பின்ன என்ன! மிகக் குறுகிய காலத்தில் பலரும் வியக்கும் வண்ணம் எண்பதிற்கும் மேற்பட்ட இலங்கைப் பதிவர்களை ஒன்றிணைத்து, அதனை விடவும் நேரலையில் நுாறிற்கும் மேற்பட்ட பதிவர்களை கவர்ந்திழுத்து ஆர்வத்துடன் தமது கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ள வைத்த இந்த இலங்கைப் பதிவர் சந்திப்பு வரலாற்றின் பக்கத்தில் பதியப்படவேண்டிய ஒன்றுதானே. ஏற்பாட்டுக்குழுவின் நேர்த்தியான திட்டமிடலாலும் கால நேரம் பாராத கடின முயற்சியினாலும் மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்துப் பதிவர்களினதும் கைகோர்த்த பேராதரவினாலுமே இந்த வரலாற்றுப் பதிவு சாத்தியமாகியது.
வெள்ளவத்தை தமிழ்ச்சங்க வினோதன் மண்டபத்தே அனைவருமே, பிரபஞ்சத்தின் விண்மீன்கள் ஒன்று சேரப் பளிச்சிட்டுக் குதூகலிப்பது போல மகிழ்ச்சியில் குதுாகலித்தோம். பல பல வலைப்பூக்களின் இனிய நறுமணம் அங்கே வியாவித்திருந்தது. தன் பங்கிற்கு தமிழ்ச்சங்க வாசலோரத்தில் மஞ்சள் பூக்களைச் சொரிந்தது பெயரறியா அந்த நெடுமரம்.
திட்டமிட்ட படி மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் சிறப்பாகவும் காலை 9:15 இற்குத் தொடங்கியது இலங்கை வலைப்பதிவர் கலந்துரையாடல் நிகழ்ச்சி. பல புதிய முகங்களின் இனிய அறிமுகங்கள். வலைப் பூக்களில் முகம் தெரியாது பழகி நண்பர்களாகி இணையத்தில் உலாவியவர்கள் இன்று முகம் மலர்ந்து ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்ட காலைநேரம் அது. 9:15 மணிக்கு நிகழ்ச்சிகளை தனது அறிமுகவுரை மூலம் எமது புல்லட் இனிதே தொடங்கி வைத்தார். தமது வழமையான நக்கல் கலந்த சர வெடிகளை சிறிது சிதறவிட்டு மெல்ல ஒலிவாங்கினை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்காக எமது சதீஸிடம் கையளித்தார். சில்லெனச் சிதறும் மழைத்துளி போன்று சதீஸ் இன் நிகழ்ச்சித் தொகுப்பு இரசனை மிக்கதாக இருந்தது. அடுத்த வலைப்பதிவும் சட்டமும் நிகழ்ச்சிக்காக மெல்ல அவர் ஒலிவாங்கியை என்னிடம் ஒப்படைத்தார். வலைப்பதிவும் சட்டமும் – அதாவது ஒரு பதிவர் அறிந்து கொண்டிருக்க வேண்டிய இணையச் சட்டங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் ஒன்று வழங்கப்பட்டது. (அந்த நிகழ்ச்சி எப்படியிருந்தது என்பதைப்பற்றி மற்றவர்கள் தான் சொல்ல வேண்டும். நல்லாயிருந்திருக்கும் என நம்புவோம்..)
23-08-2009 Blogger இன் 10வது பிறந்தநாள் கேக்கை எழுமாற்றாகத் தெரிந்த 10 பேரைக்கொண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றியும் கேக்கை வெட்டியும் கொண்டாடினார் எமது ஆதிரை. பின்னர் மருதவூரான் எழுந்தார் திரட்டிகள் பற்றி அருமையாக விளக்கினார். என்ன யாழ்தேவி காங்தேசந்துறை வந்தும் நிற்காது ஓடப்பார்த்தது. அனைவரது ஒத்துழைப்பாலும் இழுத்துக் கொண்டுவந்து தொழுவத்தில் கட்டுவது போல காங்கேசந்துறையில் சேர்த்து விட்டார்கள். அதன் பின்னர் எழுந்த சேரன் கிரிஷ் இணையத் தொழில்நுட்பங்களைப் பற்றி தெளிவாக செல்லத்தமிழில் விளக்கம் தந்தார். அங்கிருந்த சின்னப்பாலகனுக்கும் விளங்கும் வகையில் அருமையாக இருந்தது அந்த உரை.
