எல்லைகள் அற்ற இந்தப் பிரபஞ்சத்தின் மூலைமுடுக்கெங்கும் கணப்பொழுதில் சென்றடையக் கூடிய உங்கள் கற்பனைக் குதிரையில் ஏறி என்னோடு சிறிது பயணியுங்கள். நீங்கள் என்றும் கண்டிராத ஒரு அற்புத உலகிற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன்.
“நாங்கள் இன்னும் 480 வினாடிகளில் சூரிய ஈர்ப்புக்கு அப்பால் சென்றுவிடுவோம். இந்த செய்தி மடலுடன் எமக்கும் உங்களுக்குமான இருவழித் தொடர்பு முற்றாக விலகுகின்றது. இன்னும் சரியாக 60 வினாடிகளில் நாங்கள் ஒளியின் வேகத்தினை அடைந்து விடுவோம். எமது இந்தப் பயணத்தின் குறிக்கொள் வெற்றி பெற இறைவனைப் பிரார்த்தியுங்கள். – இப்படிக்கு மஞ்சரி. ” என்ற குறுஞ் செய்திமடலினை மின்காந்தப் பொட்டலங்களாக்கி பூமிக்கு மேலே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு அனுப்பிவிட்டு நிமிர்ந்தாள் பீனிக்ஸ் விண்வெளி ஓடத்தின் துணைக் கப்டன் மஞ்சரி.
ஆட்டிபிஷல் இன்ரெல்யன்ஸ் என்னும் செயற்கைப் புத்திசாலித்தனத்தை முழுமையாகப் பயன்படுத்தி எந்தவிதமான மனிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தானாகச் சிந்தித்து செயற்படக்கூடிய இந்த பீனிக்ஸ் பிரபஞ்ச வெளியில் பரந்திருக்கும் கொஸ்மிக் மின்காந்தக் கதிர்களை அகத்துறிஞ்சி, அந்த மின்காந்தப் பொட்டலங்களைப் பகுப்பதன் மூலம் சக்தியைப் பெற்று இயங்கும் சிறந்த விண்வெளியோடம். இந்த பீனிக்ஸின் புறமேற்பரப்பு எத்தகைய அதிர்வுகளையும் பாரதுரமான மோதுகைகளையும் தாங்குவதற்கு ஏற்ற வகையில் நனோ ரெக்னோலயி முலமாக மூலக்கூறுகள் சேர்க்கப்பட்ட கவசப் பாதுகாப்பு. இத்தகைய பல சிறப்புக்களைக் கொண்ட பீனிக்ஸ்ன் துணைக் கப்டன் மஞ்சரி அவளின் எதிரில் இருந்த ஐந்து மீற்றர் நீளமான அகலக் கணணித்திரையில் பீனிக்ஸ்ன் வேகமாற்றத்தினை பார்த்து இரசித்துக் கொண்டிருந்தாள்.
மஞ்சரி பெயருக்கு ஏற்றாற் போல் அழகும் திறமையும் பூங்கொத்தைப் போல என்றும் குலையாத பொலிவுடன் திகழும் இருபத்தைந்து வயது நங்கை. அவளைக் கடந்து செல்பவர்கள் யாராக இருந்தாலும் ஒருகணம் அனிச்சையாக திருப்பி பார்க்க வைக்கும் அழகு. அப்படியொரு அழகு தேவதை. சிரிக்கும் போது சின்னதாக எட்டிப் பார்க்கும் அந்த சின்ன தெத்திப்பல் அழகின் உச்சம். அவளது புத்திசாலித்தனத்தை விபரிக்கவே தேவையில்லை. எவ்வாறான சிக்கலான சூழ்நிலையிலும் தீர்க்கமாகவும் துரிமாகவும் செயலாற்றக் கூடிய அந்தப் பெண் இப்போது செக்கனுக்கு 3*10^8 மீற்றர்கள் என்ற ஒளியின்
வேகத்தில் இந்தப் பிரபஞ்சத்தின் இதுவரை மனித சுவடே பதிந்திராத இடத்தை நோக்கி தனது நண்பர்களுடன் பீனிக்ஸ் இல் பயணித்துக் கொண்டிருந்தாள்.
பீனிக்ஸின் இயக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஐந்து மீற்றர் நீளமான அகலக் கணணித்திரையில் பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் அழகிய தோற்றத்தையும், அந்தக் கணணித்திரையின் வலது மேல் மூலையில் பீனிக்ஸின் வேகமாற்ற வரையையும் இரசித்தபடி இருந்த மஞ்சரியை “விசேட கலந்துரையாடலுக்காக அனைவரையும் கலந்துரையாடல் அறைக்கு வரவும்” என்ற ஆதித்யனின் குரல் அவளைச் சுயத்திற்குத் திருப்பியது. தனது நாளாந்த செயற்பாட்டுக் குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு கலந்துரையாடல் அறைக்கு விரைந்தாள் அந்த நங்கை.
