தமிழ்மொழியின் சக்தி! எத்தகைய செய்தியையும் முதலில் முந்திக்கொண்டு முதலில் மக்களுக்குத் தருபவர்கள் நாங்கள். தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள். இவை இலங்கையில் தம்மை முக்கியமான முதன்மையான தொலைக்காட்சியாகக் காட்டிக் கொள்ளும் சக்தி தொலைக்காட்சியின் அலங்கார மகுடங்கள். இலங்கையில் தொலைக்காட்சி வரலாற்றில் சக்தி தொலைக்காட்சிக்கு முக்கியமான இடம் உண்டென்றால் அது யாராலும் மறுக்க முடியாது. பல புதிய விடையங்களை அறிமுகப்படுத்தி இலங்கைத் தொலைக்காட்சிகளில் முக்கியமான இடத்தைத் தனதாக்கிக் கொண்டது உண்மைதான். ஆனாலும்…
சக்தித் தொலைக்காட்சியில் தமது தயாரிப்பு என்றும் பெயரில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகள் இலங்கை தமிழ் மக்களின் இரசனை கீழ்தரமானதாகப் போய்விட்டதா என எண்ணத் தோன்றுகின்றது. பொதுவாக நான் தொலைக்காட்சி பார்பதென்பதே மிக அரிது. பகலில் அலுவலகத்திலும் இரவில் இணைய உலாவியிலும் என எனது நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. சனி ஞாயிறுகளில் நண்பர்களுடன் உலாத்துவதிலுமே நேரம் போகின்றது. இந்த, வாரவிடுமுறை தினத்தில் வீட்டில் இருக்கும் போது மெல்ல தொலைக்காட்சிப் பெட்டியை திருகிய போது வந்திட்டாங்கையா வந்திட்டாங்க என்ற நிகழ்ச்சி போய்க் கொண்டு இருந்தது. என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம் என சிறிது நேரம் அமர்ந்திருந்து பார்த்தால்.. ‘கடுப்பாகுதல்‘ என்ற வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பது தெளிவாக எனக்குப் புரிந்தது. என்னுடைய பொன்னான நேரத்தை வீணாக்கி விட்டேனே என என்மேலேயே கோபம் எனக்கு.
இலங்கையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பற்றாக்குறையாகப் போய்விட்டார்களா??? அல்லது மக்களின் இரசனைத் தரம் குறைந்துவிட்டதா? அந்த நிகழ்ச்சி பற்றி அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்தெறிவது என் நோக்கமல்ல. அந்த நிகழ்ச்சியினைப் பார்த்திருப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். நக்கலும் நையாண்டியும் தான் அந்த நிகழ்ச்சியில் மொத்தத்தில் தேறிய மிச்சம். என்ன இந்த நிகழ்ச்சி இப்படிப்போகின்றதே என என் வீட்டில் உள்ள மற்றவர்களிடம் கேட்டால், இதைவிட சோகமான கதைகள் பலவற்றைச் சொன்னார்கள்.
எவ்வளவு பயனுள்ள பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கலாம்தானே. வாரவிடுமுறை நாட்களில் தான் தொலைக்காட்சி பார்க்க சந்தர்பம் கிடைத்தாலும் இவ்வாறான தரம் கெட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி எம்மைக் கடுப்பேத்துகின்றதே இந்த தமிழ் மொழியின் சக்தி.
Categories: இலங்கை, எனது பார்வையில், பார்வை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
சுபானு,
உங்களுடைய ஆதங்கம் நியாயமானதே…
இலங்கை தமிழ் பேசும் நேயர்களை எதையாவது கொடுத்து பேக்காட்டலாம் என்று சிந்திப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது..
சக்தி தொலைக்காட்சியின் இன்னும் இரு நிகழ்ச்சிகள் சம்பந்தமாக தமிழ் பூங்கா வலைப்பதிவிலும் எழுதியுள்ளேன் வாசித்த்துப்பாருங்கள்
சரளமான ஆங்கில அறிவு அவசியம், சக்தி தொலைக்காட்சி நேயராக இருப்பதற்கு – இலங்கை
http://tamilgarden.blogspot.com/2009/08/blog-post_30.html
சக்தி தமிழ்மொழியின் சக்தியா? நல்ல நகைச்சுவை எஸ் எம் எஸ் கலாட்டா, சூப்பர் ஸ்டார், தமிழ்மொழியில் சிறப்பாக பேசுபவர்கள் சூப்பர் வொய்ஸ்சர்ஸ், என இவர்களின் தமிழ்மொழியை அழிக்கும் குணம் அதிகரித்துக்கொண்டே போகின்றது. எப்படி இந்தியாவில் சன் தமிழை அழிக்கிறதோ அதே போல் இலங்கையில் தமிழை அழிக்க சக்தி.
