நேற்று சக பதிவர் ஒருவருடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போது கேட்டார் உங்களுக்கு என்ன என்ன பிடிக்கும் என்ன என்ன பிடிக்காது எனச் சொல்லுங்களேன் என்று. சரி எனக்கு என்ன என்ன பிடிக்கும் எனப் பட்டியல்ப்படுத்த வெளிக்கிட்டால் அது பெரும் இராட்ஷச ரயில் போல நீளத் தொடங்கியது. கொஞ்ச நேரத்திற்குப் பொறுமையாகக் கேட்டவர் பின்னர் கடுப்பு வந்ததோ என்னமோ தெரியாது நீங்கள் பதிவொன்றில் போடுங்களேன் நான் இரசித்தது போல மற்றவரகளும் இரசிக்கட்டுமே எனக் கேட்டுக்கொண்டார். உண்மையிலே தாம் பெற்ற துன்பம் ஏனையோரும் பெறட்டும் என்பதே அவரின் அவா போலக் கிடந்தது.. எனக்கென்ன வந்தது வாசிப்பவர்கள் தானே பாவம்.. நமக்கென்ன என்று பதிந்து விட்டேன். எனக்குப் பிடித்தவற்றை இந்தப் பதிவிலும் பிடிக்காதவற்றை இனிவரும் பதிவிலும் பதிகின்றேன். வாசித்த பின்னர் திட்டுவதாயிருந்தால் பின்னூட்டத்தில் திட்டுங்கள்..
சங்கீதம் பிடிக்கும்
SPB பாட்டு பிடிக்கும்
சித்திராவும் சேர்ந்தா இன்னும் பிடிக்கும்
நடனம் பிடிக்கும்
நடனமாடும் நங்கைகளை இன்னும் பிடிக்கும்
வீணையின் நாதம் பிடிக்கும்
மீட்டிடும் கைகளில் மின்னிடும் வளையல் பிடிக்கும்
கொலுசுச் சத்தம் பிடிக்கும்
கட்டிடும் கால்களில் வைத்திடும் மருதாணி பிடிக்கும்
அம்மா பிடிக்கும்
அம்மா செய்யும் இட்லி பிடிக்கும்
தங்கையோடு சண்டைபோடப் பிடிக்கும்
மூன்றாம் பிறை பார்த்து பொன் நகை பார்க்கப் பிடிக்கும்
பெளர்ணமி நிலவு பிடிக்கும்
நட்சத்திரம் நடுவே நடுநாயக நிலவு பிடிக்கும்
நட்டநடு இரவு வானத்தில் விண்கல் பார்க்கப் பிடிக்கும்
மேகங்கள் இல்லா இரவு வானம் பிடிக்கும்
மேகங்கள் மீது செந்தூரம் விசிறுடும் அந்தி வானம் பிடிக்கும்
கடற்கரை அலையில கால் நனைக்கப் பிடிக்கும்
அந்திச் சூரியனை கண்ணிமைக்காமல் நேர்பார்வையில இரசிக்கப் பிடிக்கும்
அலை கடல் சப்தம் பிடிக்கும்
அரித்துச் செல்லும் மணலில் பெயர் கிறுக்கப் பிடிக்கும்
அடை மழை பிடிக்கும்
சொட்டச் சொட்ட நனையப் பிடிக்கும்
நனைந்து கொண்டு பாட்டுப் பாட இன்னும் பிடிக்கும்
மழை வெள்ளம் பிடிக்கும்
காதிக ஓடம் விட இன்னும் பிடிக்கும்
மழைக்கு ஒதுங்கும் விட்டில்கள் பிடிக்கும்
நள்ளிரவுத் தவளைச் சத்தம் பிடிக்கும்
தொலைதூரத்தில் கேட்டும் ஆட்காட்டிக் குருவியின் கத்தல் பிடிக்கும்
மார்கழி ஊதக் காற்றுப் பிடிக்கும்
அதிகாலை பனிக்காற்றில் சைக்கிள் ஓடப் பிடிக்கும்
இலக்கு வைத்து ஒட பிடிக்கும்
பின் வெற்றியில் திளைக்கப் பிடிக்கும்
திருநெல்வேலி அம்மன் கோவில் பிடிக்கும்
அம்மன் கோவில் ஐயர் மகள் இன்னும் பிடிக்கும்
திருநெல்வேலி வீட்டு முற்றத்து மல்லிகைப் பந்தல் பிடிக்கும்
ஆலம் விழுது பிடிக்கும்
அதில் தூங்கியாட இன்னும் பிடிக்கும்
மாமரம் பிடிக்கும்
மாங்காய் பறித்து உப்பும் தூளும் தூவிச்சாப்பிட இன்னும் பிடிக்கும்