ஓர் நீள்வட்ட மேசையிம் அதில் ஆறுபேர் வசதியா அமர்வதற்கு உரிய இருக்கைகளும் கொடுகைக்கு துலங்கக்கூடிய ஆறு மடிக் கணணிகளும் அந்த மடிப்புக் கணணிகளில் இருந்து இயங்க வைக்கப் படக்கூடியதான ஓர் அகலமான திரையையும் கொண்டிருந்தது அந்தக் கலந்துரையாடல் அறை.
அவ் அறைக்கு மஞ்சரி வரும் போது பீனிக்ஸின் இல் அவளுடன் இணைந்து செயற்படும் ஏனைய ஐவரும் அங்கே பிரசன்னாமாகி இருந்தனர். அவர்களை நோக்குத் தன் வசீகரக் கண்களால் சிறு புன்னகை ஒன்றை வீசிவிட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள் மஞ்சரி.
பூமியில் இருந்து பல்லாயிரும் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள புளூட்டோவின் சுற்றுப்பாதையையும் விலக்கி ஒளியின் வேகத்தில் சூரியனின் ஈர்ப்பில் இருந்து முற்றாக விடுபட்டு பிரபஞ்சத்தின் இன்றோர் மூலையை நோக்கி சீறிப்பாய்ந்து கொண்டிருந்த பீனிக்ஸின் கலந்துரையாடல் அறையில் இளம் விஞ்ஞானிகளான ஆதித்தன், மஞ்சரி, பானு, இராகவன் மற்றும் ரோகினி ஆகியோர் அங்கே தமது நோக்கம் பற்றிய கலந்துரையாடலில்…
தொடரும்….
சின்னதா ஒரு தொடர் கதை ஒன்று எழுதுவோம் எனத் தொடங்கி இதுவரை கொண்டு வந்து விட்டேன்.. சுதப்பலாயில்லாட்டி சொல்லுங்கள். விஞ்ஞான சாகசக் கதைகளில் எனக்குள்ள ஈடுபாட்டால் இந்தக் கதையினை எழுதத் தொடங்கியுள்ளேன். விரைவில் மிகுதிப் பாகம் பதியப்படும்.
Categories: கதை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
வின்வெளியே சுவாரஸ்யம் தானே அதை சொல்வதிலும் படிப்பதிலும் மிகவும் சந்தோஷமே இருக்கும்…சொல்லுங்க சொல்லுங்க.
நன்றி வடுவூர் குமார்.. ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு திருப்திசெய்லாம் என நினைக்கின்றேன்..
நல்லாயிருக்கு, இந்த படத்த விடுற எண்ணமே இல்லையா?
ஒரே பெயரில் 2வது கதையா… 😉 (முதலாவது இங்கே)
இலங்கையின் முதலாவது விஞ்ஞான புனைக்கதை எழுத்தாளர்/வலைப்பதிவர் என்ற பட்டம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.
@நிமல்-NiMaL
//நல்லாயிருக்கு, இந்த படத்த விடுற எண்ணமே இல்லையா?
ஒரே பெயரில் 2வது கதையா… 😉 (முதலாவது இங்கே)
//
நன்றி நிமல்.. ஒரே பெயர்தான் ஆனாலும் கதைக்களமும் கதைக்கான கருப்பொருளும் முற்றிலும் வேறுபட்டது..
@நிமல்-NiMaL
//இலங்கையின் முதலாவது விஞ்ஞான புனைக்கதை எழுத்தாளர்/வலைப்பதிவர் என்ற பட்டம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.
என்ன இது காமடி.. நக்கல் தானே வேணாங்கிறது… 😉
//ஒரே பெயர்தான் ஆனாலும் கதைக்களமும் கதைக்கான கருப்பொருளும் முற்றிலும் வேறுபட்டது//
பிரபஞ்சம், கொஸ்மிக், பகுப்பு, தொகுப்பு என்று ஒரே மிரட்டலாக இருப்பதிலிருந்தே அது விளங்குகிறது… 🙂
@நிமல்-NiMaL
//இந்த படத்த விடுற எண்ணமே இல்லையா?//
😉 .. அழகான படம்தானே… இரசியுங்கள்.. அதுபோதும்.. 😉
@நிமல்-NiMaL
//பிரபஞ்சம், கொஸ்மிக், பகுப்பு, தொகுப்பு என்று ஒரே மிரட்டலாக இருப்பதிலிருந்தே அது விளங்குகிறது..
//
முன்னர் இயற்பியலில் படித்தவற்றை சற்று மீள ஞாபகப்படுத்திப் பாருங்கள்.. சும்மா ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று எழுதியது.. அவ்வளவுதான்..