இந்த நிகழ்ச்சிகளைத் தொகுப்பவர்கள் பேசும் தமிழ் கான மயிலாடத் தமிழ்.
//இலங்கையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பற்றாக்குறையாகப் போய்விட்டார்களா??? //
இதுவும் ஒரு காரணம்… சக்தியில் இருக்கும் ஒரு 'சக்தி' பல திறமையானவர்கள் உள்நுழைய தடையாக இருப்பதாக நண்பரொருவர் சொன்னார்.
இதையொத்த நிலைமை நேத்திரா என்கிற நித்தரை வரவழைக்கும் தொலைக்காட்சியிலும் உண்டு…
ஆமாம் சுபானு, நீங்கள் சொல்வதை முற்றாக ஏற்கிறேன், அந்த நிகழ்ச்சி கடுப்பேற்றுவதை தவிர வேற ஒன்றும் செய்வதில்லை.
அதேபோலத்தான் பின்னேரத்தில் ஒளிபரப்பாகும் சக்தி chaட் (தமிழ் மொழியின் சக்தி ), அதைப்பார்க்கும்போது எனக்கு இலங்கையில் இருக்கிறோமா இந்தியாவில் இருக்கிறோமா என்ற நினைப்புதான் வரும்.
அந்த அறிவிப்பாளினி..தொலைபேசியவர்கள் விடைபெறும்போதும் , நிகழ்ச்சி முடியும் போதும் எதோ சொல்லுவார்…….அது என்னவென்று எனக்கு இன்றுவரைக்கும் விளங்கவில்லை. 😀
@மதுவர்மன்
நன்றி மதுவர்மன்..
//இலங்கை தமிழ் பேசும் நேயர்களை எதையாவது கொடுத்து பேக்காட்டலாம் என்று சிந்திப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது..
உண்மைதான்… உப்புச்சப்பில்லாத விடையங்களை வைத்துப் பேக்காட்டி விட்டு பலமுக்கியமான விடையங்களில் பின் நிற்கின்றார்களே… இலத்திரனியல் ஊடகம் என்னும் போர்வையில் மோசமான வியாபாரம் நடத்துகின்றார்கள்…
@வந்தியத்தேவன்
//சக்தி தமிழ்மொழியின் சக்தியா? நல்ல நகைச்சுவை எஸ் எம் எஸ் கலாட்டா, சூப்பர் ஸ்டார், தமிழ்மொழியில் சிறப்பாக பேசுபவர்கள் சூப்பர் வொய்ஸ்சர்ஸ், என இவர்களின் தமிழ்மொழியை அழிக்கும் குணம் அதிகரித்துக்கொண்டே போகின்றது. எப்படி இந்தியாவில் சன் தமிழை அழிக்கிறதோ அதே போல் இலங்கையில் தமிழை அழிக்க சக்தி.
இந்த நிகழ்ச்சிகளைத் தொகுப்பவர்கள் பேசும் தமிழ் கான மயிலாடத் தமிழ்.
அவர்கள் தாமாக அந்த ”தமிழ்மொழியின் சக்தி” என்னும் மகுடத்தை தமக்குச் சூடிக்கொண்டுள்ளார்கள்.. நான் என்ன செய்ய…
@நிமல்-NiMaL
//இலங்கையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பற்றாக்குறையாகப் போய்விட்டார்களா??? //
இதுவும் ஒரு காரணம்… சக்தியில் இருக்கும் ஒரு 'சக்தி' பல திறமையானவர்கள் உள்நுழைய தடையாக இருப்பதாக நண்பரொருவர் சொன்னார்.
இதையொத்த நிலைமை நேத்திரா என்கிற நித்தரை வரவழைக்கும் தொலைக்காட்சியிலும் உண்டு…
“பிரியா“ ரூபத்தில் இருக்கும் “சக்தி“யைத்தானே சொல்லின்றீர்கள்… நானும் கேள்விப்பட்டேன்..
