என்ன காதலிக்கின்றீர்களா.. உங்கள் காதலி உங்களிடம் பேசும் போது, கொஞ்சிக் குலாவும் வார்த்தைகளைக் கவனித்துள்ளீர்களா.. காதலி கொஞ்சும் காதல் மொழிகள் காதலர்க்கு உற்சாக அதிரசம். காதலி திட்டும் போது அவற்றை இரசித்துள்ளீர்களா.. என்ன காதலி திட்டும் போது இரசிக்கச் சொல்கின்றேனா.. இரசித்துப் பாருங்கள். அவர்களின் அழகுக்கே தனியழகு விளங்கி ஜொலிப்பார்கள். நெஞ்சம் தொட்டு இதயம் குடிகொண்டவள் செல்லமாக திட்டும் போது சிலிர்ப்புடன் காதல் எல்லைக் கோடுகளைக் கடக்கும். சொந்தம் பந்தம் ஏதும் இல்லாமல் கண்ணில் விழுந்து காதலன் நெஞ்சத்தில் உறைந்து அவனைக் காதலால் கட்டி வைத்து கண் சிரிக்கும் போது.. ஆகா.. அற்புதம். அனுபவித்தவர்களுக்குப் புரியும் நான் சொல்லும் வார்த்தைகள்… அவள் பேசும் போது நினைவைத் தொலைப்பீர்கள் பேசாவிட்டால் நிம்மதி தொலைப்பீர்கள்.
காதலர்கள் அனுபவிக்கும், இரசிக்கும், மயங்கும் காதலியின் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகள் ஏராளம். ஒவ்வொருவருக்கும் தமது காதலியிடம் பேசும் போது காதலியிடம் மயங்கும், அவளின் வார்த்தைகளில் மயங்கித் திழைக்கும் இரசனை மாறுபடுடலாம். அவற்றில் பல அனேகமாக ஒற்றுமைப்பட்டு இருந்தாலும் அவை ஒவ்வொருவர் இரசனையைப் பொறுத்து காதலர்களால் நோக்கப்படும். இங்கு பொதுவாக காதலர்களைக் கிறங்கடிக்கும் பத்து வார்த்தைகளைத் தொகுத்துத் தந்துள்ளேன். உங்களின் இரசனை இவற்றுடன் ஒத்துப்போகின்றதா.. கூறுங்களேன்..
1 – சீ போடா. ( Top score இதுக்குத்தான்)
2 – வாடாச் செல்லம்
3 – என் கண்ணுக்குட்டி.
4 – திருடா
5 – கள்ளா
6 – போடா ராஸ்கல் ( செல்லத் திட்டல் )
7 – நீ சரியான இம்சையடா
8 – சீ கையை எடுடா
9 – மொக்கன்னா குனா
10 – ம்……
என்ன அனுபவம் இருக்கின்றதா.. குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் காதலியர் திருவாய் மொழி கேளாதோர்..
Categories: எனது பார்வையில், ச்சீசி
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
Nw i understood wht s real LOVE..because…. 😛
//10 – ம்…… //
எதிர்ப்புத் தெரிவிக்கிறேன்…
இது முன்னிலை பெற வேண்டும்…
'ம்' இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன…
ஆனூல் நல்ல பதிவு…
வாழ்த்துக்கள்…
//என்ன அனுபவம் இருக்கின்றதா//
ம்…
நன்றி கஜீ.. இப்பயாச்சும் விளங்கிச்சே… அதுவரைக்கும் சந்தோசம் தான்.. 😉
உண்மைதான் கனககோபி.. அதுதான் சொன்னேனே காதலியிடம் இரசிக்கும் வார்த்தைககள் ஆளுக்கு ஆள் மாறுபடும்.. இருந்தாலும் உங்களது கருத்தை ஏற்றுக்கொள்கின்னேன்.. அவர்களின் ம்… என்ற இழுவலில் எவ்வளவோ அர்த்தம் இருக்கின்றது..
அப்புறம் நல்லா இரசித்துள்ளீர்கள் போலக்கிடக்கின்றது.. வாழ்த்துக்கள்..
