இதுவரை காலமும் பலமுறை முயன்றும் இயலாது போன – சில சமயங்களில் கைக் கெட்டியும் வாய்க்கெட்டாது போன பதிவர் சந்திப்பு இலங்கையில் நடைபெற உள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.
நோக்கங்கள் :
இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.
புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்
இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.
பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.
பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்.
இன்னும் பல…
வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com
முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.
இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.
பிற்குறிப்பு: மின்னஞ்சலினூடாக பலரை தொடர்பு கொண்ட போதிலும் சிலரின் பதில்களுக்காக இன்னமும் காத்திருக்கின்றோம்.
இது தொடர்பான தகவல்கள் எட்டாதவர்கள் தயக்கமின்றி தொடர்பு கொள்ளுமாறும் தங்களின் வருகையினை உறுதிப்படுத்துமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபனைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.
அனைவரும் தனிப்பட்ட அழைப்பாக கருதி பங்கெடுப்பீர்களென நம்புகின்றோம்.
உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
Categories: இலங்கை, குறிப்புக்கள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
இலங்கையில் முதன்முதலாக இச்சந்திப்பு நடைபெற உள்ளது மகிழ்வளிக்கின்றது. அதிகரிக்கும் வரவேற்பும் ஆதரவும் இந்நிகழ்வு சிறப்பாக அமையும் என்பதை கட்டியம் கூறுகின்றன.
உண்மைதான்.. சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்…
அதுசரி தமிழ்ச்சங்கத்தில் வகுப்புக்கள் நடைபெறுமில்லையா..?
//சுபானு said…
அதுசரி தமிழ்ச்சங்கத்தில் வகுப்புக்கள் நடைபெறுமில்லையா..?//
நினைச்சேன் இந்த கேள்வியை யாரும் இதுவரை ஏன் கேட்கவில்லை என்று. நடக்கும் ஆனால் ஐந்தாம் வகுப்புவரைதானாம்.
அப்பசரி… அவங்க முழிக்கப்போறாங்க.. என்ன நடக்குதென்று தெரியாம.. 🙂
இலங்கைப் பதிவர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நேரம். வாழ்த்துக்கள்… ஒன்றினைவோம்.
நிட்சயமாக.. !
வலைப்பதிவில், வலைத்தளங்களில் தொடுப்புக்கொடுக்க சின்னதா banner, widget ஏதாவது தாங்கப்பா..
//வலைப்பதிவில், வலைத்தளங்களில் தொடுப்புக்கொடுக்க சின்னதா banner, widget ஏதாவது தாங்கப்பா..
என்ன சொல்லுறீங்க..? எனக்கு விளங்கவேயில்லை.. 🙁
நானும் அந்த தருணத்திற்காய் காத்திருக்கிறேன்.
மேமன்கவி பக்கம்.. நன்றி..
வாருங்கள் இணைவோம்..
நிட்சயமாக…
நல்ல முயற்சி… வாழ்த்துக்கள்..
யாழ் வானம்பாடி நீங்களும் பங்குபற்றலாமே… யாழில் நல்லுார்த் தேர்த் திருவிழா எப்படிப் போகின்றது….?
23 ஆம் திகதிதான் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை நடைபெற உள்ளது, அதனால் சில வேளைகளில் வகுப்புகள் நடைபெறாமல் போகலாம்.
🙂
வலைப்பதிவர்கள் சந்திப்புக்கு வழ்த்துக்கள்.
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்று வெற்றிபெற வாழ்த்துக்கள். 🙂
நன்றி ஊர்சுற்றி, வேந்தன் மற்றும் Paheerathan!
இதற்காக Banner ஒன்றை தயாரித்துள்ளேன். அவற்றையும் இணைத்துக்கொள்ளுங்கள்.கீழுள்ள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
http://www.honeytamilonline.co.cc/2009/08/blog-post_12.html
எங்களுக்கும் ஒரு டிக்கெட் எடுத்து அனுப்பினா நாங்களும் வ்ருவோம்ல.
வாழ்துக்கள்.
சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்….
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – 2009 – சில எதிர்பார்ப்புக்கள்……
நன்றிகள் மாயா!