அதே கணிதபாட பிரத்தியேக வகுப்பறையின்
கரும்பலகையில் சில சமன்பாடுகள்
திரிகோண கணிதத்தில் சமனிலிகளுக்கான அந்த
சமன்பாடுகள் கரும்பலகையென்னும் பிரபஞ்ச வெளியில்
முடிவற்று விரிந்து கொண்டேயிருந்தன..
சோவென அடித்துக் கொட்டும் மழையில்
நனைந்த விட்டில் பூச்சிகள் பல
குளிர்காய அந்த அறையில் மின் விளக்கை வட்டமடித்தபடி..
சுமந்து வந்த ஈரம் நீங்க விளக்கை
முட்டி முட்டி மோதி தங்களை உலர்த்திக்கொண்டிருந்தன
அந்த விட்டில்கள்…
வகுப்பறையின் முதல் வாங்கின் ஓரத்தில் என்னவள்
கடைசி வரிசை வாங்கின் ஓரத்தில் நான்
சிக்கியிருந்தோம் அந்தச் சமனிலிச் சமன்பாட்டுக்குள்..
சிக்கல்கள் மேலும் சிக்கலாகியதே தவிர
முடிவேதும் வராது தொடர்ந்தது..
அந்தச் சமனிலிச் சமன்பாடுகளின் தீர்வுகளாய்
கரும்பலகையில் அழிக்கப்பட்ட
வெண்துகள்கள் மின் ஒளியில் பளிச்சிட்டபடி
பிரபஞ்சத்தின் விண்மீன்கள் எனக் கடந்து சென்றன
எம்மையெல்லாம் இறுமாப்போடு பார்த்தபடி
கணிதம் எழுதியதால் வந்ததோ
அந்தத் தற்பெருமை அவற்றிடம், இருந்தாலும் தப்பில்லை!
நீண்ட கணித வெளியில் பிரயாணித்த
மகிழ்ச்சி தெளிவு எம்மிடம்
அந்த சமன்பாடுகளின் விடையினை நாம்
பெற்றபோது போது பெற்றுக்கொண்டோம் இறுமாப்பொன்றை
கணிதத்தோடு வாழ்ந்ததால் வந்ததோ
அந்தப் பெருமை எம்மிடம், இருக்கத்தானே வேண்டும்!
மழைக்குடையின்றி நான் வகுப்பறையின்
ஓரத்தில் ஒதுங்கி நிற்க கூடவந்த நண்பர்கள் எல்லாம் தமது
சைக்கிளைத் தேடிச் செல்லத் தனியானேன்-நண்பிகளின் மத்தியில்
ஆண்கள் சென்ற பின்னர் தான் பெண்கள்
புறப்படுவது என்பது எழுதப்பாடாத
சட்டம் போன்று நிலவியது அங்கே
இறுதியில் நண்பிகள் ஒவ்வொருவராக
மழைக்குடையோடு விலகிச் சென்றார்கள்
வகுப்பறையை விட்டு
கடைசியாக என்னவளும் வெளியேறினாள்
கடைக் கண்ணால் கொஞ்சம் பொறு என
ஜாடை காட்டி விட்டு.
கடைக் கண்ணால் ஜாடை பேசுதல் – என்ற புதுக் கவிதையை
நான் கசடறக் கற்றுத் திழைத்ததே என் இதயத் திருடியிடம் தானே
மெல்லச் சிரிப்பாள், சட்டென்று கோபிப்பாள்
உரிமையோடு மிரட்டுவாள், நயமாகப் பணிவாள்
பாசத்தோடு அணைப்பாள், மிரளவைக்க நாணுவாள்
அந்த நளினம் பேசும் கண்களில் நான் படித்த புதுக்கவிதைகள் இவை.