எக்சோராப் பூப்பிடிக்கும்
அதில் வரும் சிகப்புப் பழம் இன்னும் பிடிக்கும்
ஈச்ச மரபழம் பறிக்கப் பிடிக்கும்
அதில் முள்ளுக்குத்தி காயம்வர இன்னும் பிடிக்கும்
சாட்டிக்கடல் பிடிக்கும்
கடலில் நீந்த இன்னும் பிடிக்கும்
கிளித்தட்டு விளையாடப் பிடிக்கும்
எப்போதும் ஜெயிக்க இன்னும் பிடிக்கும்
திருநெல்வேலிவீட்டு மரத்தில் கட்டியிருந்த ஊஞ்சல் பிடிக்கும்
ஊஞ்சலில் வலித்து வலித்து ஆட இன்னும் பிடிக்கும்
சொந்த வீடுபிடிக்கும்
அதில் வாழும் போது வரும் திமிர் பிடிக்கும்
கணிதம் பிடிக்கும்
கணிதத்தோடு வாழ இன்னும் பிடிக்கும்
கருங் குயில் பிடிக்கும்
கூவும் போது இன்னும் பிடிக்கும்
செண்பகம் பிடிக்கும்
கூடச் சேர்ந்து குக்கூ என ஒலிக்கும் போதுவரும் ஆனந்தம் பிடிக்கும்
ஒடியற் கூழ் பிடிக்கும்
பனைமரத்து நொங்கு பிடிக்கும்
சோழாக் காற்றுப் பிடிக்கும்
அந்தக் காற்றில் பட்டம் விட இன்னும் பிடிக்கும்
மாதுளை மலர் பிடிக்கும்
கார்த்திகை விளக்கீடு பிடிக்கும்
வீடுமுழுக்க ஒளிதீபம் ஏற்ற இன்னும் பிடிக்கும்
யாழ்பாணம் பிடிக்கும்
யாழ்பாணப் பொண்ணுங்கள் இன்னும் பிடிக்கும்
பார்க்கும் போது பார்த்து முறைக்கும் பொண்ணுங்க பிடிக்கும்
கடந்து செல்லும் போது வீசிச் செல்லும் கள்ளச் சிரிப்பு இன்னும் பிடிக்கும்
தமிழன் எனச் சொல்லப் பிடிக்கும்
தலைவன் பிடிக்கும்
அவன் சேனையை இன்னும் பிடிக்கும்
வாழப் பிடிக்கும்
அனுபவித்து இரசித்து சிரித்து வாழ இன்னும் பிடிக்கும்
இன்னும் எவ்வளவோ பிடிக்கும்
இப்போது நிறுத்தப் பிடிக்கும்
பிற்சேர்க்ப்பட்டது : 23-09-2009
இந்தப் பதிவை தொடர் பதிவாக்க தனது பின்னூட்டத்தின் முலமாக ஊக்கப்படுத்தினார் நண்பர் யோ வாய்ஸ் (யோகா). பதிவர்களுக்கிடையே அவர்களின் விருப்பங்கள் எவ்வாறு இருக்கின்றன அவை மற்றவர்களின் விருப்பங்களோடு எந்தளவிற்கு ஒத்துப்போகின்றது என்பதை அறிய நானும் ஆசைப்பட்டேன். எனவே இந்தப் பதிவினைத் தொடர் பதிவாக்கி ஏனைய பதிவர்களின் சுவாரசியமிக்க பிடித்த விடையங்கள் என்ன என்ன என்பதை நானும் இரசிக்க ஆசைப்படுகின்றேன். எனக்குப் பிடித்த விடயங்களை நான் எழுத ஆரம்பிக்கும் போதே, உணர்ந்து கொண்டேன் இது இலேசுப்பட்ட காரியமில்லை. இது பிடிக்கும் அது பிடிக்கும் எனப் பட்டிபல்படுத்தினால் மிகப் பெரிய பட்டியல் நீண்டு கொண்டே போனது. உங்களுக்குப் பிடித்தவை எவை எவை ? சற்று சுவாரசியமாக அவரவர் பாணியில் கூறுங்களேன். இந்த தொடர் சங்கிலியை நான் மூன்று (பெரிய) பதிவரிகளின் கைகளில் ஒப்படைக்கின்றேன். மூன்று பேரும் வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். எனவே சற்று வித்தியாசம் மிக்க சுவாரசியம் கலந்த பிடித்த விடையங்களை அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். பார்ப்போம். மேலும் இந்த வடத்தைக் கொண்டு போவதற்கு எந்த விதிமுறையும் கிடையாது.
