நாளை ஞாயிற்றுக் கிழமை(23-08-2009) இலங்கை வலைப்பதிவர்களின் முதலாவது சந்திப்பு கொழும்பில் நடைபெற உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. இதற்கு இது வரை 80 இற்கும் மேற்பட்டவர்கள் வரவிரும்புவதாக தமது விருப்பங்களையும் விபரங்களையும் ஏற்பாட்டுக்குழுவிற்கு வழங்கியுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து பலரம் தமது மனதார்ந்த வாழ்த்துக்களை இலங்கையில் உள்ள எம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்கள். வெளிநாடுகளில் உள்ள பல பதிவர்கள் இந்த பதிவர் சந்திப்புப் பற்றி தமது விருப்பத்தையும் ஏற்பாட்டுக் குழுவிற்குத் தெரிவித்திருக்கின்றார்கள். இங்கு நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளை நேரடியாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் பார்த்து இரசிப்பதற்கும் தமது கருத்துக்களை எம்மோடு உடனுக்குடன் பதிர்ந்து கொள்வதற்குமாக Real time Streaming செய்யவுள்ளோம். நீங்கள் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து இரசிக்க விரும்பினால் நாளை காலை 9:00 – இலங்கை நேரத்தில் இருந்து நேரடியாக் காண முடியும்.
இந்த Real time Streeming இற்கு உதவி – மதுவதனன் மௌ
மேலதிக விபரங்களுக்கு http://www.livestream.com/srilankatamilbloggers
Categories: இலங்கை, குறிப்புக்கள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
சுட்டி மாற்றப்பட்டுள்ளது.
நிகழ்வினைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கருத்துக்களையும் சாட்டிங்க் மூலமாகச் சொல்ல கீழே உள்ள சுட்டிக்குச் செல்லுங்கள்
பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் சுட்டி
http://www.livestream.com/srilankatamilbloggers
Alarm எல்லாம் வச்சு காத்துக் கொண்டு இருக்கிறேன்… நம்பிக்கையைக் காப்பாற்றுங்க நண்பர்காள்