டிவிட்டர் டிவிட்டர் டிவிட்டர்… எங்கு காணினும் டிவிட்டரடா.. அண்மையில் அசினின் டிவிட்டரை தான் கண்டுபிடித்ததாகவும் ஆனால் திடீர் என்று அது காணாமல் போய் விட்டாகவும் பின்னர் மீண்டும் அசின் டிவிட்டரில் உயிர்பெற்றதாகவும் ஒரு டிவிட்டர் புரட்சி ஒன்றை செய்திருந்தார் நம்ம சாரல் சயந்தன். என்னடா இது என்று பார்த்தால் உண்மையில் அது அசினின் டிவிட்டர் தானா என்பதே பெருத்த சந்தேகமாக இருந்தது. நேற்று நம்ம புல்லட் அண்ணா திடீர் என்று துள்ளிக் குதித்தார். ஏன் என்று பார்த்தால் மல்லிகா செராவத் தனக்கு டிவிட் இட்டாராம். அந்த அசின் மட்டும் இன்னமும் தனக்கு டிவிட் இடவில்லையாம்.. கவலை வேறு.. ஆனால் அவருக்குத் தெரியவில்லை போலும் அவையெல்லாம் பொய்யான டிவிட்டர்கள் என்று.
சரி இப்படிப் பொய்யான டிவிட்டர்களுக்கு நடுவே யார் யார் எல்லாம் டிவிட்டர் பயன்படுத்துகின்றார்கள் எனத் தேடிக் கண்டுபிடிப்பது ஒரு முக்கியமான விடையம். நாமளும் டிவிட்டர் பயன்படுத்துகிறமில்ல.. வேறு யார் யார் வலைப்பூக்களில் மிளிர்கின்றவர்கள் டிவிட்டர் வைத்திருக்கின்றார்கள் எனக் கண்டுபிடித்து அவற்றைத் தரலாமே என்ன நல்ல எண்ணத்தில் தேடிய போது ஒரு பெரிய லிஸ்டே வந்துவிட்டது. எனக்குத்தெரிந்து டிவிட்டர் பயன் படுத்தும் வலைப்பூப் பிரபலங்கள் இவர்கள். அக்மாத் முத்திரை குத்திய 100% உண்மையான டிவிட்டர்கள். நம்பித் தொடரலாம். நான் பின் தொடர்பவர்களின் விபரங்களில் இருந்தே இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டது. உங்களுக்கு வேறுயாராவது தெரிந்திருந்தால் அறியத் தரவும்..
Categories: எனக்குத் தெரிந்தவை, சுயதம்பட்டம்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
எங்களை எல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?
ஐயேயோ… அதுதானே சொன்னேனே..
நான் பின் தொடர்பவர்களின் விபரங்களில் இருந்தே இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டது. மன்னிக்கவும்..!
தங்களுடையதை நான் இன்னமும் காணவில்லை.. 🙁 அது என்தவறுதான்.. இணைத்துக்தொள்கின்றேன்..
சும்மா சும்மா. இல்லை எங்களைச் சின்னப்பொடியளாக நினைச்சிட்டியள் என நினைத்தேன் அதுதான் உண்மை.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. 🙂
நான் பின்தொடரும் இன்னும் சிலர்…
someeth
snapjudge
sairam2000
ravidreams
mmauran
mbchandar
marudhan
luckykrishna
ksnagarajan
ilamurugu
icarusprakash
engineer2207
enathu
bseshadri
writerpara
thamizhsasi
spinesurgeon
நன்றி நிமல்.. இவர்களையும் இணைப்பில் சேர்க்கின்றேன்..
@சுபானு:
வலைப்பூ – சரி
டிவிட்டர் – சரி
ஆனா, என்னை வலைப்பூ பிரபலங்கள் என்ற லிஸ்டில் சேர்த்திருக்கிறீரே.. குசும்புதானே உங்களுக்கு :-))
@:: மை ஃபிரண்ட் ::.
இல்லையா பின்ன?? அதுசரி யாரப்பா அந்த அழகான குட்டி தேவதை!
வருகைக்கு நன்றிகள்.. 🙂
பதிவிடுறதே மிகக் குறைவு.. அதுக்க நாங்களெல்லாம் பிரபலமா… 😉
நிற்க.. மது என்று நானும் மேலும் இரண்டு பெண்பிள்ளைகளும் பதிவிடுவதால் அதனை கௌபாய்மது என்றோ மதுவதனன் மௌ என்றோ மாத்திவிடுங்கோ… பொம்புளைப் பிள்ளை எண்டு நினைச்சு கனபேர் தொடர வெளிக்கிட்டுடுவினம்.. 😀
@மதுவதனன் மௌ. / cowboymathu
அவ்வாறே.. ஆகுக..
நானும் டிவிட்டுரேன்
http://www.twitter.com/thiratti
வெங்கடேஷ்
நன்றி வெங்கடேஷ். இணைப்பினைத் தந்தமைக்கு நன்றி..
இங்கேயும் வாங்க …….
http://www.twitter.com/ulavu
நிட்சயமாக!.. நன்றிகள்
இணைத்துக் கொண்டோம்…
எல்லாரும் என்னைப் பாட்டு கும்முவதை வன்மையாக கண்டிக்கிறேன்.. நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு அசின் மல்லிகா மலபார் எண்டு… நடுவில ஏன் அது டூப்பு டுபுக்கு எண்டு கொள்ளிய செருவுறீங்கள்… அது மேர்டர் மல்லிகை செராவத்தின் எகௌண்ட் என்பதை உள்மனம் சொல்கிறது… அவ்வாறே அம்பிகை அசின் தொட்டுமுக்கலப்பெருமாளின் ட்வீட்டு பெறாமல் இந்த ஜென்ம பலன் சித்திக்காது சுபானு…
@புல்லட்
//அம்பிகை அசின் தொட்டுமுக்கலப்பெருமாளின் ட்வீட்டு பெறாமல் இந்த ஜென்ம பலன் சித்திக்காது சுபானு…
நல்ல ஜென்ம பலன்தான்.. அப்ப வாழ்த்துக்கள்… கெதியா உங்கட ஜென்ம பலன்கிட்டட்டும்… 🙂
என்ன செய்ய அசினுக்குத் தமிழ் வாசிக்கத்தெரிந்து இந்தப்பதிவை வாசிச்சாங்கள் என்றால்.. நிச்சயமா.. உங்களுக்கு ட்விட் பண்ணுவாங்க புல்லட்…
அந்த மல்லிகா செராவத்திற்காக யார் ட்விட் பண்ணுறாங்களோ தெரியாது.. அதுக்குள்ள அது மல்லிகை செராவத்தின் எகௌண்ட் என்பதை உள்மனம் சொல்லுதாம் புல்லட்டுக்கு…
என்ன கொடுமை..
அவரின்ர பேர் 'பெயரிளி' இல்லைங்கோ, 'பெயரிலி'. இன்னும் சரியாச் சொல்ல வேணுமெண்டால் '-/பெயரிலி.'