இந்த தொடர் பதிவை ஊக்கப்படுத்திய நண்பர் யோ வாய்ஸ் (யோகா).
மூத்த பிரபல பதிவர் வந்தியத்தேவன்
மற்றும் பிரபல பதிவர் லோசன் ( இவருக்கு மூத்த என்ற பட்டம் வந்தி அண்ணா இருக்கும் போது பொருந்தாது.)
சரி பார்ப்போம் இவர்களின் பிடிச்ச விடையங்கள் என்ன என்ன என்பதை.. இரசிக்க ஆவலாக உள்ளோம். நன்றி நண்பர்களே..
Categories: எனது பார்வையில், கவிதை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
ஊஞ்சல் படிக்கப்பிடிக்கும். உங்களுக்கு பின்னூட்டம் போடப் பிடிக்கும். உங்கள் பின்னூட்டம் கிடைத்தாலும் பிடிக்கும்.
//பார்க்கும் போது பார்த்து முறைக்கும் பொண்ணுங்க பிடிக்கும்//
முறைக்கும் போது எந்தப் பெண் மிகவும் அழகாகத் தெரிகின்றாரோ அவர்தான் உண்மையான அழகி. எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
//பார்க்கும் போது பார்த்து முறைக்கும் பொண்ணுங்க பிடிக்கும்//
முறைக்கும் போது எந்தப் பெண் மிகவும் அழகாகத் தெரிகின்றாரோ அவர்தான் உண்மையான அழகி. எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
இவ்வளவு தானா பிடிக்கும்………………
ஆனால் இப்பதைக்கு இவ்வளவும் போதும் சுபானு..
//மீட்டிடும் கைகளில் மின்னிடும் வளையல் பிடிக்கும்//
I like this..
@Subankan
//ஊஞ்சல் படிக்கப் பிடிக்கும். உங்களுக்கு பின்னூட்டம் போடப் பிடிக்கும். உங்கள் பின்னூட்டம் கிடைத்தாலும் பிடிக்கும்.
//
மிக்க நன்றி சுபாங்கன்.. ரொம்ப சந்தோசம்..
@வந்தியத்தேவன்
//பார்க்கும் போது பார்த்து முறைக்கும் பொண்ணுங்க பிடிக்கும்//
// முறைக்கும் போது எந்தப் பெண் மிகவும் அழகாகத் தெரிகின்றாரோ அவர்தான் உண்மையான அழகி. எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.//
உண்மைதான் வந்தியண்ணா… எனக்கும் உங்களுக்கும் ஒரே இரசனை போலக் கிடக்கு.. முறைக்கும் போது கோபப்படாமல் ரசிச்சா எப்படியிருக்கும்.. ம்.. 😉
@Sinthu
//இவ்வளவு தானா பிடிக்கும்……………… ஆனால் இப்பதைக்கு இவ்வளவும் போதும் சுபானு..
அதுதானே சொன்னேனே “இன்னும் எவ்வளவோ பிடிக்கும்” என்று… நன்றி சிந்து..
@ILA
//மீட்டிடும் கைகளில் மின்னிடும் வளையல் பிடிக்கும்//
I like this..
மிக்க நன்றிகள்…
மற்றுமொரு அருமையான பதிவு.
ஒவ்வொரு வரிகளும் அற்புதமாக வடிக்கப் பட்டுள்ளன.
