Month: September 2009
கவிப் பேரரசு வைரமுத்துவின் காதலித்துப் பார் என்ற கவிதையை வாசிச்சிருப்பீர்கள். அழகான காதல் கவிதை. அண்மையில் லோசன் அண்ணாவின் ஃபெயில் பண்ணிப்பார் என்ற சுவாரஸ்யமிக்க கவிதையை வாசித்தேன். அழகாக ஃபெயில் பண்ணிய மாணவன் ஒருவனின் உணர்வுகளை வடித்திருந்தார். மிகவும் இரசித்து வாசித்தேன். சரி ஃபெயில் பண்ணிய மாணவன் ஒருவனின் உணர்வுகளை தெளிவாக பிரதி பண்ணியிருந்த அந்தக் கவிதைப் படித்திருப்பீர்கள். இப்போது அதே மாணவன் 3 A எடுத்திருந்தால் எப்படியிருக்கும். இதோ லோசனின் ஃபெயில் பண்ணிப்பார் இற்குப் போட்டியாக
Read Moreநேற்று சக பதிவர் ஒருவருடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போது கேட்டார் உங்களுக்கு என்ன என்ன பிடிக்கும் என்ன என்ன பிடிக்காது எனச் சொல்லுங்களேன் என்று. சரி எனக்கு என்ன என்ன பிடிக்கும் எனப் பட்டியல்ப்படுத்த வெளிக்கிட்டால் அது பெரும் இராட்ஷச ரயில் போல நீளத் தொடங்கியது. கொஞ்ச நேரத்திற்குப் பொறுமையாகக் கேட்டவர் பின்னர் கடுப்பு வந்ததோ என்னமோ தெரியாது நீங்கள் பதிவொன்றில் போடுங்களேன் நான் இரசித்தது போல மற்றவரகளும் இரசிக்கட்டுமே எனக் கேட்டுக்கொண்டார். உண்மையிலே தாம்
Read Moreஎல்லைகள் அற்ற இந்தப் பிரபஞ்சத்தின் மூலைமுடுக்கெங்கும் கணப்பொழுதில் சென்றடையக் கூடிய உங்கள் கற்பனைக் குதிரையில் ஏறி என்னோடு சிறிது பயணியுங்கள். நீங்கள் என்றும் கண்டிராத ஒரு அற்புத உலகிற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். “நாங்கள் இன்னும் 480 வினாடிகளில் சூரிய ஈர்ப்புக்கு அப்பால் சென்றுவிடுவோம். இந்த செய்தி மடலுடன் எமக்கும் உங்களுக்குமான இருவழித் தொடர்பு முற்றாக விலகுகின்றது. இன்னும் சரியாக 60 வினாடிகளில் நாங்கள் ஒளியின் வேகத்தினை அடைந்து விடுவோம். எமது இந்தப் பயணத்தின் குறிக்கொள் வெற்றி
Read Moreஅலுவலகத்தில் நீண்ட வேலைக் களைப்பில் நள்ளிரவு தாண்டிய நேற்றைய இரவில் மெல்லக் காலாற மனதிற்கு இதமாக வெற்றி FM மை மெல்லிய தொனியில் iPod இனை காதுகளுக்கருகில் நீட்டப்பட்ட headset என்னும் தொடுப்பின் ஊடாக மெல்ல இசைக்க விட்டபடி காலி வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தேன். நள்ளிரவில் தூறிச் சென்ற மழையின் பின் இதமாக வீசிக் கொண்டிருந்த மெல்லிய காற்று முகத்தில் படும்போதெல்லாம் எனக்குள் சிலுசிலிர்க்க வைத்தன என் நரம்பு மண்டலங்கள். என்னை நான் மறந்து, கால்கள்
Read Moreஅழகான பூக்களை புகைப் படங்களாக்குவது எவ்வளவு சுவாரஸ்யமான அழகான விடயம். கட்டுப்பெத்தை சந்தியில் தம்பி வாங்கி வந்த ரோஜா வாங்கிவரும்போதே இரண்டு மொட்டு விட்டிருந்தது. எப்போது பூக்கும் எனக் காத்திருந்த போது இன்று காலை நித்திரைவிட்டு எழுந்ததும் பூத்திருந்த அந்த ரோஜாப் பூத்தான் கண்ணில்ப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அதிகாலை என் வாசலை நனைத்துச் சென்ற அந்த தூறல் மழை மேலும் அழகு சேர்த்திருந்தது பூவிற்கு. உடனடியாக cameraவினை எடுத்து ரோஜாவினை படங்களாக்கினேன்.. அதன் பின்னர்தான் அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றேன்.