எமது சிறப்பு விருந்தினர் திரு எழில்வேந்தன் பல புதிய விளக்கங்கள் தந்தார். அதன் பின்னர் லோசன் அண்ண தனது பதிவுலக அனுபவகள் பற்றி அருமையாக சொன்னார். நமிதாவின் சிங்கத்திலிருந்து கிறிக்கட் பதிவுகள் வரை பதிர்ந்து கொண்டார். நல்ல இதமான மழையில் நனைந்தது போலிருந்தது. பின்னர் கலந்துரையாடல்… மெல்ல மெல்லத்தான் ஆரம்பத்தில் நடைபோட்டு வந்தது கலந்துரையாடல், யாழ்தேவியைக் கண்டதும் கடகடவென ஓட ஆரம்பித்தது. என்ன செய்வோம் பதிலுக்கு நாங்கள் விசைப்பலகை பற்றியும் கதைப்போம் என இன்னொரு சாரார் எழுந்தார்கள். இறுதியில் 12 மணிக்கு கலந்துரையாடலை முடிக்க ஒருவாறு ஒத்துக் கொண்டார்கள். (ஞாயிற்றுக் கிழமை விஷ்னு கோவிலுக்குப் போவதற்காக வாசலோரத்தில் காத்திருந்த நண்பன் என்னைத் திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எப்படிச் சொல்லது நாங்கள் யாழ்தேவியில் பறந்து கொண்டிருந்ததைப் பற்றி)
பின்னர் எழுந்தார் எமது மூத்த பிரபல **** பதிவர் வந்தியத்தேவன் அண்ணா.. பின்னூட்டத்திற்குப் பின்னூட்டம் இடுவது போன்று மிகவும் நாசுக்காக பல விடையங்களை நக்கல் என்னும் மேகப் போர்வை போர்த்து தனது நன்றியுரையை வழங்கினார். ஒருவாறு கிட்டத்தட்ட 12:45 மணியளவில் நிகழ்வு நிறைவையெய்தும் போது நம் எல்லோர் முகத்திலும் திருப்தியும் வெற்றிக்களிப்பும் கலந்த சந்தோசம்.
வரலாற்றில் முதல் முறையாக உலகம் எங்கும் ஒரே நேரத்தில் கண்டு களிக்கதத்க வகையில் நேரலையில் ஒலி ஒளிபரப்பி (மது அண்ணாவிற்குத்தான் நன்றிகள் சொல்ல வேண்டும்.) நிகழ்ச்சிகளை ஒருங்கினைத்த இலங்கைப்பதிவர் சந்திப்பில் நானும் கலந்துகொண்ட மகிழ்ச்சியில்ப் பதியும் பதிவிது. (சும்மா ஒரு பில்டப்தான்.. வேறு என்ன..). இது அனைத்தும் இலங்கையில் உள்ள அனைத்துப் பதிவர்களினதும் கைகோர்த்த பேராதரவினாலேயே சாத்தியமாகியது.
எனக்கு முதல் பலர் இதுபற்றி அழகாக அவரவர்க்குரிய பாணியில் பதிந்து வலையுலகின் பார்வையைத் தம்மேல் திருப்பி விட்டார்கள். அவர்களில் சிலரின் பதிவுகளுக்கான கொடுப்பு
இங்கே.
