அழகான பூக்களை புகைப் படங்களாக்குவது எவ்வளவு சுவாரஸ்யமான அழகான விடயம். கட்டுப்பெத்தை சந்தியில் தம்பி வாங்கி வந்த ரோஜா வாங்கிவரும்போதே இரண்டு மொட்டு விட்டிருந்தது. எப்போது பூக்கும் எனக் காத்திருந்த போது இன்று காலை நித்திரைவிட்டு எழுந்ததும் பூத்திருந்த அந்த ரோஜாப் பூத்தான் கண்ணில்ப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அதிகாலை என் வாசலை நனைத்துச் சென்ற அந்த தூறல் மழை மேலும் அழகு சேர்த்திருந்தது பூவிற்கு. உடனடியாக cameraவினை எடுத்து ரோஜாவினை படங்களாக்கினேன்.. அதன் பின்னர்தான் அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றேன். அங்கு சென்றடைய பத்து மணியாகிவிட்டது -அதுவேறுகதை. என்னதான் தலைபோகின்ற வேலையிருந்தாலும் இவ்வாறான சின்னச் சின்ன விடயங்கள் தானே வாழ்க்கையை அழகாக்குகின்றன இந்தப் பூக்களைப் போல…
Categories: எனது பார்வையில், சுயதம்பட்டம்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
நல்லா இருக்கு….
//அதன் பின்னர்தான் அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றேன். அங்கு சென்றடைய பத்து மணியாகிவிட்டது -அதுவேறுகதை. //
இதெல்லாம் ஒரு பெரிய விசயமா… 🙂
அழகை ரசிக்கிறீங்க போல..
நன்றி நிமல்..
//
இதெல்லாம் ஒரு பெரிய விசயமா… 🙂
😉
ரோஜா பூ ரொம்ப அழகாக இருக்கு..
அழகு……
அதிகாலை அழகு,
கலர்கலராய் பூக்கள் அழகு,
பூக்களில் தனி அழகு ரோஜா,
ரோஜாவுக்கு அழகு சேர்த்த
பனித்துளிகள் அழகு – இத்தனையும்
இரசித்து விட உன் மணித்துளிகள்
ஒதுக்கிச் சென்ற மனமும் தனி அழகு
அழகோ அழகு அத்தனையும் அழகு
வாழ்த்துக்கள்!
அருமையா இருக்கு நண்பா; மனது இலகிவிட்டது
ரொம்ப அழகாக இருக்கு..
வாழ்த்துக்கள்!
ரொம்ப அழகாக இருக்கு..
வாழ்த்துக்கள்!
Good work man!
It is normally difficult to photograph red objects because they easily get over exposed. Tones of pink are due to that, I guess the rose is of dark red colour. Reduce the EV value to minimum and see the effect.
//என்னதான் தலைபோகின்ற வேலையிருந்தாலும் இவ்வாறான சின்னச் சின்ன விடயங்கள் தானே வாழ்க்கையை அழகாக்குகின்றன இந்தப் பூக்களைப் போல… //
It is really true.
And the pics are lovely. Especially due to the water drops on the flowers.
🙂