@Paheerathan
//ஆமாம் சுபானு, நீங்கள் சொல்வதை முற்றாக ஏற்கிறேன், அந்த நிகழ்ச்சி கடுப்பேற்றுவதை தவிர வேற ஒன்றும் செய்வதில்லை.
அதேபோலத்தான் பின்னேரத்தில் ஒளிபரப்பாகும் சக்தி chaட் (தமிழ் மொழியின் சக்தி ), அதைப்பார்க்கும்போது எனக்கு இலங்கையில் இருக்கிறோமா இந்தியாவில் இருக்கிறோமா என்ற நினைப்புதான் வரும்.
அந்த அறிவிப்பாளினி..தொலைபேசியவர்கள் விடைபெறும்போதும் , நிகழ்ச்சி முடியும் போதும் எதோ சொல்லுவார்…….அது என்னவென்று எனக்கு இன்றுவரைக்கும் விளங்கவில்லை. 😀
நல்ல வேளை நான் அந்த நிகழ்ச்சி பார்பதே கிடையாது… சிலசமயம் இன்னும் கடுப்பாகியிருப்பேன்…
நல்ல காலம் LBN கனக்சனில் சக்தி வருவதில்லை..
உங்கட பதிவை பார்த்தால், சகதி டீவி என்று பெயர் மாற்றலாமோ?
என்ன செய்ய கீரைக்கடைக்கு எதிர்க்கடை இருநடதால் தான் நல்லது. இங்கு இருக்கிற எதிர்க்கடை அவ்வளவு பலமாயில்லை. இலங்கையிலேயே தமிழுக்கு இந்த நிலைமை என்றால் நினைக்கவே கவலை. இப்படி போனால் இவர்கள் தொலைக்காட்சியில் நம்ம மொழியை கொன்றுவிடுவார்கள். நீங்கள் கூறிய அந்த கர்ண கடூர நிகழ்ச்சியை நானும் ஒரு தடவை பார்த்திருக்கிறேன்.
இலங்கையின் வணிகத்தொலைக்காட்சிப் பாரம்பரியம் தன் அடி வேரிலிருந்தே நச்சுத்தன்மையானது, ஆபத்தானது. நாங்கள் அதன் மேல் மட்ட வெளிப்பாடுகளான் இந்தமாதிரி சகிக்க முடியா நிகழ்ச்சிகள் பற்றி "திருத்தும் படி" விமர்சிப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. (ஆனால் உங்கள் பதிவு இந்தத் தொலைக்காட்சியின் கேவலத்தை அம்பலப்படுத்துதல் என்ற வகையில் பயன்மிக்கது. இவ்வாறான பதிவுகள் வர வேண்டும்)
சக்தித்தொலைக்காட்சியை அடிமரத்தோடு வெட்டிச்சாய்ப்பது மட்டும்தான் ஈழத்தமிழர்களுக்கு நன்மை அளிக்கும்.
மெட்ரோ நியூஸ் போன்ற பத்திரிகைகளுக்கும் வணிக வானொலிகளுக்கும் கூட இது பொருந்தும்.
அதற்கு ஆகிற வழிகளைப் பார்க்கலாம்.
இதைப் பாருங்கோ இதுல இந்த விடயம் தொடர்பாக எழுதியுள்ளேன். – http://nkashokbharan.blogspot.com/2009/08/blog-post_10.html
சரியான பதிவு சுபானு
ம்ம் நிகழ்ச்சிதொகுப்பாளர்களுக்கு தட்டுபாடோ அல்லது
பணத்தட்டுபாடோ ஒன்றுமே இல்லை
தமிழுக்காய் இருக்கும் ஒரேஒரு தனித்துவமான தொலைக்காட்ச்சி என்பதை அவர்கள் நினைக்கத்தவறுகிறார்கள் போலும்
ஆனால் நாம் தானே இருக்க்கிறோம் எப்படியும் செய்துவிடலாம் என்ற அகங்காரமோ தெரியாது,
உதாரணத்துக்கு நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் வணக்கம் சொல்வது எமது வழமை என்று தெரிந்தும் அதை சொல்ல வெட்கப்படுபவர்கள் சகதியானவர்கள் புல்லட் சொன்னது போல.
"வணக்கம்" சொன்னால் என்ன வெட்கமா? http://karavaikkural.blogspot.com/2009/07/blog-post_362.html
எனக்கு இந்த ஆதங்கம் நிறையவே உண்டு.