முதலாவது பதிவர் சந்திப்பு – சில நிகழ்வுகள் சில தகவல்கள் சில படங்கள் – லோசன்
நாம் சாதித்துவிட்டோம் – வந்தியத்தேவன்
பதிவர் சந்திப்பு – சில புகைப்படங்கள் ஆதிரை
இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு – வானம்பாடிகள் (எ) பாலா
முதலாவதிலேயே கலக்கிட்டமில்ல… – புல்லட்
சந்திப்பு – எனது பார்வை – பால்குடி
இலங்கைப் பதிவர் சந்திப்பு – ஒலி வடிவில் முழுதும் – மதுவதனன்.கொ
முதல் சந்திப்பு பற்றி – விகிபீடியா
இன்னும் இருக்கு…
Categories: இலங்கை, எனது பார்வையில், குறிப்புக்கள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
மிக்க நன்றி, நல்ல பதிவோடு படங்களும்
நயனின் சிங்கத்தை நமிக்குப் பொருத்தி அழகு பார்க்கும் சுபானுவுக்கு வன்மையான கண்டனங்கள்
intha pathivilthaan thelivana padangalai paarkka mudikirathu.
நன்றி கானாபிரபா..
உங்களின் சேரடிச் சட்டிங்கையும் பார்த்து இரசித்தோம்.. அருகில் இருந்து கதைப்பது போலவே இருந்தது..
@ஆதிரை
//நயனின் சிங்கத்தை நமிக்குப் பொருத்தி அழகு பார்க்கும் சுபானுவுக்கு வன்மையான கண்டனங்கள்.
ஆகா… நயனின் சிங்கம் கவனக் குறைவால் நமிதாவிற்குப் போய்விட்டதே.. லோசன் அண்ணா பார்த்தா பேசப்போறார்..
@Anonymous
// intha pathivilthaan thelivana padangalai paarkka mudikirathu.
நன்றி அனானி.. என்ன அனானியாக பின்னுாட்டம் இட்டுள்ளீர்கள்.. !
முதல் சந்திப்பே அசத்தல். இனி என்ன சாதிப்போம் பதிவுலகில்.
பதிவு சிறப்பாக படங்களோடு இணைந்திருந்தது அருமை.
"வலைப்பதிவும் சட்டமும்" பற்றிய உங்களது உரையாடலை ஒரு பதிவாகத் தருவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
இணையவழியாகப் பார்க்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்
நன்றி சந்ரு, ஈழவன் மற்றும் யோ வாய்ஸ் .. 🙂
//வலைப்பதிவும் சட்டமும் – அதாவது ஒரு பதிவர் அறிந்து கொண்டிருக்க வேண்டிய இணையச் சட்டங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் ஒன்று வழங்கப்பட்டது.//
நல்லாயிருந்தது பல விடயங்களை மிகக்குறுகிய கால தயாரிப்பில் சொன்னீர்கள்.
// நமிதாவின் சிங்கத்திலிருந்து கிறிக்கட் பதிவுகள் வரை பதிர்ந்து கொண்டார். //
முதலில் நல்ல கண் டொக்டரை அணுகவும், நயந்தாராவுக்கும் நமீதாவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை,.
//எமது மூத்த பிரபல **** பதிவர் வந்தியத்தேவன் அண்ணா//
இந்த **** என்ன அர்த்தம்?
//மது அண்ணாவிற்குத்தான் நன்றிகள் சொல்ல வேண்டும்.//
எம் சந்திப்புக்கு மகுடம் கொடுத்த பெருமை மதுவையே சாரும்.
அழகான தொகுப்பு , இணைப்புகளில் வானம்பாடிகள் இடத்தில் கீத்தின் பெயர் இடம்பெறவேண்டும்.
வாங்கோ வந்தியண்ணா.. நன்றிகள்.. 🙂
//எமது மூத்த பிரபல **** பதிவர் வந்தியத்தேவன் அண்ணா
இந்த **** என்ன அர்த்தம்?
//
அர்த்தம் லோசன் அண்ணாவின் ட்விட்டில் உள்ளது..
அருமையான பதிவு புகைப்படங்களுடன். ஓரு சிலரைத் தவிர மற்ற முகங்கள் எனக்கு அறிமுகம் அல்லாதவை. பெயர்களையும் இணைத்திருந்தால் இன்னும் நல்லது.
