மனிதனை ஏனைய விலங்களில் இருந்து வேறுபடுத்தி அவனுக்கேன்று தனித்துவத்தைக் கொடுப்பது அவனின் பேச்சாற்றல். இந்தப் பேச்சுத்திறமை என்பது இன்று நேற்று வந்த ஆற்றல் அல்ல. பல நீண்ட பரிணாம வளர்ச்சிப் பின்னணி இந்த பேச்சாற்றலோடு தொடர்புடைய மொழிப் பிரயோகத்திற்கு உண்டு. இவ்வாறு பல வளர்ச்சிகளைக் கடந்து இன்று தனக்கென்ற தான் பயன்படுத்தப்படும் பிரயோக நிலைகளில் தனது தனித்துவத்தைப் பேணுகின்றன ஒவ்வோர் மொழியும். ஒவ்வோர் சமூகத்திற்குமான கலாச்சார விழுமியக் கோட்பாடுகளின் கட்டமைப்பிலான ஒழுங்கமைப்புகள் மொழி என்னும் அடித்தின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளன. சமூக் கட்டமைப்புக்களின் நிலையான உறுதித் தன்மைக்கு இந்த மொழியின் நிலைகுலையாத இருப்பும் அவசியமாகின்றது. அத்தகைய மொழியறிவிற்கு தாய்மொழி என்னும் ஒருவருடைய உணர்வுமொழிகள் இன்றியமையாததாகின்றன. இந்தப் பூமிப் பந்தில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனிற்கும் தமது உணர்வுகளை சக மனிதனோடு பதிர்ந்து கொள்வதற்கு தாய்மொழி என்ற ஒன்று இருக்கின்றது.
தாய்மொழி என்றால் என்ன? எனது தாய் தந்தையர் தமிழ் மொழியைப் பேச்சு மொழியாக் கொண்டுள்ளனர். அவர்களிம் இருந்த சிறு வயதில் நான் தமிழ்மொழியினை இயல்பாகக் கற்றதனால் நானும் தமிழ் மொழியினை பேச்சு மொழியாகப் பெற்றுள்ளேன். பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் மொழியறிவுதான் தாய் மொழி என விளக்கம் ஒன்றை எனது நண்பன் சொன்னான். அவன் சொன்னது சரியா எனக்குள் நீண்ட குழப்பம். சரி எல்லாத்துக்கும் முடிவாக விக்கிப்பீடியாவில் பார்ப்போம் எனப் பார்த்தால், அங்கே இருந்த விளக்கம் போதாததாக இருந்தது. “The language learned by children and passed from one generation to the next” என தாய் மொழி என்றால் என்னவென வரைவிலக்கணப் படுத்தப்பட்டு இருந்தது. இதனை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
நாம் எமது தாய் மொழியினை தாய் தந்தையிடம் இருந்துதான் பெற்றுக் கொண்டோம் என்பது யாராலும் மறுக்க முடியாது. அத்துடன் தாய்மொழியினை நாம் எனது சிறு பிராயத்தில் இருந்தே கற்கத் தொடங்கிவிட்டோம். நாம் எல்லோரும் அனேகமாகப் பேசிய முதல் வார்த்தை ”அம்மா” என்றதாகத்தான் இருக்கும். நமது விருப்பு வெறுப்புக்களை, ஆசைகளை, உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற ஏன் எமது மனதில் ஏதாவது யோசனை செய்கின்ற போது நாம் எமது மனதோடு கதைக்கின்ற மொழி எமது தாய்மொழி. அதாவது நாம் எமது உணர்வுகளை மனதில் தோன்றியவுடனேயே எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் வெளியிடுவதற்கு பயன்படுத்துகின்றோமே அதுதான் தாய்மொழி. இன்னும் அழகு தமிழில் இதனை வரைவிலக்கணப் படுத்திச் சொல்வதானால் ஒரு மனிதன் தன் சிறுபிராயத்தில் இருந்து பயின்று தன் மன உணர்வுகளை வெளியிடுவதற்கு பிரயோகிக்கும் மொழி அவனது தாய் மொழியாகும்.
