Month: August 2009
தமிழ்மொழியின் சக்தி! எத்தகைய செய்தியையும் முதலில் முந்திக்கொண்டு முதலில் மக்களுக்குத் தருபவர்கள் நாங்கள். தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள். இவை இலங்கையில் தம்மை முக்கியமான முதன்மையான தொலைக்காட்சியாகக் காட்டிக் கொள்ளும் சக்தி தொலைக்காட்சியின் அலங்கார மகுடங்கள். இலங்கையில் தொலைக்காட்சி வரலாற்றில் சக்தி தொலைக்காட்சிக்கு முக்கியமான இடம் உண்டென்றால் அது யாராலும் மறுக்க முடியாது. பல புதிய விடையங்களை அறிமுகப்படுத்தி இலங்கைத் தொலைக்காட்சிகளில் முக்கியமான இடத்தைத் தனதாக்கிக் கொண்டது உண்மைதான். ஆனாலும்… சக்தித் தொலைக்காட்சியில் தமது தயாரிப்பு என்றும்
Read Moreஅதே கணிதபாட பிரத்தியேக வகுப்பறையின் கரும்பலகையில் சில சமன்பாடுகள் திரிகோண கணிதத்தில் சமனிலிகளுக்கான அந்த சமன்பாடுகள் கரும்பலகையென்னும் பிரபஞ்ச வெளியில் முடிவற்று விரிந்து கொண்டேயிருந்தன.. சோவென அடித்துக் கொட்டும் மழையில் நனைந்த விட்டில் பூச்சிகள் பல குளிர்காய அந்த அறையில் மின் விளக்கை வட்டமடித்தபடி.. சுமந்து வந்த ஈரம் நீங்க விளக்கை முட்டி முட்டி மோதி தங்களை உலர்த்திக்கொண்டிருந்தன அந்த விட்டில்கள்… வகுப்பறையின் முதல் வாங்கின் ஓரத்தில் என்னவள் கடைசி வரிசை வாங்கின் ஓரத்தில் நான் சிக்கியிருந்தோம்
Read Moreபின்ன என்ன! மிகக் குறுகிய காலத்தில் பலரும் வியக்கும் வண்ணம் எண்பதிற்கும் மேற்பட்ட இலங்கைப் பதிவர்களை ஒன்றிணைத்து, அதனை விடவும் நேரலையில் நுாறிற்கும் மேற்பட்ட பதிவர்களை கவர்ந்திழுத்து ஆர்வத்துடன் தமது கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ள வைத்த இந்த இலங்கைப் பதிவர் சந்திப்பு வரலாற்றின் பக்கத்தில் பதியப்படவேண்டிய ஒன்றுதானே. ஏற்பாட்டுக்குழுவின் நேர்த்தியான திட்டமிடலாலும் கால நேரம் பாராத கடின முயற்சியினாலும் மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்துப் பதிவர்களினதும் கைகோர்த்த பேராதரவினாலுமே இந்த வரலாற்றுப் பதிவு சாத்தியமாகியது. வெள்ளவத்தை
Read Moreநாளை ஞாயிற்றுக் கிழமை(23-08-2009) இலங்கை வலைப்பதிவர்களின் முதலாவது சந்திப்பு கொழும்பில் நடைபெற உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. இதற்கு இது வரை 80 இற்கும் மேற்பட்டவர்கள் வரவிரும்புவதாக தமது விருப்பங்களையும் விபரங்களையும் ஏற்பாட்டுக்குழுவிற்கு வழங்கியுள்ளார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து பலரம் தமது மனதார்ந்த வாழ்த்துக்களை இலங்கையில் உள்ள எம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்கள். வெளிநாடுகளில் உள்ள பல பதிவர்கள் இந்த பதிவர் சந்திப்புப் பற்றி தமது விருப்பத்தையும் ஏற்பாட்டுக் குழுவிற்குத் தெரிவித்திருக்கின்றார்கள். இங்கு நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளை நேரடியாக
Read Moreவீண் கோபம் என்னோடு ஏன் அன்பே உனக்காக நான் வரையும் மடலிது என் ஈர விழிகளுக்குள் நீ நுழைந்து கலகம் செய்த நாட்கள் எத்தனை என் சுயத்தோடு கண்ணாம்மூச்சி விளையாடி இதயவாசலில் நீ பின்னலிட்ட தோறணங்கள் எத்தனை என் மொனத் தவம் கலைக்க கடைவிழி வழியே நீ நாண் ஏற்றிய பாணங்கள் எத்தனை இத்தனையும் என் இதயத்கூட்டின் அத்தனை அறைகளிலும் நித்திய சிம்மாசனம் இட்டிடத்தானே என்றோ தந்து விட்டேனே இதயராணி என்னும் உரிமையை என் மானசீகக் காதலியாகி