அன்று கொழும்பில் நிற்காததால் கலந்து கொள்ளாத ஏக்கத்தை உங்கள் பதிவு ஓரளவு தீர்க்கிறது. நன்றி
மறக்கமுடியாத சந்திப்பு… இத்தொடர்பு தொடரும் என நம்புகிறேன்.
விரிவான தகவல்களிற்கும் நிழற்படங்களின் தொகுப்பிற்கும் நன்றி.
மேலும் தொடர வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். 🙂
மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்தப் பதிவுகளைப் படிப்பது. எல்லோருமே நிறைவுடன் எழுதியிருக்கிறார்கள். நன்று.
அருமையான பகிர்வுக்கு நன்றி சுபானு!
நிகழ்வு எனக்கும் காணக்கிடைத்தது!
ஏற்பாடு செய்த உறவுகளுக்கு பாராட்டுகள்!
வரலாற்றின் பக்கங்களில் நானும் இடம்பெறப்போவது (பங்குபற்றியதன் மூலம்) மகிழ்ச்சியைத் தருகிறது.
நிறைய பேரை ஞாபகம் வைத்திருக்க முடியவில்லை. ஆகவே அடுத்த முறை பதிவுலக நண்பர்களின் பெயர்களை மனனம் செய்வது தான் என் வேலை.
என்ன சுபானு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஆசனத்தைப் பிடிக்க அவசரப்பட்டு (படங்களைப் பார்த்தாலே விளங்குது) நயனை நமீயாக மாற்றி என்னை இரண்டு பேரிடமும் மாடி விட்டீங்களே..
இரண்டுபேரும் இப்போ என்னோட கோவமா இருக்கிறாங்க.. 😉
உங்கள் வர்ணனைகளை ரசித்தேன்..
நேர்த்தியான நடை..
அதுசரி, படங்களெல்லாம் ஒர்ரே கோணத்தில் இருக்கே.. 😉
உங்கள் திருமனசெவையால் உங்களுக்கே பலன் கிடைக்குமா?
ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்
@Dr.எம்.கே.முருகானந்தன்
நன்றி.. விரைவில் அதுபற்றிய பதிவொன்னை இடுகின்றேன்.. சேரன்கிறிஸ் உம் அதுபற்றி பதிவிடச் சொன்னார். என்னால் முடிந்த எனக்குத் தெரிந்தவற்றைத் நிட்சயமாகத் தருகின்றேன்..
@பால்குடி said…
உண்மைதான்!!!! என்றும் மறக்கமுடியாத சந்திப்பு…
நன்றி வலசு – வேலணை
நன்றி ஊர்சுற்றி
நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி
@கனககோபி 🙂
@LOSHAN
வாங்கோ அண்ணா..
உங்களிடம் நிறைய கதைக்க வேண்டியிருக்கு.. இது சரியான இடாகத் தெரியவில்லை.. நாங்கள் வேறு ஏதாவது திண்ணையில் அமர்ந்து பேசுவோம்..
மற்றது.. அழகான படங்களாகத் தேர்ந்தேடுத்துத் தான் இந்தப் பதிவில் போட்டேன்.. மற்றும்படி எந்தவிதமான நுண் அரசியலும் இங்கு இல்லை..
அடுத்தாக ”பதிவு செய்யப்பட்ட ஆசனம்”. ஆகா…. ஆகா…. ஆகா….
யாரப்பா அந்த ஆசனத்தைப் பதிவுசெய்தது…?
( திருட்டு மாம்பழத்திற்கு ருசி அதிகம் என்பது உங்களுக்குத் தெரியாது போல.. பார்ப்போம் – சும்மா தான் )
//நயனை நமீயாக மாற்றி என்னை இரண்டு பேரிடமும் மாடி விட்டீங்களே..
நீங்கள் ரொம்ப அதிஸ்டக்காரர் தான்… இளம் பெண்களால் எப்போதும் தொல்லைதான் என்ன அண்ணா… 😛