நான் ஊஞ்சலாட வந்த கதை.. இல்லை இல்லை பதிவெழுத வந்த கதை.. நான் பதிவுலகில் கிறுக்குவதே பெரிய கதை. அப்படியிருக்க பதிவெழுத வந்த கதையென்று என்னத்தை இவன் அறுக்கப்பபோறானோ என்றா யோசிக்கின்றீர்கள். எல்லாம் எனது நண்பர் பால்குடி செய்த வேலை. பால்குடி பாலைக் குடித்து விட்டு என்னை கதைசொல்லக் கூப்பிட்டுள்ளார். என்ன செய்ய இதை வாசிக்கும் போது பால்குடிக்கு காதால் இல்லை கண்ணால் இரத்தம் வடியாமல் இருந்தால் சரி. என்கதை தொடங்கும் நேரம் இது…
அதாகப் பட்டது என்னவென்றால்.. இற்றைக்கு மூன்று ஆண்டுகளின் முன்னர்.. ஒருநாள்.. என்ன பால்குடி தூங்கவில்லைதானே.. நான் பல்கலைக்கழத்தில் மட்டம் இரண்டில் ( இரண்டாம் வருடம் : 2006ம் ஆண்டு ) படித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் நண்பர் நிமலுடனும் எனது மற்றய கணணித்துறை சார்ந்த நண்பர்களுடன் சேர்ந்து எமது பிரத்தியேக கல்வாங்கிலில் இருந்து வலைப்பூத் தொழில்நுட்பமும் அதனுடன் இணைந்த மற்றய தொழில்நுட்பங்கள் பற்றியும் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அதெப்படி மிகவும்
டைனமிக்காக வலைப்பக்கங்களை உருவாக்கிக்கொள்ள முடியும்? அதுவும் XML மூலமாக நமது வலைப்பக்கங்களை வடிவமைக்க முடியும்?
அப்படியான பல புதுமையன கேள்கள் எழுந்தன. சரி ஒருமுறை அது என்ன விடயம் என்று பார்ப்போமே என அடுத்த சில நாட்களில் வலைப்பூ
ஒன்றை நானும் என் இன்னோரு நண்பனும் சேர்ந்து உருவாக்கினோம். [ அந்த வலைப்பூ இந்த ஊஞ்சல் இல்லை. அதன் பயன்பாடு எமது மட்ட
மாணவர்களின் குறும்புத்தனமான வாளிச் செயற்பாடுகளை வெளிக்கொணர்வதே. ஆனால் பின்னர் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளினால் அந்த
வலைப்பூவின் பாவனை நிறுத்தப்பட்டது. ]. அதன் பின்னர் எமக்கு வலைப்பூத் தொழில்நுட்பம் மெல்ல விளங்கியது. பின்னர் சில
காலங்களுக்குள் எனக்கு வலைப்பூவின் மீது தனி ஈடுபாடு ஏற்பட்டது.
சரி எல்லோரும் நன்றாக எழுதுகின்றார்களே நாமும் ஏதாவது கிறுக்கித்தான் பார்ப்போமே என மெல்ல 2007ம் ஆண்டின் ஆரம்பக்காலங்களில்
எனக்கென சொந்தமாக இந்த ஊஞ்சலினைத் தொடங்கினேன். அதிலும் நான் blogspot இனைத் தேர்ந்தெடுத்தற்கும் சின்னக் காரணம்
இருக்கின்றது. வேறு ஒன்றும் இல்லை. blogspot என்னும் இந்த கூகுலின் சேவை இலகுவானதும் இலவசமானதும் ஆன சேவை. அத்துடன்
நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் கூகுல் என்னும் ஒரு மிகப்பெரிய வர்த்தக நிறுவனம் இந்த இலவச சேவையை ஒருபோதும் நிறுத்தாது
என்பதும் கூகுல் இன்டைக்ஸ்( Google Index ) இல் நல்ல நிலையை அடைய இந்த சேவை உதவும் எனவும் கருதியதால் இதனைத்
தேர்ந்தெடுத்தேன். ஏதாவது கிறுக்குவோம் எனத் தொடங்கினால் எதுவும் உருப்படியாக தோன்றவில்லை. இன்னும் ஒருமுறை நக்கல் நையாண்டியைக் கையிலெடுத்து உடைந்து போகவும் விருப்பமில்லை. சரி ஊருக்கு ஏதாவது நல்ல விடயத்தைச் சொல்லுவோமே என ஊருக்கு நல்லது சொல்வேன் என்னும் எனது கன்னிப் பூ பங்குனி மாதம் நாலாம் நாள் ஊஞ்சலில் மலர்ந்தது [ அதென்ன பங்குனி நாலாம் நாள் என்றா யோசிக்கின்றீர்கள்.. எல்லாக் காரணமும் வெளியில் சொல்லமுடியாதே ]. அவ்வளவு தான்.. பின்னர் நீண்ட காலத்திற்கு எதுவும் கிறுக்கியதில்லை.