@கதிர் – ஈரோடு
//என்ன அனுபவம் இருக்கின்றதா//
//ம்…
🙂
சொந்த அனுபவத்தில கிடைச்ச வசனங்களா சுபானு? எத்தனை காதலிகளிடம் ஆராய்ந்து பதிவு எழுதினீர்கள்? எப்படியோ நல்ல ஆராய்வுப்பதிவு வாழ்த்துக்கள்
சுபானுவின் அனுபவங்கள் கலக்கல். தனக்கு பிடிக்காத வார்த்தை கையை எடுங்கோ என எனக்கு போனில் சொன்னார் சுபானு
@யோ வாய்ஸ் (யோகா)
//சொந்த அனுபவத்தில கிடைச்ச வசனங்களா சுபானு? எத்தனை காதலிகளிடம் ஆராய்ந்து பதிவு எழுதினீர்கள்? எப்படியோ நல்ல ஆராய்வுப்பதிவு வாழ்த்துக்கள்
சொந்த அனுபவம் இல்லை.. எல்லாம் ஒரு ஊதித்தல்தான்.. இப்படியிருந்தா எப்படியிருக்கம் என யோசிச்சு பதிந்த பதிவு.. மற்றும்படி ஏதும் இல்லை..
நனறி,,
@வந்தியத்தேவன்
//சுபானுவின் அனுபவங்கள் கலக்கல். தனக்கு பிடிக்காத வார்த்தை கையை எடுங்கோ என எனக்கு போனில் சொன்னார் சுபானு.
நன்றி வந்தியண்ணா.. எப்பயப்பா நான் உங்களுக்கு போன் பண்ணிச் சொன்னான்..
ம்.. எனக்குப் பிடித்தது இந்தப் பதிவில் சொல்லவில்லை.. அது அவளது மௌன மொழிகள்..
போடாப்……பொறுக்கி யை விட்டுடீங்களே….
ம் தான் முன்னிலை.
கிடைக்காத காதல் காணமல் போன அல்லது அது கிடைக்காத காதல் காலாவதியாகிப் போன கணவான் பொறாமைப்படக்கூடாது ஆமா,,,,,
ம் சொல்லிப்புட்டேன்…..
இது எல்லாமே கற்பனைன்னு எப்படி உங்களால ஒரு பொய்யச் சொல்லமுடிஞ்சது…. அவங்க சொல்லச் சொன்னாங்களா?
@ஆரூரன் விசுவநாதன்
// போடாப்……பொறுக்கி யை விட்டுடீங்களே….
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ஆரூரன் விசுவநாதன்..
ம்.. மறந்திடுச்சு.. என் கற்பனைக்கு எட்டவில்லை..
@நாகு said…
// ம் தான் முன்னிலை.
// இது எல்லாமே கற்பனைன்னு எப்படி உங்களால ஒரு பொய்யச் சொல்லமுடிஞ்சது…. அவங்க சொல்லச் சொன்னாங்களா?
என்னாமே கலப்படமற்ற கற்பனை நாகு. நான் யாரையும் காதலிக்கவில்லை.. சும்மா கற்பனையில் எழுதிய பதிவு..
அச்சோ அச்சோ…. அச்சு அசலா அப்படியே போட்டிருக்கீங்களே….
உண்மைதான்னு நினைக்கிறேன்!
சீ கையை எடுடா தவிர ஏனைய அனைத்தும் ஒரு நல்ல நண்பியிடமும் பிடித்த வார்த்தைகள்.
அனுபவத்தில் சொல்கிறேன்…
சீ கையை எடுடா விற்கு காதல்தான் தேவைப்படும் ஆனால் மற்ற எல்லாவற்றுக்கும் நட்பும் வரும்…
@ஊர்சுற்றி
//அச்சோ அச்சோ…. அச்சு அசலா அப்படியே போட்டிருக்கீங்களே….
எல்லாம் ஒரு ஞானம் தான்… 🙂
@மதுவதனன் மௌ. / cowboymathu
// சீ கையை எடுடா தவிர ஏனைய அனைத்தும் ஒரு நல்ல நண்பியிடமும் பிடித்த வார்த்தைகள்.
அனுபவத்தில் சொல்கிறேன்…
சீ கையை எடுடா விற்கு காதல்தான் தேவைப்படும் ஆனால் மற்ற எல்லாவற்றுக்கும் நட்பும் வரும்…
ம் உண்மைதான்.. எனக்கு நல்ல அனுபவம் இருக்கின்றது.. என் நல்ல நண்பி ஒருவருடைய தொடர்பை தற்போது இழந்து விட்டேன்.. வந்த நண்பியை ஞாபகத்தில் கொண்டுவந்தமைக்கு நன்றிகள்..
அவர் பயன்படுத்தும் எனக்கு மிகவும் பிடித்த சொல் ”சரியான மொக்கன்னா குனா”..