வீண் கோபம் என்னோடு ஏன் அன்பே
உனக்காக நான் வரையும் மடலிது
என் ஈர விழிகளுக்குள் நீ நுழைந்து
கலகம் செய்த நாட்கள் எத்தனை
என் சுயத்தோடு கண்ணாம்மூச்சி விளையாடி
இதயவாசலில் நீ பின்னலிட்ட தோறணங்கள் எத்தனை
என் மொனத் தவம் கலைக்க
கடைவிழி வழியே நீ நாண் ஏற்றிய பாணங்கள் எத்தனை
இத்தனையும் என் இதயத்கூட்டின் அத்தனை
அறைகளிலும் நித்திய சிம்மாசனம் இட்டிடத்தானே
என்றோ தந்து விட்டேனே
இதயராணி என்னும் உரிமையை
என் மானசீகக் காதலியாகி
மனத்தின் அந்தரங்க அறைகளில்
எனக்காக நீ அரங்கேற்றிய பரதங்கள் எத்தனை
உந்தன் கொலுசுகள் மீட்டும்
ஜல் ஜல் தாளங்களை
என் ஆழ்ந்த மன அந்தரங்கத்தில்
கேட்கும் நாதங்களாக்கியவளே
புரியாதவள் போல நடிக்கின்றாய்
திமிர் பிடித்தவன் நான் என்கின்றாய்
என் உள்ளத்து அன்பை வெறும் நடிபென்கின்றாய்
போதும் நிறுத்திக் கொள் உன் கோபங்களை
தொடுவான எல்லையில் காத்திருக்கின்றேன்
நீ எனக்குள் தொலைத்த
உன் கொலுசுகளின் துணையோடு
நம் காதலின் புதுப்பாடம் – காத்திருப்பு
அதிகாலை வரப்போகும் ஆதவனுக்காக
நீண்ட இரவுகளில் கண்ணயராது காத்திருந்து
மொட்டு விரியுமாம் கமலம்
நாம் மீண்டும் சந்திக்கும் நாட்களுக்காக
காத்திரு உன் கோபங்களை விடுத்து அன்று
காதலெனும் கமலம் நமக்குள் மொட்டவிழட்டும்
பிற்குறிப்பு : இலங்கை பதிவர் சந்திப்பு 23-08-09 அன்று நடைபெற உள்ளதால் மேலே “புதியது” என்றும் அறிவித்தல் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.. வாசகர்களுக்கு அதுபற்றிய ஓர் பரப்புரை செய்வதற்காக இந்தப் பதிவினை இருகின்றேன். அதாவது வாசகர்களை எனது வலைப்பூவின் பக்கம் சற்றுத் திருப்பிப் பார்க்க வைப்பதற்காக மாத்திரம் தான் இந்தப்பதிவு. மற்றும் படி காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை. நன்றி.
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
பின்குறிப்பை இட்டு புஸ்ஸுன்னு ஆக்கிட்டீங்களே சுபானு.
ஆனா உங்களோட ரசனை ரொம்ப நல்லாயிருக்கு. மடலும் அருமையாகத்தான் இருக்கிறது. காதல் இல்லாமலே, இப்படியென்றால் – நீங்கள் காதலில் விழுந்தால் எப்படியெல்லாம் எழுதுவீர்கள்!!!
முதலில் நன்றி..
தேவையிலாம கதையெல்லாம் கட்டிவிடுறாங்க.. நாம் ஏதோ கிறுக்கிட்டு இருந்தா காதலும் கத்தரிக்தாயென்றெல்லாம் சிலபேர் பதிவுகள் எழுதுறாங்க.. என்ன செய்யுறது என்று புரியல..
அதாலதான் அந்த பின்குறிப்பு..
மற்றும்படி.. காதலில் விழுந்தால்… பார்ப்தோம்..
மற்றும்படி.. காதலில் விழுந்தால்… பார்ப்போம்..
// மற்றும்படி.. காதலில் விழுந்தால்… பார்ப்போம்..
அடோய்… நீ எங்கட பெடியள் பெரிசா Blog பக்கம் வாறேல என்டதுக்காக இஷ்டத்துக்கு பொய் சொல்லுறாய் என்ன? உனக்கு காதல் வரல்??? நீ இனிதான் பாக்கப்போறாய்!!!
சூப்பர் மச்சி….
என்ன சொல்லவாறீங்க கண்ணன்..?
உங்களுக்கு இனிதான் காதல் வரபோகுது மாதிரி நீங்க கதைக்கிறது ஒரே நகைச்சுவையாக உள்ளது போங்கள்…
நான் உங்கள் குறிப்பை ஏற்றுக்கொள்கிறேன். பெண்ணை காதலிப்பவர் தான் கவிதை எழுதவேண்டுமா? ரசனை உள்ளவர்கள் யாரும் எழுதலாம்:)
@shan
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..
உண்மைதான்.. நீங்கள் ஒருவராவது இருக்கின்றீர்களே உண்மையைப் புரிந்து கொள்வதற்கு.. நன்றி!
நாங்க நம்பிட்டம் என்று நீங்க நம்பினா….
கவிதைக்கு எந்தக் கவிதைப்பொண்ணும் கிடையாது..
😉
கவிதை அருமை. ஆனால் அனுபவம் இல்லாமல் சும்மா எழுதினது என்று சொல்லுறது தான் கொஞ்சம் இடிக்குது.
🙂
🙂
@Nangai
//கவிதை அருமை. ஆனால் அனுபவம் இல்லாமல் சும்மா எழுதினது என்று சொல்லுறது தான் கொஞ்சம் இடிக்குது.
🙂
🙂
சத்தியாமா அப்படி ஒருத்தரும் இல்லை நங்கை.. சொன்னா நம்பணும் புரியுதா..