அண்மையில் புலத்தில் இருந்து இங்கே வந்திருந்த ஒரு அழகான குடும்பத்தைச் சந்தித்தேன். தாய் தகப்பன் நான்கு வயது மகள் மற்றும் முன்று வயது மகன் என எப்போதும் கலகலப்புக்குக் குறைவில்லாத குடும்பம். அந்த தாய் தகப்பனின் தாய்மொழி தமிழ். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் எனது அண்ணனும் அண்ணியும் போன்றவர்கள். அவர்களின் அந்த சின்ன குழந்தைகள் என்னோடு கதைக்கும் போது ஆங்கிலத்தில் தான் கதைத்தார்கள். சரி நானும் எனக்குத் தெரிந்த கொஞ்ச ஆங்கில அறிவைப் பயன்படுத்தி சமாளித்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் தமிழில் கதைக்கத் தொடங்கினேன். நன்றாகவே பதிலுக்கு கதைத்தார்கள். இந்தச் சின்ன வயதில் இரண்டு மொழிகளிலும் பரீட்சயமாகி இருக்கின்றார்களே என அவர்களை நினைத்துப் பெருமையாக நோக்கினேன். ஆனாலும் சிறிது நேரம் அவர்களுடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போது ஒன்னை அவதானித்தேன். அதாவது அவர்கள் தமிழில் கதைப்பதற்காக வார்த்தைகளைத் தேடியெடுப்பதற்கு படும் கஸ்டத்தை. ஆனால் ஆங்கிலத்தில் மிகவும் நேர்த்தியாக பிசறின்றிக் கதைத்தார்கள். தமிழிலும் அவ்வாறுதான் ஆனால் தமிழில் கதைக்கும் போது கூடுதலான வேலையை அவர்களது மனமும் மூளையும் செய்தன. ஆனால் அவர்களது தாய் தகப்பன் வீட்டில் பயன்படுத்தும் மொழி தமிழ். பிள்ளைகளுடன் கதைக்கும் போது கதைப்பதும் தமிழ் மொழி. அப்புறம் ஏன் அந்தச் சிறுவர்கள் ஆங்கில வார்த்தைகளைத் தேடுவதற்குப் படாத கஸ்டத்தை என் தமிழ் வார்த்தைகளைத் தேடும்போது மட்டும் படுகின்றார்கள் என ஆராய்ந்தன் விளைவுதான் இந்தப் பதிவு. அவர்களின் தாய்மொழி என்பது என்ன? அந்தக் குழந்தைகள் தமது உணர்வுகளை ஆங்கிலத்தில் தான் வெளியிடுகின்றன. தமிழா ஆங்கிலமா அவர்களின் தாய்மொழி?
சற்றுக் காலச்சக்ரம் பின்னால் சுழன்றால் காரணம் வெளிவரும், அதாவது அந்தக் குழந்தைகள் வளர்ந்த சூழலில் பெரும்பாலும் ஆங்கில வாசம் வீசும் குடும்பங்கள் தான் ஏராளம். அத்துடன் அந்தக் குழந்தைகள் விளையாடும் போது வெள்ளைக்காரக் குழந்தைகளுடன் தான் பெரும்பாலான நேரத்தைக் கழித்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாடுகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் carton தொலைக்காட்சித் தொடர்களின் மிகப்பெரிய பாதிப்பு. இவையே அந்தக் குழந்தைகளின் ஆங்கிலப் புலமைக்கும் தமிழில் சின்னத் தடங்கலுக்கம் காரணம். இத்தகைய பாதிப்புக்களை நீக்க முடியுமா எனப் பார்பாதால் நிட்சயமாக முடியாது. அந்த சின்னக் குழந்தைகள் வளரும் சூழுலை மாற்றினாலே தவிர இந்தப் பாதிப்பை நீக்கமுடியாது. புலத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து வரும் தமிழரின் அடுத்த தலைமுறை ஒவ்வொன்றும் இத்தகைய பாதிப்புக்களுக்கு முகம்கொடுத்துள்ளது என்பது எவராலும் மறுக்க முடியாது. தமிழ் வார்த்தைகளைக் தேர்ந்தெடுத்துக் கதைப்பதற்கு இவ்வாறு கஸ்டப்படும்போது அந்தக் குழந்தைகள் மெல்ல மெல்ல தமிழினை வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு தள்ளபடலாம் என்ற நிதர்சன உண்மை அந்தப் பிரச்சனைக்குப் பின்னால் மறைந்துள்ளது. தாய் தந்தையர் வீட்டில் தமிழின் பாவனையை ஊக்கப்படுத்தும் குழந்தைகளுக்கே இந்த நிலை என்றால்.. அன்றாட வாழ்க்கையில் இருந்து தமிழை ஒதுக்க முயலும் புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்களின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது? அந்தக் குடும்பங்களின் எதிர்கால சந்ததியை தமிழர் எனச் சொல்ல முடியுமா? நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவதுதான் நவநாகரீகம் என்னும் மாயையில் வளர்கப்படும் குழந்தைகளின் நாளைய தலைமுறையை தமிழர் எனக் குறிப்பிடலாமா?