அன்று தோழிகளிடம் என்ன கூறிவிட்டு
வந்தாளோ தெரியாது,
அந்த முன் இரவில் ஒற்றை மழைக்குடையில்
இரு விட்டில் பூச்சிகள் என நாம்
காதலெனும் தெய்வீக விளக்கை
வட்டமடிக்கப் புறப்பட்டோம்
அன்றும் எங்கள் கண்கள் மட்டும் தான்
வெறுமனே புதுக்கவிதைகள் பேசின
இரு சோடிக் கண்கள் காதல் கதைகளைக் கிசுகிசுத்தன
கவழ்ந்து வந்த தூறல் காற்றும்
மெல்லத் திரும்பிப் பார்த்துச் சென்றது
நாம் பேசும் புதுக்கவிதை புரியாமல்
ஒற்றைக் குடையில் நாம் இருவர்
தொட்டுவிடுவோமா என்ற அச்சத்தில் நான்
தொட்டுவிடக்கூடாது என்ற நாணத்தில் அவள் – ஆனால்
எம்மைக் கேளாமல் மெல்ல
எம் சைக்கிளின் முன் சக்கரங்கள்
தொட்டுத் தொட்டுக் குதூகலித்தன
இருவருமே நனைந்தோம்
மெல்ல மெல்ல உருட்டிய சைக்கிள்கள்
வேகமாகச் செல்லப் பின்நின்றன எமக்காக
எமது சைக்கிளின் முன்சக்கரங்கள் தொட்டுக்கொள்ளும்
போதெல்லாம் மேகங்களுக்குச் சந்தோசம்
இடியிடித்து ஆர்ப்பரித்துக் கொண்டன அன்று
நாமறியாமல் எமது விரல்கள் மெல்ல மெல்ல
தட்டிக் கொள்ளும் போதெல்லாம்
பல கோடி மின்னல்கள் வெட்டிச் சென்றன வானவீதியில்
இலவம் பஞ்சா அணங்கவள் விரல்கள்
மென்மையின் தீண்டல் என்பது
உணர்வுகளின் கருவறையில் சூல் கொள்ளும் பிரளயமன்றோ
பிரளயத்தின் முடிவில் இனிதாய்
புதுயுகம் பிறக்கும் என்கின்றது வேதம்
உண்மைதான் அன்று உணர்ந்தேன்
நம் இருவருக்குள்ளும் நடந்த
உணர்ச்சிப் பிரளயத்தில் புதிதாய்ப் பிறந்தது
காதல் சொல்லும் வேதத்தில் புது அத்தியாயம்
கண்களைத் திருடி என் இதயவீட்டில்
நித்திய சிம்மாசனமிட்ட அந்த வெண்ணிலவுப் பெண்ணரசி
கன்னம் சிவக்க கண்கள் பனிக்க
நெஞ்செல்லாம் வண்ணப் பூக்கள் பூக்க
மின்னல் வழிகாட்ட நடந்தாள் என்னோடு – அவள்
கரத்தினை என் உள்ளங்கைளினால் அணைத்துக்கொண்டு
காதலில் நமக்குள் பிறந்தது அன்று
இருவர் மீதும் இருவர்
கொண்ட நம்பிக்கை என்னும் புது அத்தியாயம்
உள்ளங்கை அணைப்பிலேயே
எனக்குள் அந்தப் புது அத்தியத்தின் தொடக்கத்தினை
உறுத்திச் சொன்னாள் என் இதயராணி
உனக்காக நான் இருப்பேன் எப்பொழுதும்
என உள்ளங்கைதனில் அவள் கிறுக்கிய
காதல் உறுதி மொழியினை
மழைக் குடையிருந்தும் மழையில் குளித்த என்
இதயராணியின் நிலவு முகத்தில்
மழையிருளிலும் தெளிவாக படித்தேன்
புதிதாய்ப் பூத்த பூவொன்று
அன்று என் கைகளில் அடங்கிக் காதலுரைக்க
அந்த மழையினை எமக்காக அன்று அங்கு
அனுப்பி வைத்தானே அந்த இறைவன்
அவனுக்குப் பலகோடி நன்றிகள்
என்நெஞ்சைத் தொட்டு கட்டிக்கொண்ட
அனிச்ச அழகி நித்திய மஞ்சரி
அவள் தோழி மின்னல் வழிசொல்ல
இடிகள் தாளத்தோடு அடியெடுத்துத்தர
கரம்பிடித்து நடந்தாள்
காலங்கள் ஏழும் என்துணை அவள் என்று!!!
Categories: கவிதை, குறும்புகள், படித்தவை ரசித்தவை, பாடசாலை நாட்கள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
சுபானு ஒரு பத்து வரிகளுக்குள் முடித்திருந்தால் வாசித்திருப்போம் இந்தக் கவிதையை நீங்கள் யாரையோ நினைத்து ஒரு காவியம் அல்லவா படைத்திருக்கிறீர்கள்.
மிக்க நன்றி யோ வாய்ஸ் ..
@வந்தியத்தேவன்
இந்தக் கவிதைக்கு கவிதைப் பொண்ணு என்று யாரும் கிடையாது வந்தியண்ணா… சும்மா கிறுக்கியது..
முதலில் இதனைக் கவிதை என்றே ஏற்றுக்கொள்ள முடியாது.. அப்புறம் நீங்க காவியம் என்று ரொம்ப ஓவரா சொல்லுறீங்களே… முடியல..
கவிதைப் பெண் இல்லாமல் கிறுக்கினா இப்படிதான் வரும்..
மிகவும் நீளமாக இருப்பதால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்… 🙂
@நிமல்-NiMaL
அடப்பாவி.. வாசிக்காமலே பின்னூட்டமா… முடியல.. வாசிச்சிட்டுப் போடடா..
வணக்கம் சுபானு
ரோம்ப அழகாக கிறுக்கி இருக்கீங்க.
