மழை விட்டும் நிற்காத தூவானமாய்
எனை விட்டுப் போன பின்னும்
சாரலாகின்றனவே உன் நினைவலைகள்.
நம் காதலெனும் பூ அரும்பிப் பின் போதாகி
நம் இதயங்களில் மலராகியதே வீணான
நம் கோபங்களால் வீ யெனும் நிலையெய்து
நம் இதயத்தின் வாசலில் செம்மலாகிப்போன ஏன்
முரண்பாடுகளுக்குத் தீர்வு மீண்டும் மீண்டும்
முரண்படுவதால் தீரப்போவதில்லையடி
முரண்பட்டது போதும் கண்னே என்னோடு
முரண்பாடுகள் கழைய பேசிவிடு என்னோடு
முள்களைத் தாண்டி மலரும் ரோஜா போல-நெருஞ்சி
முள்கள் எனும் பிடிவாதத்தை அகற்றி
முள்களைத் தாண்டி மலரவிடு காதலெனும் ரோஜாவை
முள்வேலி கடந்து இதயத்தின் முற்றதில் ஜொலிக்கட்டும்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
ம் ம் அசத்துங்க
நானே காதலில் சோகமாக கவிதை வடிக்கிறன்.. நீங்க அசத்துங்க என்றா சொல்லுறீங்க… முடியல… 🙁
"முரண்பாடுகளுக்குத் தீர்வு மீண்டும் மீண்டும்
முரண்படுவதால் தீரப்போவதில்லையடி"
அருமையான வரிகள். காதல் வரும் வரை முரண்பாடுகள் கண்களுக்குப் புலப்படுவதில்லை. அல்லது புலப்பட்டாலும் உணரப்படப்படுவதில்லை. இல்லையெனில், விட்டுக்கொடுத்தலால் முரண்பாடுகள் பின்னுக்குத்தள்ளப்படுகின்றன. ஆனால் பாருங்கள் காதல் இரண்டு பக்கமும் வளர ஆரம்பித்தப்பிறகு அந்த இந்த என்ற எல்லா முரண்பாடுகள் முக்காடுப் போட்டுக்கிட்டு முன்னேத் தெரியும். இது ஒரு வகையில ஒரு பொசசிவ் அப்படின்னே சொல்லாம். நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
//முரண்பாடுகளுக்குத் தீர்வு மீண்டும் மீண்டும்
முரண்படுவதால் தீரப்போவதில்லையடி
முரண்பட்டது போதும் கண்னே என்னோடு
முரண்பாடுகள் கழைய பேசிவிடு என்னோடு//
அருமை. கலக்குங்க
//முரண்பாடுகளுக்குத் தீர்வு மீண்டும் மீண்டும்
முரண்படுவதால் தீரப்போவதில்லையடி
முரண்பட்டது போதும் கண்னே என்னோடு
முரண்பாடுகள் கழைய பேசிவிடு என்னோடு
இது முற்றிலும் உண்மை. குறிப்பாக நண்பர்கள் இடையே…
🙂
@Nangai
// //முரண்பாடுகளுக்குத் தீர்வு மீண்டும் மீண்டும்
முரண்படுவதால் தீரப்போவதில்லையடி
முரண்பட்டது போதும் கண்னே என்னோடு
முரண்பாடுகள் கழைய பேசிவிடு என்னோடு
//
இது முற்றிலும் உண்மை. குறிப்பாக நண்பர்கள் இடையே…
🙂
//
ம்.. ஏற்றுக்கொள்கின்றேன்.. நண்பர்களுக்கு இடையெ மட்டுமல்ல எங்கும் இது பொருந்தும்…
நன்றி..