நாம் கை கோர்த்து நடக்கும் போதெல்லாம்
மழை மேகங்களுக்குச் சந்தோசமோ
இப்படி ஆர்ப்பரிக்கின்றனவே முழக்கங்களாய்
வெட்டி வெட்டிக் கண்சிமிட்டுகின்றனவே மின்னலாய்
சில்லென ஒடுங்குகின்றனவே மழைத்துளிகளாய்
உன்னைத் தானே தொட்டுக் கொண்டேன்
மழைத்துளிகளுக்கு ஏன் இந்த நாணம்
உன்னிடமே கடன் வாங்கி
இப்படிச் சிலிர்க்கின்றனவே
போதுமடி இனியும் கடன் கொடுத்து
நிரந்தரக் கடனாளியாக்காதே
மழைத் துளிகளை!
நல்லாயிருந்தா தமிழிஸ் இல் வாக்களிக்க இங்கே சொருகுங்கள்.
Categories: கவிதை, குறும்புகள், பாதித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்