இந்த அபாயத்தை முன்னரே அறிந்து நான் மேலே சொன்ன அந்த அழகிய குடும்பம் தற்போது அந்தக் குழந்தைகளுக்கு சங்கீதமும் நடனமும் தமிழில் கற்பித்து அவற்றில் குழந்தைகளுக்கு நாட்டத்தை ஏற்படுத்துவதற்காகவும் தமிழ்மொழியை முறையாகக் கற்பிப்பதற்காகவும் இலங்கைக்குத் திருப்பித் தற்காலிகமாக இங்கே தங்கியுள்ளனர். இன்னும் சில வருடங்கள் இங்கேயிருந்து குழந்தைகளின் தமிழறிவிற்கும் கலையறிவிற்கும் ஒழுங்கான அடித்தளம் இடுவதே அந்தப் பெற்றோரின் நோக்கம். நிட்சமயாக அவர்கள் திரும்பும் போது அந்தக்குழந்தைகள் சிறப்பான தமிழ் அடித்தளத்தைப் பெற்றிருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இவ்வாறு எல்லாப் பெற்றோரும் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தில் சிறப்பாக நடந்துகொள்வார்களானால் புலதில் மறைந்துவரும் தமிழர் தாய்மொழியை கொஞ்சமாவது சரிவில் இருந்து காப்பாற்றலாம்.
Categories: இலங்கை, எனது பார்வையில், புலம்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
என்னுடைய கேள்விகளும் இதுதான். ஆனால் விடைதான் கிடைக்கவில்லை. இது தொடர்பாக நானும் ஒரு பதிவிட்டிருக்கின்றேன். அந்த பதிவிலே என்னால் கேட்கப்பட்ட கேள்விகள் சில…..
தமிழர்கள் என்று சொன்னால் தமிழர்கள் என்று சொல்வதனை எதனை வைத்துத் தீர்மானிக்கின்றோம். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சரி தாய் மொழி தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னால் நாம் தமிழ் பேசுகிறோமா? எத்தனைபேர் தமிழை மறந்து இருக்கின்றார்கள். நான் கண்டிருக்கின்றேன். இனறு கொழும்பிலே எத்தனை தமிழ் பிள்ளைகள் தமிழ் தெரியாது. சிங்களம் ஆங்கிலம் மட்டும் தெரிந்து இருக்கின்றார்கள்
தாய் மொழி என்பது எது? தாய் பேசும் மொழியா அப்படி என்றால் எனது தாய் கொழும்பிலே சிறு வயது முதல் இருந்தவர் தமிழ் என்பதே தெரியாது தமிழ் ஒரு நாள் கூட பேசியதில்லை என்றால் என் தாய் மொழி என்ன?
இன்று தமிழ் மொழி தெரியாமல் கொழும்பிலே இருக்கும் அந்த பிள்ளைகளின் பெற்றோரில் சிலருக்கு தமிழ் மொழி தெரியாது அப்போ இவர்களின் தாய் மொழி என்ன?
http://shanthru.blogspot.com/2009/08/blog-post_31.html இதுவே அந்தப்பதிவின் சுட்டி… அவசியமான பதிவு நண்பா… தமிழ்மொழி தமிழ் மொழியாகவே இருக்கட்டும்
உங்களுக்கு என் அன்புப்பரிசொன்று என் தளத்தில் காத்திருக்கின்றது. வந்து பெற்றுக்கொள்ளவும். வாழ்த்துக்கள்.
தாய் மொழி பற்றி அருமையான கருத்துகள், மொரிஷியசில் தமிழர்கள் உண்டாம் ஆனால் அவர்களுக்கு தமிழ் பேச எழுத படிக்க தெரியாதாம் என எங்கேயோ படித்த ஞாபகம். இனியும் அப்படி நடக்காமல் இருக்க வேண்டும்.