ஆனாலும் எதிர்காலத்தில் மின்காந்தப் கொட்டலங்களின் தொகுப்பு முலம் விண்வெளி ஓடங்களுக்கு முக்கியமான சத்தி வழங்கல் முதலாகக் கூடும் என நினைத்துதான் எழுதியது..
நல்லா தொடங்கியிருக்கீங்க அப்படியே எழுதுங்க வாழ்த்துக்கள் சுபானு..
@யோ வாய்ஸ் (யோகா)
நன்றிங்க..
சின்ன வயதில் செங்கை ஆளியனின் விஞ்ஞானப் புனைகதைகள் படித்த ஞாபகம். அவரது வல்லைவெளி ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட ஓடம் இன்னும் ஞாபகமிருக்கிறது. அருமையான ஆரம்பம். சீக்கிரமே அடுத்தபகுதி எழுதிவிடுங்கள்.
@Subankan
நன்றி… சுபாங்கன்..
நல்ல கதை யார் அப்பா அந்த ஆண்டிகள். அவர்களா விண்வெளிக்கு போகின்றவர்கள்
@வந்தியத்தேவன்
//நல்ல கதை யார் அப்பா அந்த ஆண்டிகள். அவர்களா விண்வெளிக்கு போகின்றவர்கள்//
நன்றி வந்தி அண்ணா.. விளங்கவில்லை நீங்கள் கேட்பது.. :O
சுவாதியின்ர படம் நல்லாயிருக்கு. யாரும் விடுவதாக இல்லை போல
// துரிமாகவும் செயலாற்றக் கூடிய அந்தப் பெண் இப்போது செக்கனுக்கு 3*10^8 மீற்றர்கள் என்ற ஒளியின் வேகத்தில்
இந்த வேகத்தில போனா என்றும் அதே மாதிரி இளமையா சாகாமா இருக்கலாம் எண்டு ஏல் படிக்கேக்க குமரன் சேர் சொன்னதா ஞாபகம் அப்ப இவவுக்கு என்றும் 16தானோ???
@கார்த்தி
//
சுவாதியின்ர படம் நல்லாயிருக்கு. யாரும் விடுவதாக இல்லை போல
// துரிமாகவும் செயலாற்றக் கூடிய அந்தப் பெண் இப்போது செக்கனுக்கு 3*10^8 மீற்றர்கள் என்ற ஒளியின் வேகத்தில்
இந்த வேகத்தில போனா என்றும் அதே மாதிரி இளமையா சாகாமா இருக்கலாம் எண்டு ஏல் படிக்கேக்க குமரன் சேர் சொன்னதா ஞாபகம் அப்ப இவவுக்கு என்றும் 16தானோ???
//
நீங்களும் இயற்பியலை இரசித்துப் படித்துள்ளீர்கள் போல.. பார்ப்போம் வயது போகுதோ இல்லையா என்பதை..
சுவாதியின்ர படம்தான் கதையின் நாயகிக்குப் பொருந்தும் கார்த்தி.. அப்படியே மஞ்சரியை மாற்றிப்பாருங்கள் இனி.. சுவாதியில்லை மஞ்சரி..
அறிவியல் கதைகள் வாசிப்பதில் எப்போதுமே மகிழ்ச்சிதான்,
சுஜாதாவின் கதைகளில் நான் விரும்பிப்படிப்பது அறிவியல் கதைகளே
தொடருங்கள்
வாழ்த்துக்கள்
விண்வெளி கதையொன்றை உங்களிடம் எதிர்பார்க்கேல…
அற்புதம்…
/*..
மஞ்சரி பெயருக்கு ஏற்றாற் போல் அழகும் திறமையும் பூங்கொத்தைப் போல என்றும் குலையாத பொலிவுடன் திகழும் இருபத்தைந்து வயது நங்கை.
..*/
இத நான் வாசிக்கவே இல்லை… 😮
நிமல்-NiMaL said…
இலங்கையின் முதலாவது விஞ்ஞான புனைக்கதை எழுத்தாளர்/வலைப்பதிவர் என்ற பட்டம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.
🙂
நீங்கள் இந்த மாதிரி கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?! அருமை!
"காஸ்மிக் ரேஸ் லிருந்து எனர்ஜி கிரியேஷன்" – நல்ல சிந்தனை. காஸ்மிக் ரேயில் இருக்கும் 10% சாதாரண ஹீலியம் அணுக்களிலிருந்து ஃபிஷன் மூலம் ஆற்றல் தயாரிக்கும் முறை எதிர்காலத்தில் நடக்கலாம்.
நல்ல அறிவியல் பலத்தோடு கதை தொடங்கியிருக்கிறது. மற்ற பகுதிகளை படித்துவிட்டு கமென்டுகிறேன். 🙂