நாளைய உலகின் வீடியோ விளையாட்டுக்களில் மாபெரும் புரட்சி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. மூன்றாம் தலைமுறைக்கான புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தி வீடியோ விளையாட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளது. அந்த தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தும் செயற்திட்டத்திற்குத்தான் Project Natal என்று பெயர்.
நாம் எந்த ஒரு சென்சார்கலையும் உடலில் அணியாமல் எமது உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன்படுத்தி நாம் இந்த வீடியோ விளையாட்டுக்களை விளையாட முடியும். நம் உடலின் பல பாகங்களின் அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா மூலம் கண்டறிந்து அதன் மூலம் கம்ப்யூட்டரின் உள் முப்பரிமான உருவம் செயற்கையாக வடிவமைக்கிறது. பின்னர் எமது பாகங்களின் அசைவுகளினை அப்படியே capture செய்வதன் மூலம் நமது அசைவுகள் அனைத்தையும் அந்த உருவத்திற்கு கொடுக்கப்பட அவை உயிர் பெற்று எம்மை அப்படியே பிரதிசெய்கின்றது. அதன் மூலம் நாம் எம்மை அந்த வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபடுத்தி விளையாடுவது போன்று உணரமுடியும். கீழே உள்ள விபரண வீடியோவைப் பாருங்கள். அசந்து போவீர்கள். அருமையாக உள்ளது.
Categories: அறிவியல், படித்தவை ரசித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
இதென்ன புது விளையாட்டு கை காலெல்லாம் அசைக்கோணும் போலகிடக்கு. இதெல்லாம் ஏலாது ரொம்ப கஷ்டம் சும்மா இருந்து கஷ்டப்படாம விளையாட ஏதாவது வழிய சொல்லுங்கோ!!!