நண்பர் நிமல் தான் வாசிக்கும் வலைப் பூக்களில் சிறந்த பதிவுகளை எடுத்து எமது நண்பர் வட்டத்திற்கு இமெயில் மூலமாகப் பகிர்ந்து கொள்ளும் நல்ல குணத்தைக் கொண்டவர். இவ்வாறு ஒரு நாள் அவர் பதிர்ந்து கொண்ட ஒரு வித்தியாசமான SKETCH இல் வரையப்பட்ட பூ நான் விற்கப்படுகிறேன்.. என்னும் கவிதையை. அந்தக் கவிதையை வாசித்து முடித்து விட்டுப்
பார்த்தால். அடடா.. இந்தக் கவிதைக்குச் சொந்தக்காரர் நமக்குத் தெரிந்தவரல்லோ என உடனடியாக அவருக்கு ஒரு இமெயில் போட்டுவிட்டு
உண்மையைச் சொல்லுங்கள் இது உங்களின் வலைப்பூவா எனக் கேட்டேன். அவரிடம் இருந்த தனதில்லை எனப்பதில் வர உடனடியாக அந்த
SKETCH இல் வரையப்பட்ட அத்தனை பூக்களையும் வாசித்து முடித்தேன். நான் விருப்பி வாசித்த முதல் வலைப்பூ அந்த SKETCH. இவ்வாறு எனது
வலைப்பூக்கள் வாசிக்கும் பழக்கம் அறிமுகமானது. பின்னர் மெல்லமெல்ல நானும் எனது கிறுக்கல்களைத் தொடங்கினேன்.
நான் கா.போ.தா உயர்தரம் தரம் படித்து முடித்து பெறுவேற்றுக்குக் காத்திருந்த காலங்களில் எனது அம்மாவினது முதுநிலைமானிப் பட்டப்
படிப்பிற்கு தேவையான செயற்பாட்டு அறிக்கைகளை நான் தான் கணணித் தட்டச்சு செய்து கொடுத்தேன். அதனால் எனக்கு பாமினி கீபோடும் ஆங்கிலக் கீபோட் மாதிரியும் எனது மனதிலும் விரகளிலும் நல்ல பழக்கத்திற்கு வந்திருந்தது. பின்னர் யுனிக்கோட் பயன்பாடு வரும்போது NHMWriter இல் யுனிக்கோட்டாக பாமினியைப் பயன்படுத்தத் தொடங்கினேன். இதனால் எனக்கு பாமினியை இன்றும் NHMWriter இல் யுனிக்கோட்பாகப் பயன்படுத்துவதில் எந்த சிக்லலோ தட்டச்சு வேகக்குறைவோ இருக்கவில்லை.
இவ்வளவுதான் நான் ஊஞ்சலாட வந்த கதை. இல்லை பதிவெழுத வந்த கதை. என்ன பால்குடி தூங்கியாச்சா…
இந்த ஊஞ்சலில் நான் எவ்வாறு கிறுக்தொடங்கினேன் என்பது பற்றி எனது நண்பர் பால்குடி கேட்டுக்கொண்டார். அவருக்கு எனது நன்றிகள். அவர் என்னிடம் பரிமாறிய இந்தப் பந்தினை நானும் பரிமாற வேண்டும். ஆனால் நான் பரிமாற்றம் செய்ய கூடிய காலம் எடுத்துக் கொண்டதனால் நான் ஏற்கனவே பரிமாற்ற நினைத்த சிலருக்கு வேறு பதிவுலக நண்பர்கள் பரிமாற்றிவிட்டதனால் நான் இரண்டு பேருக்கு மாத்திரம் இந்தப் பந்தைப் பரிமாற்றுகின்றேன்.
கார்த்தி – விடிவெள்ளி
சுபாங்கன் – ஐந்தறைப் பெட்டி
இவர்கள் இருவரும் தற்போது யாழில் இருப்பதனால் திரும்பி வரும் போது நல்ல மண்வாசத்துடன் பதிவெழுத வந்த கதையினைத் தருவார்கள் என நம்புகின்றேன்.
Categories: குறும்புகள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
//கூகுல் இன்டைக்ஸ்( Google Index ) இல் நல்ல நிலையை அடைய இந்த சேவை உதவும் எனவும் கருதியதால் இதனைத் தேர்ந்தெடுத்தேன்.//
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியேல்ல?
பால்குடி நித்திரைதான் போல கிடக்கு.. இன்னும் பின்னூட்டத்தைக் காணேல்லை.. lol..
ரசித்தேன் சுபானு :)))
சுருக்கமா முடிச்சிட்டீங்க !!!
