நீண்ட காலமாக வலைப்பூக்களின் பக்கம் வருவது அரிதாகவே இருக்கின்றது. அவ்வாறு வந்தாலும் சும்மா ஏதாவது கிறுக்கிவிட்டு சென்று விடுவதுதான் வழமை. வேலைத்தளத்தில் தலைக்கு மேல் உள்ள வேலைப்பழுவே காரணம். வேலை நேரத்தில் பதிவுலகத்தில் நீண்ட நேரத்தை செலவிடமுடியாமையே அதற்கான காரணம்.
அண்மையில் சக பதிவாளரும் என் பல்கலைக்கழக கனிஸ்ட நண்பருமான சுபாங்கனிடம் இருந்து கிடைத்த பட்டாம்பூச்சி விருதி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதுவும் கன்னி அரைச் சதத்தைத் தொட்டுக்கொள்ளும் போது விருது. இரடிட்டிப்பு மகிழ்ச்சி. அந்த விருதினைப் பற்றிப் பதிவதற்கு நீண்ட காலமாக முயற்சித்து அதற்காக சிறிது நேரம் ஒதுக்குவதற்கு முயற்சித்த முயற்சிகள் இன்றுதான் அது கை கூடியுள்ளது. என்னடா ஓவர் பந்தா காட்டுகின்றான் என நினைக்காதீர்கள். உண்மையிலேயே ஒன்று முடிய இன்னொன்று என என்னை விடாது துரத்தும் deadline work. என்ன செய்ய கடமைதானே முக்கியம். சோறு போடுவது அதுதானே.
சரி விடையத்திற்கு வருவோம். முதலில் சுபாங்கனுக்கு மனமார்ந்த நன்றிகள். எனக்கு இந்த விருது பொருத்தமா இல்லையா என்ற ஆராய்சியை உங்களிடமே விட்டுவிட்டு எனக்குத் தரப்பட்ட இந்த விருதினை பதிவுலக தர்மப்படி என்னை மிகவும் கவர்ந்து பட்டாம்பூச்சி சென்று அமரக் கூடிய சில அழகான வலைப்பூக்களுக்கு கொடுக்க விரும்புகின்றேன்.
நான் முதல்முதலாக இரசித்த வலைப்பூ – பாவையின் SKETCH. என்னை மிகவும் கவர்ந்த பதிவாளர் இந்தப்பாவை. தற்போது சாயினி/Chayini என்னும் பெயரில் எழுதுகின்றார். ஆனால் ஆரம்ப காலங்களில் பாவை என்னும் புனைபெயரில் SKETCH இல் அழகாக எழுதி வந்தவர். எப்போது மலரும் எனத்தெரியாது இவரின் வலைப்பூக்கள். ஆனால் மலரும்போது சாதாரணமாக மலர்வதில்லை. இணையம் எங்கும் மணம்வீசும் பூ. பட்டாம்பூச்சி சென்று அமர நல்ல தகுதியான மலர்தான் இந்த SKETCH.
இரண்டாவதாக வலசு வேலணையின் – சும்மா. ஆழமாக கருத்துக்கள். சும்மாதான் கிறுக்கியது போல் இருக்கும் ஆனால் ஒவ்வொன்றும் கனதியான கோடுகளை எம்மில் பதிந்துவிட்டுச் செல்லும். இன்னும் ஓர் அழகான தகுதியான மலர். பட்டாம்பூச்சி சென்று ஆனந்தமாகத் தேனை நுகரட்டும்.
மூன்றாவதாக ஊர்சுற்றியன் ஊர்சுற்றி. கிரிக்கெட் கிறுக்கு பிடிக்காமல் இருப்பவன், குழந்தைகளின் சிரிப்புக்கு மயங்க மறுக்காதவன், எதையாவது சாதித்துவிடலாம் என்கிற தேடலில் பயணங்களைத் தேடி அலைபவன் இந்த ஊர் சுற்றி. வித்தியாசமாக எழுதுவதில் என்னை மிகவும் கவர்ந்தவர். இன்னும் ஓர் அழகான தகுதியான மலர் இந்த ஊர்சுற்றி. சுற்றித்திரியும் இந்தப் பூற்கும் சென்று பட்டாம்பூச்சி தேனை நுகரட்டும்.
சரி இந்தச் சங்கிலித் தொரரை அறுபடாமல் மெல்லத் தொடுத்து விடுங்களேன்.. வாழ்த்துக்களுடன் என்றும் இந்த ஊஞ்சலிலாடும் சுபானு… !
Categories: எனது பார்வையில், சுயதம்பட்டம், பாதித்தவை, வாழ்த்துக்கள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
50 வது பதிவுக்கும் விருது பெற்றமைக்கும்..
வாழ்த்துக்கள்……….
50வது பதிவிற்கும் விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்
சீக்கிரம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்.
பெற்ற விருதிற்கும் வாழ்த்துக்கள்.
நன்றிகள்…
விருதுகளுக்கு வாழ்த்துக்கள்!!
நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள் சுபானு.
50-க்கு வாழ்த்துக்கள்.
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
''எனக்கு இந்த மாதிரி ஒரு விருதைத் தரும் முதல் நபர்'' என்ற நிலையில் யோசிக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியே. ஆனால் தனிப்பட்ட சில நபர்களால் உருவாக்கப்பட்டு சங்கிலித்தொடராக பரப்பப்படும் இத்தகைய விருதுகள் மீது எனக்கு நம்பிக்கையில்லை அல்லது நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
தங்களின் அழைப்பை நிராகரிப்பதற்காக மன்னிக்கவும்.
50வது பதிவிற்கும் விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்….
100 பதிவு வெகு விரைவில் ஊஞ்சலாட வாழ்த்துக்கள்
🙂
நன்றி நங்கை.. 😉