ஆனால் இந்த விடயங்களை பலருடன் கதைக்க முற்பட்டபொழுது பலர் என் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக புதிய தலைமுறையினர்.
அவர்களின் இரசனைத் திறன் கேவலமான நிலைக்குப் போய்விட்டதோ தெரியவில்லை.
நான் அடிக்கடி நண்பர்களிடம் சொல்வது இது தான் 'சக்தி தொலைக்காட்சி (சக்தி ரீ.வி தான் சரியோ?) அறிவிப்பாளர்களால் ஆங்கிலம் தான் கதைக்க முடியுமென்றால் அவர்கள் MTV ற்குப் போகலாமே' என்று.
சக்தியை நக்கலடித்து நான் எழுதிய பழைய பதிவு இது.
முடிந்தால் பாருங்கள்.
http://tamilgopi.blogspot.com/2008/09/blog-post_08.html
சக்தித்தொலைக்காட்சியை அடிமரத்தோடு வெட்டிச்சாய்ப்பது மட்டும்தான் ஈழத்தமிழர்களுக்கு நன்மை அளிக்கும்.
மெட்ரோ நியூஸ் போன்ற பத்திரிகைகளுக்கும் வணிக வானொலிகளுக்கும் கூட இது பொருந்தும்.
என்று கூறிய மயூரனுக்காக இந்த பி்ன்னூட்டம்….
தேசியப் பத்திரிகைகளை பின்னுக்குத் தள்ளி முன்னணியில் செல்கிறது மெட்ரோ நியூஸ், வருடம் தவறாது ஊடக விருதுகளை மெட்ரோ நியூஸ் பெறுகிறது.ஜனனி பத்திரிகையைப் பற்றி யாரும் ஒன்றும் கூறவில்லையே!
தம்பி மயூரன் மெட்ரோ நியூஸ் மேல என்ன கோபம்
சாரங்கன்,
மெட்ரோநியூஸ் தொடர்பான என்னுடைய கருத்துக்களைப்பற்றி நான் சொல்வதற்கு முன் சில கேள்விகள் கேட்கவேண்டியுள்ளது.
1. தேசியப்பத்திரிகைகளை பின்னுக்குத்தள்ளி என்று நீங்கள் குறிப்பிடுவது எதனை? எந்த அடிப்படையில் நீங்கள் அதனை சொல்கிறீர்கள்? விற்பனையை வைத்தா?
2. மெட்ரோ நியூஸ் பத்திரிகை வெளியிடப்படுவதன் நோக்கம் என்ன?
3. மெட்ரோ நியூஸ் தமிழ் பத்திரிகை ஆயின் அதன் பெயர் ஏன் தமிழில் வைக்கப்படவில்லை?
4. மெட்ரோ நியூசில் எவ்வகையான ஆக்கங்கள் அதிகப் பக்கங்களில் வெளிவருகிறது?
5. மெட்ரோ நியூசின் எந்தப்பகுதி அதிக வாசகர்களைக் கவர்ந்திழுக்கிறது?
//ு.ஜனனி பத்திரிகையைப் பற்றி யாரும் ஒன்றும் கூறவில்லையே!//
கொழும்பின் வீதிமறைவுக்கடைகளில் விற்கும் செக்ஸ் கதைகள், படங்கள் அடங்கிய புத்தகங்களைப்பற்றியும் தான் யாரும் எதுவும் கூறவில்லை.
வீரகேசரி போன்ற மக்கள் மதிப்புப்பெற்ற பெரிய நிறுவனங்களின் வெளியீடு என்ற வகையிலேயே மெட்ரோநியூஸ் இங்கே முக்கியத்துவமளிக்கப்பட்டு விமர்சிக்கப்படுகிறது
தம்பி மயூரன் கேட்ட கேள்விக்கான பதில்கள்
கேள்வி 1 – குறைந்த காலத்தில் அதிக விருதுகள்
கேள்வி 2, 3 – நிர்வாகத்தை கேட்கவேண்டிய கேள்விகள்
கேள்வி 4 – பத்திரிகையை பார்த்தால் புரியும்
கேள்வி 5 – வாசகர்களை கேட்க வேண்டிய கேள்வி
கேள்விகளுக்கான பதில்கள் புரிந்து விட்டதா மிஸ்டர்