//பங்குனி மாதம் நாலாம் நாள்
எனக்குத் தெரியுமே…. ஆனால் ஒருத்தருக்கும் சொல்லமாட்டேனே…
அடோய், அந்த "விழிப்பு" நீயா?
@ஆதித்தன்
//கூகுல் இன்டைக்ஸ்( Google Index ) இல் நல்ல நிலையை அடைய இந்த சேவை உதவும் எனவும் கருதியதால் இதனைத் தேர்ந்தெடுத்தேன்.//
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியேல்ல?
சும்மா கொஞ்சம் கூட ஆசைப்பட்டுட்டமோ..
பெருசா ஆசைப்பட்டாத்தான் சொஞ்சமாவது கிடைக்கும்.. அதனாலதான்..
@Kiruthikan Kumarasamy
// பால்குடி நித்திரைதான் போல
ரசித்தேன் சுபானு :)))
நன்றி கிருதிகன்..
@பால்குடி
//பங்குனி மாதம் நாலாம் நாள்
//எனக்குத் தெரியுமே…. ஆனால் ஒருத்தருக்கும் சொல்லமாட்டேனே…
மொத்தத்தில எனக்கு வெற்றி!!! 😉
@மாயா
//சுருக்கமா முடிச்சிட்டீங்க !!!
நீண்டகாலமா கிடப்பில் போட்டுவிட்டு இப்போதுதான் பதிந்தேன்.. சொல்வதற்கு என்னிடம் ஏதுமில்லை மாயா.. என்ன செய்ய அதனால்த்தான் சுருக்கமா முடிச்சிட்டன்.. நன்றி 🙂
@Sanchayan
//அடோய், அந்த "விழிப்பு" நீயா?
டேய்.. என்ன என்ன வம்பில மாட்டுவாய் போலக்கிடக்கு.. பகிரங்க ஒப்புதல் வாக்குமூலம் தரப்படமாட்டாது. ஆனால் விழிப்பு ஒரு geocities வலைப்பக்கம்.. அது வலைப் பூ இல்லை.. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை..
ம்ம் மிகவும் சுருக்கமாக முடித்துவிட்டீர்கள், பாமினியின் காதலானக நீங்களும் இருப்பதில் மகிழ்ச்சி.
ஸ்கெட்சுக்கு சொந்தக்காரர் பாவை. பங்குனி 4 என்ன திகதி என்பது எனக்கும் தெரியும்.
சுபானு திருமண சேவையை எப்படித் தொடங்கினீர்கள் என்பதை ஏனோ மறந்துவிட்டீர்கள்
@வந்தியத்தேவன்
// ம்ம் மிகவும் சுருக்கமாக முடித்துவிட்டீர்கள், பாமினியின் காதலானக நீங்களும் இருப்பதில் மகிழ்ச்சி.
பாமினி என்னைப் பொறுத்தவரை மிகவும் இலகுவான கீபோட் லேயவுட்.
// பங்குனி 4 என்ன திகதி என்பது எனக்கும் தெரியும்.
ஆகா.. அடிச்சும் கேட்பாங்க சொல்லீடாதீங்க..
//சுபானு திருமண சேவையை எப்படித் தொடங்கினீர்கள் என்பதை ஏனோ மறந்துவிட்டீர்கள்..
தொழில் இரகசியங்கள் சொல்லப்பாடாது வந்தியண்ணா..
தொடர்ந்து ஊஞ்சலாட வாழ்த்துக்கள்…
அடோ சஞ்செயா… விழிப்பு என்ன விழிப்பு… முகமூடியை மறந்திட்டாய் போல கிடக்கு…
(சுபானு, இது எப்பிடி இருக்கு?)
@யோ வாய்ஸ் (யோகா)
நன்றி.. 🙂
@பால்குடி
//அடோ சஞ்செயா… விழிப்பு என்ன விழிப்பு… முகமூடியை மறந்திட்டாய் போல கிடக்கு… (சுபானு, இது எப்பிடி இருக்கு?)
நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு…
//நான் விருப்பி வாசித்த முதல் வலைப்பூ அந்த SKETCH
நன்றி சுபானு.. இப்படி வாசிக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாகவும் அடடா தொடர்ந்து எழுதியிருக்கலாமோ என்றும் தோன்றுது.. 🙂
Naanநான் வலைப்பூ பதிவு இடக் காரணமாய் அமைந்ததும் SKETCH தான்.
🙂
ஊஞ்சல் தொடர்ந்து ஆட வாழ்த்துக்கள்
🙂
@Nangai
//நான் வலைப்பூ பதிவு இடக் காரணமாய் அமைந்ததும் SKETCH தான்.
🙂
ஊஞ்சல் தொடர்ந்து ஆட வாழ்த்துக்கள்
🙂
மிக்க சந்தோசம் உங்களிம் இருந்து பின்னூட்டம் வந்தது நங்கை. மிக்க நன்றிகள்.. 🙂