//அம்மா செய்யும் இட்லி பிடிக்கும்
தங்கையோடு சண்டைபோடப் பிடிக்கும்
எங்கே தம்பிமாரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே
🙂
சுபானு ……உங்களை பிடிக்கும் ……
..பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் வாசிகக் பிடித்தது ………சாடிக் கடல் தெரியுமா ? அதற்கு அண்மையிலா உங்கள் இருப்பிடம்? நானும் அங்கு அருகாம யில் தான்
"அடை மழை பிடிக்கும்
சொட்டச் சொட்ட நனையப் பிடிக்கும்
நனைந்து கொண்டு பாட்டுப் பாட இன்னும் பிடிக்கும் "
இவை எனக்கும் பிடிக்கும்.உங்களுக்கு
நல்ல ரசனை.
@Nangai
//மற்றுமொரு அருமையான பதிவு.
ஒவ்வொரு வரிகளும் அற்புதமாக வடிக்கப் பட்டுள்ளன.
//அம்மா செய்யும் இட்லி பிடிக்கும்
தங்கையோடு சண்டைபோடப் பிடிக்கும்
எங்கே தம்பிமாரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே
🙂
//
நன்றி நன்றி நன்றி நங்கை.. தம்பிமாரை விடவில்லை.. ம்ம்ம்… உண்மையைச் சொல்லப் போனால் எழுதும் போது ஞாபகத்திற்கு வரவில்லை..
மீண்டும் நன்றிகள்..
@நிலாமதி
//
சுபானு ……உங்களை பிடிக்கும் ……
..பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் வாசிகக் பிடித்தது ………சாடிக் கடல் தெரியுமா ? அதற்கு அண்மையிலா உங்கள் இருப்பிடம்? நானும் அங்கு அருகாமயில் தான்
//
மிக்க நன்றி நிலாமதி..
எனது சொந்த இடம் வேலணை-வங்களாவடி ஜங்சன் பக்கமாக.. சாட்டிக் கடலிற்கு அடிக்கடி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றுவருவோம்.. அழகான கடல்.. அத்துடன் அதிக அலையினால் ஆர்ப்பாட்மில்லாத கடல்.. நீங்கள் எங்கு?
@Thevesh
//
"அடை மழை பிடிக்கும்
சொட்டச் சொட்ட நனையப் பிடிக்கும்
நனைந்து கொண்டு பாட்டுப் பாட இன்னும் பிடிக்கும் "
இவை எனக்கும் பிடிக்கும்.உங்களுக்கு
நல்ல ரசனை.
//
மிக்க நன்றி Thevesh..
அருமை…
பிடிக்காதவைகளையும் நீங்கள் எழுதினால், எனக்குப் பிடிக்கும்
உங்களுக்கு பிடித்த விடயங்கள் நல்லாதான் இருக்கிறது. ஏன் இதை ஒரு தொடர்பதிவா தொடர கூடாது.
முதல் போணியாக வந்தியை அழைத்து இதே போல் அவருக்கு பிடிப்பவற்றை சொல்ல சொல்லலாமே..
@ஆதிரை
//
அருமை…
பிடிக்காதவைகளையும் நீங்கள் எழுதினால், எனக்குப் பிடிக்கும்
//
நன்றி.. விரைவில் எழுதுகின்றேன்..
@யோ வாய்ஸ் (யோகா)
//
உங்களுக்கு பிடித்த விடயங்கள் நல்லாதான் இருக்கிறது. ஏன் இதை ஒரு தொடர்பதிவா தொடர கூடாது.
முதல் போணியாக வந்தியை அழைத்து இதே போல் அவருக்கு பிடிப்பவற்றை சொல்ல சொல்லலாமே..
//
ம்.. நல்ல ஐடியாதான்.. ஆனால் எனக்கு இந்த தொடர்பதிவு என்கிறது பிடிக்கல.. ஏன் என்றால் பொதுபாக நான் எழுதுவது இடைக்கிடைதான்.. அப்படியிருக்க மற்றவர்கள் அழைக்கும் போது உடனடியாக பதியாவிட்டால் வீண் மனஸ்தாபம் வரலாம் எனது காலதாமதத்தால்.. இன்னும் மூன்று தொடர் பதிவு எழுத வேண்டியிருக்கு..
🙁
யாருக்கேனும் இந்தப் பதிவைத் தொடர் பதிவாகத் தொடரவிரும்பினால் நிச்சயமாக நானும் வந்து உங்களின் விருப்பங்களை ஆவலோடு வாசிப்பேன்.. நன்றி..
