்கு சென்றுவிட்டார்களா?
நன்றிகள் சுபாங்கள்.
நோய் முத்திச்ப்போச்சு. நல்ல டொக்டரை அணுகவும். நள்ளிரவில் காலி வீதியில் நடந்து வந்தால் தேவதையைக் காணமாட்டீர்கள்.
@வந்தியத்தேவன்
// நோய் முத்திச்ப்போச்சு. நல்ல டொக்டரை அணுகவும். நள்ளிரவில் காலி வீதியில் நடந்து வந்தால் தேவதையைக் காணமாட்டீர்கள்.//
நான் கண்டேனே..
//சுபானு said…
@வந்தியத்தேவன்
// நோய் முத்திச்ப்போச்சு. நல்ல டொக்டரை அணுகவும். நள்ளிரவில் காலி வீதியில் நடந்து வந்தால் தேவதையைக் காணமாட்டீர்கள்.//
நான் கண்டேனே..//
அப்படியா? கவனித்துப் பார்க்கவும் அந்த தேவதை புல்லட்டை 141ல் துரத்தியவராக இருக்க வாய்ப்பிருக்கு.
உங்கள் காதலியின் பெயர் சங்கீதா என அறியத் தந்ததத்ற்க்கு நன்றிகள்,
என்னங்க சுபானு, ஏற்கனவே கனககோபி மாட்டிவிட்ட தலைப்புக்குள் தள்ளியிருக்கிறீர்கள். விரைவில் எழுதுகிறேன்.
//சுபானு
நான் இரசித்த அந்த நாட்கள் : அந்த "பிரியங்க"மான தோழியுடன் மீண்டும் மீண்டும் எமது இரண்டு ஜோடிக்கண்களில் முறைப்புக்கள் :
//
//வந்தி
அப்படியா? கவனித்துப் பார்க்கவும் அந்த தேவதை புல்லட்டை 141ல் துரத்தியவராக இருக்க வாய்ப்பிருக்கு.
உங்கள் காதலியின் பெயர் சங்கீதா என அறியத் தந்ததத்ற்க்கு நன்றிகள்,
//
பிரியங்கா எண்டெல்லோ நினைச்சன்..
@வந்தியத்தேவன்
// அப்படியா? கவனித்துப் பார்க்கவும் அந்த தேவதை புல்லட்டை 141ல் துரத்தியவராக இருக்க வாய்ப்பிருக்கு.//
ஆகா.. ஆனால் இவள் அவள் இல்லை.. புல்லட்டுக்கும் “வரம்“ குடுக்கத்தான் “அந்த“ வேடத்தில் வந்திருப்பாள்.. அது புரியாமல் அவர் ஓடிப்போய் விட்டிருப்பாரப்பா.. அவருக்கு “அந்த“ வரம் கிடைத்திருந்தால்.. கதைவேறுமாதிரி அல்லா போயிருக்கும்.. ;).
@வந்தியத்தேவன்
//உங்கள் காதலியின் பெயர் சங்கீதா என அறியத் தந்ததத்ற்க்கு நன்றிகள்//
அப்பாடா.. என்ன ஒரு கற்பூரம் நீங்கள் வந்தியண்ணா.. எப்பிடி உங்களால் மட்டும்.. இப்படி..
@மருதமூரான்.
//என்னங்க சுபானு, ஏற்கனவே கனககோபி மாட்டிவிட்ட தலைப்புக்குள் தள்ளியிருக்கிறீர்கள். விரைவில் எழுதுகிறேன்.
மிக்க நன்றிகள்.. விரைவில் எழுதுங்கள்..
@செல்வன்
//சுபானு
நான் இரசித்த அந்த நாட்கள் : அந்த "பிரியங்க"மான தோழியுடன் மீண்டும் மீண்டும் எமது இரண்டு ஜோடிக்கண்களில் முறைப்புக்கள் :
//
//வந்தி
அப்படியா? கவனித்துப் பார்க்கவும் அந்த தேவதை புல்லட்டை 141ல் துரத்தியவராக இருக்க வாய்ப்பிருக்கு.
உங்கள் காதலியின் பெயர் சங்கீதா என அறியத் தந்ததத்ற்க்கு நன்றிகள்,
//
பிரியங்கா எண்டெல்லோ நினைச்சன்..
அடுத்த கற்பூரம் நீங்கள்… எப்படி அப்பா உங்களால் மட்டும்… முடியல..
மிக்க நன்றாக இருக்கிறது. அந்த தேவதை எங்கள் கண்ணிலும் பட மாட்டாவா? 🙂
உங்கள் வரங்கள் பலிக்க வாழ்த்துக்கள்.
🙂
@Nangai
//மிக்க நன்றாக இருக்கிறது. அந்த தேவதை எங்கள் கண்ணிலும் பட மாட்டாவா? 🙂
உங்கள் வரங்கள் பலிக்க வாழ்த்துக்கள்.
🙂
மிக்க நன்றி நங்கை… உங்களின் வருகைக்கு..
முதலிரு வரங்களும் நெஞ்சத் தொடுவதாக இருக்கிறது. நிறைவேறும் என்றே நம்புகிறேன்.
எனக்கொரு சந்தேகம்…? தேவதைகள் பெண்களோ?
//அந்த "பிரியங்க"மான தோழியுடன் மீண்டும் மீண்டும் எமது இரண்டு ஜோடிக்கண்களில் முறைப்புக்கள்
ஏன் இந்தச் சந்திப்பு கட்டுப்பெத்தையில கிடைக்கேல்லையோ?
@பால்குடி
//முதலிரு வரங்களும் நெஞ்சத் தொடுவதாக இருக்கிறது. நிறைவேறும் என்றே நம்புகிறேன்.
எனக்கொரு சந்தேகம்…? தேவதைகள் பெண்களோ?
//அந்த "பிரியங்க"மான தோழியுடன் மீண்டும் மீண்டும் எமது இரண்டு ஜோடிக்கண்களில் முறைப்புக்கள்
ஏன் இந்தச் சந்திப்பு கட்டுப்பெத்தையில கிடைக்கேல்லையோ?
நீங்கள் சுட்டும் நபர் யாரோ.. அவர் இல்லை..
இப்படி எல்லாமா வரம் கேட்ப்பாங்க…
@Sinthu
//இப்படி எல்லாமா வரம் கேட்ப்பாங்க…
வேறு எப்படிக் கேட்கின்றதாம்????