Read Moreமனிதனை ஏனைய விலங்களில் இருந்து வேறுபடுத்தி அவனுக்கேன்று தனித்துவத்தைக் கொடுப்பது அவனின் பேச்சாற்றல். இந்தப் பேச்சுத்திறமை என்பது இன்று நேற்று வந்த ஆற்றல் அல்ல. பல நீண்ட பரிணாம வளர்ச்சிப் பின்னணி இந்த பேச்சாற்றலோடு தொடர்புடைய மொழிப் பிரயோகத்திற்கு உண்டு. இவ்வாறு பல வளர்ச்சிகளைக் கடந்து இன்று தனக்கென்ற தான் பயன்படுத்தப்படும் பிரயோக நிலைகளில் தனது தனித்துவத்தைப் பேணுகின்றன ஒவ்வோர் மொழியும். ஒவ்வோர் சமூகத்திற்குமான கலாச்சார விழுமியக் கோட்பாடுகளின் கட்டமைப்பிலான ஒழுங்கமைப்புகள் மொழி என்னும் அடித்தின் மீதே
Read Moreமழை விட்டும் நிற்காத தூவானமாய் எனை விட்டுப் போன பின்னும் சாரலாகின்றனவே உன் நினைவலைகள். நம் காதலெனும் பூ அரும்பிப் பின் போதாகி நம் இதயங்களில் மலராகியதே வீணான நம் கோபங்களால் வீ யெனும் நிலையெய்து நம் இதயத்தின் வாசலில் செம்மலாகிப்போன ஏன் முரண்பாடுகளுக்குத் தீர்வு மீண்டும் மீண்டும் முரண்படுவதால் தீரப்போவதில்லையடி முரண்பட்டது போதும் கண்னே என்னோடு முரண்பாடுகள் கழைய பேசிவிடு என்னோடு முள்களைத் தாண்டி மலரும் ரோஜா போல-நெருஞ்சி முள்கள் எனும் பிடிவாதத்தை அகற்றி முள்களைத்
Read Moreஎன்ன காதலிக்கின்றீர்களா.. உங்கள் காதலி உங்களிடம் பேசும் போது, கொஞ்சிக் குலாவும் வார்த்தைகளைக் கவனித்துள்ளீர்களா.. காதலி கொஞ்சும் காதல் மொழிகள் காதலர்க்கு உற்சாக அதிரசம். காதலி திட்டும் போது அவற்றை இரசித்துள்ளீர்களா.. என்ன காதலி திட்டும் போது இரசிக்கச் சொல்கின்றேனா.. இரசித்துப் பாருங்கள். அவர்களின் அழகுக்கே தனியழகு விளங்கி ஜொலிப்பார்கள். நெஞ்சம் தொட்டு இதயம் குடிகொண்டவள் செல்லமாக திட்டும் போது சிலிர்ப்புடன் காதல் எல்லைக் கோடுகளைக் கடக்கும். சொந்தம் பந்தம் ஏதும் இல்லாமல் கண்ணில் விழுந்து காதலன்
Read Moreநான் ஊஞ்சலாட வந்த கதை.. இல்லை இல்லை பதிவெழுத வந்த கதை.. நான் பதிவுலகில் கிறுக்குவதே பெரிய கதை. அப்படியிருக்க பதிவெழுத வந்த கதையென்று என்னத்தை இவன் அறுக்கப்பபோறானோ என்றா யோசிக்கின்றீர்கள். எல்லாம் எனது நண்பர் பால்குடி செய்த வேலை. பால்குடி பாலைக் குடித்து விட்டு என்னை கதைசொல்லக் கூப்பிட்டுள்ளார். என்ன செய்ய இதை வாசிக்கும் போது பால்குடிக்கு காதால் இல்லை கண்ணால் இரத்தம் வடியாமல் இருந்தால் சரி. என்கதை தொடங்கும் நேரம் இது… அதாகப் பட்டது
Read Moreநீண்ட பெருவெளியில் பயணிப்பது போல நாம் வாழ்க்கை போய் கொண்டே இருக்கின்றது. அந்தப் பயணப் பாதை மென்மையா பூக்கள் சொரியும் மலர்ப் பாதையாக இருக்க வேண்டும் என்பதே பயணத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரதும் விருப்பம். ஆனால் அந்தப் பயணப் பாதை அவ்வாறு ஒருவருக்கும் மலர்பாதையாக இருப்பதில்லை என்பதே தெளிவான உண்மை. வலிதரும் முட்களும் ஆள் விழுங்கும் புதைகுழிகளும் கசப்புக்கள் நிறைந்த பாலைநிலங்களும் என அந்தப் பாதை நெடுகிலும் பல்லாயிரம் குறைகள் அங்கே காணப்பட்டாலும் ஆங்காங்கே பன்னீர் என்னும் இன்ப
Read More