ம்ம்ம்ம்….. எனக்கு என் பள்ளிக்காலம் நிணைவுக்கு வந்துவிட்டது.
இந்த கவிதையை போல் கண்பேசி கைபிடித்ததெல்லாம் இல்லை
எனினும் இரத்தம் சிந்திய ஞாபகங்கள் இருக்கின்றது — காதலில்லாமல் நட்போடு இருந்த காலங்கள் அது.
இராஜராஜன்
@இராஜராஜன்
வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிகள்..
//ரோம்ப அழகாக கிறுக்கி இருக்கீங்க.
அப்பாடா.. நீங்களாவது கிறுக்கியது என்று ஒத்துக் கொண்டீர்களே.. மிக்க மகிழ்ச்சி…
//சுபானு said…
@வந்தியத்தேவன்
இந்தக் கவிதைக்கு கவிதைப் பொண்ணு என்று யாரும் கிடையாது வந்தியண்ணா… சும்மா கிறுக்கியது..
முதலில் இதனைக் கவிதை என்றே ஏற்றுக்கொள்ள முடியாது.. அப்புறம் நீங்க காவியம் என்று ரொம்ப ஓவரா சொல்லுறீங்களே… முடியல..
கவிதைப் பெண் இல்லாமல் கிறுக்கினா இப்படிதான் வரும்..//
இது கிறுக்கல் மாதிரி தெரியல்ல. யாரோ ஒருவரை வைத்து எழுதியது போல்தான் இருக்கிறது. யாரையாவது மனதில் வைத்து எழுதுவோர் சும்மா கிறுக்கல் என்றுதான் சொல்வதை பார்த்து இருக்கிறேன் நீங்க அப்படி இல்லையே.
//
கவிதைப் பெண் இல்லாமல் கிறுக்கினா இப்படிதான் வரும்..
//
அப்பிடீங்களா?
சந்ரு.. சொன்னா நம்ப வேணும் புரியுதா..? சும்மா சும்மா கேள்விகேட்கக்கூடாது.. கேட்கிறது ரொம்ப ஈசி.. பதில் சொல்லிப் பாத்தாத்தான் தெரியும் கஸ்டம்..
இதெல்லாம் டூப்பு…
@வலசு – வேலணை said…
//
கவிதைப் பெண் இல்லாமல் கிறுக்கினா இப்படிதான் வரும்..
//
// அப்பிடீங்களா?
அப்படித்தான்.. 😉
வாழ்த்துக்கள் ,
கவிதையும் அழகு, அதில் போட்டிருக்கும் படங்களும் கொள்ளை அழகு. எங்கு எடுத்தீர்கள் அந்த படங்களை ?
காதல் கவிதை வரிகளில் சமனிலிகளும் முடிவிலிகளாகி விட்டனவோ? நினைச்சு நினைச்சு ரொம்பவும் உருகுவது போலத் தெரிகிறது.
@Sutha said…
// கவிதையும் அழகு, அதில் போட்டிருக்கும் படங்களும் கொள்ளை அழகு. எங்கு எடுத்தீர்கள் அந்த படங்களை ?
வருகைக்கும் கருந்துக்கும் நன்றிகள் சுதா.
படங்கள் எல்லாம் இணையத்தில் தான் பெற்றுக்கொண்டேன்..
@பால்குடி
//காதல் கவிதை வரிகளில் சமனிலிகளும் முடிவிலிகளாகி விட்டனவோ? நினைச்சு நினைச்சு ரொம்பவும் உருகுவது போலத் தெரிகிறது.
அப்படியில்லை.. காதல் என்னும் கணிதத்தில் எம் கற்பனைக்கும் நிஜத்திற்குமான சமனிலித் தொடர்பு எழுதினால் அவை முடிவற்ற முடிவிலியில்த் தானே இணைக்கப்படுகின்றன.. என்ன குழப்புதா.. காதலித்துப் பாருங்கள்.. புரியும்.. நீங்கள் பால்குடி..
புரியாது..
சொல்ல வந்த உங்கடை அனுபவம் பழங்கதைகளை நினைவு படுத்துவதென்னவோ உண்மை…
🙂
\\
நிமல்-NiMaL said…
மிகவும் நீளமாக இருப்பதால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்… 🙂
\\
இது பின்னூட்டம். 🙂
@தமிழன்-கறுப்பி…
//சொல்ல வந்த உங்கடை அனுபவம் பழங்கதைகளை நினைவு படுத்துவதென்னவோ உண்மை…
எனது அனுபவம் இல்லை.. முற்றுமுழுதாக மாசறு கற்பனை..
\\
நிமல்-NiMaL said…
மிகவும் நீளமாக இருப்பதால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்… 🙂
\\
//இது பின்னூட்டம். 🙂
🙂 🙂 🙂