உங்கள் வலைப்பூக்களில் இதுவரை எத்தனை பூக்கள் மலர்ந்துள்ளன, எவ்வளவு பின்னுட்டங்களை அவை பெற்று வளம் பெற்றுள்ளன என்ற தகவலை நீங்கள் உங்கள் வலைப்பூக்களில் சேர்த்துக் காட்டினால் எப்படியிருக்கும்..! இணையத்தில் தேடிய போது கிடைத்தது இந்த widget. நீங்கள் உங்கள் வலைப்பூவினில் இந்த widget இனை இணைப்பதன் மூலம் அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
முதலில் நீங்கள் உங்களின் வலைப்பூவின் கட்டமைப்புப் ககுதிக்குச் சென்று அங்கு நீங்கள் எங்கு விரும்புகின்றீர்களோ அங்கே HTML/JavaScript widget ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். Adding a new gadget -> HTML/JavaScript.
பின்னர் அந்த HTML/JavaScript widget இல் பின்வரும் JavaScript code ஐ இணைத்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள myUnchal என்ற பகுதியில் உங்கள் வலைப்பூவின் URL ஐ மாற்றிவிடுங்கள்.
<script style="text/javascript">
function numberOfPosts(json) {
document.write('<center><b>Total Posts : ' +
json.feed.openSearch$totalResults.$t + '</b></center>');
}
function numberOfComments(json) {
document.write('<center><b>Total Comments : ' +
json.feed.openSearch$totalResults.$t + '</b></center>');
}
</script>
<ul><li><script
src="http://myUnchal.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts">
</script>
</li>
<li><script
src="http://myUnchal.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments">
</script>
</li></ul>
அவ்வளவுதான், சின்ன வேலை. இப்போது பாருங்கள் உங்கள் வலைப்பூவினை…
இதையும் வாசியுங்களன் : Popup image loading method
The credits of this widget goes to Assess My Blog
Categories: எனக்குத் தெரிந்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
நன்றி
நன்றிங்க
நல்ல பதிவு. ஆயினும் முயற்சி செய்து உள்ளதையும் கெடுத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.
நன்றிகள் எனக்கு உங்களது வலையிலுள்ளதுபோல் கலராக வரவில்லை ஏன்?
நன்றி கதிர்
நன்றி திகழ்மிளிர்
@டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
// நல்ல பதிவு. ஆயினும் முயற்சி செய்து உள்ளதையும் கெடுத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.
பயப்படத்தேவையில்லை.. நான் ஏற்கனவே சோதனை செய்து பாத்துவிட்டுத்தான் பதிந்தேன். அப்படியும் இல்லையென்றால் நீங்கள் உங்கள் வலைப்பூவின் templets ஐ தரையிறக்கிச் Backupஆகச் சேமித்து பின்னர் முயன்று பாருங்களேன்
@வந்தியத்தேவன்
//நன்றிகள் எனக்கு உங்களது வலையிலுள்ளதுபோல் கலராக வரவில்லை ஏன்?
எனது வலைப்பூவில் பச்சை நிறத்தில் வருவதற்குக் காரணம் நான் பயன்படுத்தும் CSS. உங்களது வலைப்பூவில் பயன்படுத்தும் CSS இற்கு ஏற்பத்தான் நிறம் வரும்.
நீங்கள் பிரத்தியேகமான நிறம் உபயோகிக்க விரும்பினால் பின்வருமாறு செய்யலாம்.
function numberOfPosts(json) {
document.write('<center><font color=green><b>Total Posts : ' +
json.feed.openSearch$totalResults.$t + '</b></font></center>');
}
அதாவது <font color=green>< என்ற tagஐப் பயன்படுத்தி நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.
நன்றி சுபானு
நல்ல உதவி.. நன்றிகள்.
நன்றி மதுவதனன் மௌ.
உங்கள் வலைப்பதிவு வடிவமைப்பு கலக்கலாக இருக்கு.
நன்றி.. நன்றி… நன்றி…