Read Moreஇதுவரை காலமும் பலமுறை முயன்றும் இயலாது போன – சில சமயங்களில் கைக் கெட்டியும் வாய்க்கெட்டாது போன பதிவர் சந்திப்பு இலங்கையில் நடைபெற உள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன். காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 9 மணி. இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம், இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்) கொழும்பு 06. நோக்கங்கள் : இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல். புதிய பதிவர்களை
Read MoreI don’t like to say any words about these pictures. You have to read the pictures and feel the truth behind them. What do u mean by humanitarian rescue mission? We all are congratulating you, but its absolutely a rigged one! you have colonised them again.. Now happy with the control in there wit and
Read Moreடிவிட்டர் டிவிட்டர் டிவிட்டர்… எங்கு காணினும் டிவிட்டரடா.. அண்மையில் அசினின் டிவிட்டரை தான் கண்டுபிடித்ததாகவும் ஆனால் திடீர் என்று அது காணாமல் போய் விட்டாகவும் பின்னர் மீண்டும் அசின் டிவிட்டரில் உயிர்பெற்றதாகவும் ஒரு டிவிட்டர் புரட்சி ஒன்றை செய்திருந்தார் நம்ம சாரல் சயந்தன். என்னடா இது என்று பார்த்தால் உண்மையில் அது அசினின் டிவிட்டர் தானா என்பதே பெருத்த சந்தேகமாக இருந்தது. நேற்று நம்ம புல்லட் அண்ணா திடீர் என்று துள்ளிக் குதித்தார். ஏன் என்று பார்த்தால்
Read Moreநாளைய உலகின் வீடியோ விளையாட்டுக்களில் மாபெரும் புரட்சி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. மூன்றாம் தலைமுறைக்கான புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தி வீடியோ விளையாட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளது. அந்த தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தும் செயற்திட்டத்திற்குத்தான் Project Natal என்று பெயர். நாம் எந்த ஒரு சென்சார்கலையும் உடலில் அணியாமல் எமது உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன்படுத்தி நாம் இந்த வீடியோ விளையாட்டுக்களை விளையாட முடியும். நம் உடலின் பல பாகங்களின் அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா
Read Moreநீண்ட காலமாக வலைப்பூக்களின் பக்கம் வருவது அரிதாகவே இருக்கின்றது. அவ்வாறு வந்தாலும் சும்மா ஏதாவது கிறுக்கிவிட்டு சென்று விடுவதுதான் வழமை. வேலைத்தளத்தில் தலைக்கு மேல் உள்ள வேலைப்பழுவே காரணம். வேலை நேரத்தில் பதிவுலகத்தில் நீண்ட நேரத்தை செலவிடமுடியாமையே அதற்கான காரணம். அண்மையில் சக பதிவாளரும் என் பல்கலைக்கழக கனிஸ்ட நண்பருமான சுபாங்கனிடம் இருந்து கிடைத்த பட்டாம்பூச்சி விருதி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதுவும் கன்னி அரைச் சதத்தைத் தொட்டுக்கொள்ளும் போது விருது. இரடிட்டிப்பு மகிழ்ச்சி. அந்த விருதினைப்
Read More