இங்க சிலதுகள் இலங்கையிலேயே தமிழரா பிறந்து போட்டு அஸ்க்கு புஸ்க்கெண்டு என்னவோ வேற பாஸையில கதைச்சுக்கொண்டெல்லாம் இருக்குதுகள் அதுக்கெல்லாம் என்ன வழி???
பதிவெழுத வந்தது எப்பிடி? என்று எழுத அழைத்தமைக்கு நன்றி விரைவில் எழுதுகிறேன்.
santhuru,
you say your mother never spoke Tamil.you also said there are some tamil children who can't speak tamil in colombo.
are you talking about colombo chetties or former negombo tamils who have changed their identity into sinhalese.
or are you trying to put a political point here that tamils should stop calling them tamils and become sinhalese?
how did you manage to read and write tamil although you come from a family that doesn't speak tamil?
எண்ணி எண்ணி
எழுதி வைத்து
என் மொழியில்
சொல்ல வந்தேன்
தாய் மொழியாம்
தமிழதனை
போற்றி விட
நினைத்ததனால்!
பொக்கிஷமாய்
காத்து வந்த
பொன் மொழியும்
தமிழல்லவா? – நம்
தாயைப் போல
காத்துக் கொள்ள
தமிழதுவும்
துணை எமக்கு!
தமிழைப் போல
சிறந்ததொரு
நல் மொழியும்
நானறியேன்
தரணியிலே
நானறிந்த
சிறந்த மொழி
தமிழதனால்!
உவகையோடு
உறைந்து விட
உன்னதமே
தமிழல்லவா?
உள்ளத்தையே
கொள்ளை கொள்ளும்
உருவகமும்
தமிழல்லவா?
கண் திறந்த
முதல் தினமே
கண்ணுற்றது
தமிழல்லவா?
களி கொள்ளும்
கருத்துக்களை
கொண்டதுவும்
தமிழல்லவா?
பேசப் பேச
இனித்து நிற்கும்
பெருமையுள்ளது
தமிழுக்கே
பேச்சைக் கொண்டே
ஆட்சிக் கொள்ளும்
பேரன்பும்
தமிழுக்கே!
சொல்ல சொல்ல
சோர்வு கொள்ளா
சொரூப மொழி
தமிழல்லவா
சொல்லிக் கொண்டே
போவதற்கு
ஏற்றதுவும்
தமிழல்லவா?
தமிழுக்குள்
வாழ்ந்து விட
புண்ணியமும்
நான் பெற்றேன்
என்றபோதும்,
மடிப்பிச்சை
வேண்டுகின்றேன்
செந்தமிழில்
கதைப்பேசும்
தமிழச்சியாய்
மறுபடியும்
நான் உதிக்க!
உங்கள் தமிழ் பற்று வியக்க வைக்கும் அதே சமயம் சிந்திக்கவும் வைக்கின்றது தமிழ் மொழி இன்னும் பல் நூற்றாண்டுகள் வாழும் என உங்கள் எழுத்துக்கள் உறுதி கூறுகின்றன மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்
தாய் மொழி என்பது எமது பெற்றோரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் மொழி என்ற உங்கள் கருத்து சரியானதே. ஆனாலும் பிஞ்சு உள்ளங்களில் எளிதில் நுழைவது அவர்கள் சூழலில் இருந்து பெறுவதே என்பது 100% உண்மை. இதுவே பெற்றோருடன் தாய் மொழியில் உரையாடினாலும் அவர்கள் வாழும் நாட்டவர் மொழியை இலகுவாக கதைப்பார்கள். பல சிறுவர்களிடம் நானும் அவதானித்து உள்ளேன்.
//அண்மையில் புலத்தில் இருந்து இங்கே வந்திருந்த ஒரு அழகான குடும்பத்தைச் சந்தித்தேன்.
அந்த பொற்றோரின் தமிழ் பற்று பாரட்டுக்குரியது
🙂
உண்மைதான் நங்கை..
நண்பரே நீங்கள் சொல்வது சரியே. புலம் பெயர்ந்து வாழ்வதும் அவர்களின் குழந்தைகள் தமிழ் கற்க பல இடையூருகளை சந்திக்கத்தான் வேண்டியுள்ளது என் குழந்தைகளை தாத்தா பாட்டிகளுக்கு கடிதம் எழுதச்சொல்கிறேன் அது சரிாக வரும் என நினைக்கிறேன்.