@யோ வாய்ஸ் (யோகா)
உங்களின் விருப்பம் நிறைவேற்றப்பட்டது.. உங்களையும் அழைத்திருக்கின்றேன்
.. நன்றி.
ஐயோ என்னையும் மாட்டி விட்டீர்களா? சரி எழுத முயற்சிக்கிறேன், ஆனாலும் உங்களைப்போல் கவிதையாக வராது.
நல்லாத்தான் ஒரு பிடி பிடி பிடிச்சிருக்கீங்க சுபானு! உங்கள் ரசனையை வியக்கிறேன்! அன்பும் வாழ்த்தும்!
பார்க்கப் போனால் பெண்கள் எப்படி இருந்தாலும் பிடிக்கும் போல இருக்கே.. உங்கள் திருமண சேவையினால் பெண் கிடைத்தால் அதுவும் பிடிக்குமா?
எங்களை மாட்டி விடவும் பிடிக்கும் போல.. 😉
ஆனால் இந்த சுவாரஸ்ய விடயம் பற்றி எழுத எனக்கும் பிடிக்கும்,
@யோ வாய்ஸ் (யோகா)
//
ஐயோ என்னையும் மாட்டி விட்டீர்களா? சரி எழுத முயற்சிக்கிறேன், ஆனாலும் உங்களைப்போல் கவிதையாக வராது.//
நன்றி.. நீங்கள் தானே தொடங்கச்சொல்லிக்கேட்டீர்கள்.. பார்ப்போம் உங்கள் இரசனைகளை..
🙂
@ஜெகநாதன்
//
நல்லாத்தான் ஒரு பிடி பிடி பிடிச்சிருக்கீங்க சுபானு! உங்கள் ரசனையை வியக்கிறேன்! அன்பும் வாழ்த்தும்!
//
மிக்க நன்றி ஜெகநாதன். உங்களின் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும்.. நன்றி நன்றி நன்றி… 🙂
@LOSHAN
// பார்க்கப் போனால் பெண்கள் எப்படி இருந்தாலும் பிடிக்கும் போல இருக்கே.. உங்கள் திருமண சேவையினால் பெண் கிடைத்தால் அதுவும் பிடிக்குமா?
//
உங்களின் உடன்பிறவாத் தம்மி ஆயிற்றே.. பின்னப் பிடிக்காம இருக்குமா..
//
எங்களை மாட்டி விடவும் பிடிக்கும் போல.. 😉
ஆனால் இந்த சுவாரஸ்ய விடயம் பற்றி எழுத எனக்கும் பிடிக்கும்.
//
எல்லாம் அன்புத்தொல்லைதான்… உங்களின் பிடிச்ச விடைங்களை இரசிக்க ஆவலாக உள்ளேன் அண்ணா..
@LOSHAN
@வந்தியத்தேவன்
@யோ வாய்ஸ் (யோகா)
ஏற்றுக் கொண்டமைக்கு நன்றிகள்..
ரொம்ப நல்லாயிருக்கு
என்னிடமும் ஆசை என்ற தலைப்பில் கவி உள்ளது இதனை பார்த்தபின்
அதனை வலையிலிட எண்ணம் பிடித்துள்ளது.
பிடித்தவற்றை பிடி
பிடிக்காதவற்றை களை
படித்தவற்றை நினை
படிக்காதவற்றை படி
ரொம்ப நல்லாயிருக்கு
என்னிடமும் ஆசை என்ற தலைப்பில் கவி உள்ளது இதனை பார்த்தபின்
அதனை வலையிலிட எண்ணம் பிடித்துள்ளது.
பிடித்தவற்றை பிடி
பிடிக்காதவற்றை களை
படித்தவற்றை நினை
படிக்காதவற்றை படி
பொண்ணுங்கள் இன்னும் பிடிக்கும்
பார்க்கும் போது பார்த்து முறைக்கும் பொண்ணுங்க பிடிக்கும்
கடந்து செல்லும் போது வீசிச் செல்லும் கள்ளச் சிரிப்பு இன்னும் பிடிக்கும்…….
hisubanu ,
nalla varikal.remba anubavitchu eluthuna mathuri irukku…