என்ன ஒரு இன்ப அதிர்ச்சி.. நமக்கும் சுவாரஸ்ய பதிவர் விருது அளித்திருக்காங்க.. “சும்மா” என்று வலையில் பூத்து தினமும் தமிழ்மணம் பரப்பும் பூவினை மெருகூட்டும் வலசு – வேலணை என்ற பெயரில் உலாவரும் ….(பெயர் தெரியவில்லை) என்பவரின் கைகளால் நான் இந்த விருதைப் பெற்றிருப்பது என்னை சந்தோசக் கடலில் மிதக்க வைக்கின்றது. இவரின் வேரென நீயிருந்தாய்.. என்ற தொடரில் பூத்துக் குலுங்கும் பூக்களை நான் மிகவும் இரசித்ததுண்டு. அவற்றை விட புத்தனின் புதிய ஞானம் மற்றும் மூன்றாவது பால் அல்லது மூன்றாம் பாலினம் என்பன நான் மிகவும் இரசித்த பதிவுகள். நீங்களும் வாசித்துப் பாருங்களேன். அவருக்கு மனமார்ந்த நன்றிகள். (உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் அவரது பதிவில் தெரிவியுங்கள்.) அப்படி ஊஞ்சலில் என்ன அவ்வளவு சுவாரசியமான பூக்களா பூக்கின்றது… இறைவனுக்குத்தான் அத்துணை நன்றி சொல்லவேண்டும்.
தனது எண்ணங்களையும் தனது உணர்வுகளையும் சக மனிதனோடு பதிர்ந்து கொள்வதற்கு மனிதனுக்கு ஒரு ஊடகம் ஒன்று தேவைப்பட்டுது. ஆரம்பத்தில் சைகைப் பாசைமுலம் ஆரம்பித்த அந்தப் பயணம் பின்னர் மனிதனைப் பேசக்கூடிய உயிரினமாக்கி ஏனைய உயிரினங்களிம் இருந்து அவனை வேறுபடுத்தியது. படிப்படியாக தமக்கும் தமது கூட்டத்தாருக்கு மாத்திரம் புரியக்கூடிய, விளங்கக் கூடிய பாசைகளை அவன் தெரிவு செய்து கொண்டான். மனித நாகரிகப் பரிமாண வளர்ச்சியோடு பரிணமித்த அந்த பாசைப் பிரயோகங்கள் அந்தக் குழுக்களுக்கிடையே வழக்க மொழியானது. தமக்கென தமது மொழிக்கென அந்த வழக்க மொழிகள் ஒரு இலக்கணத்தை உருவாக்கி அந்த வழக்க மொழிகளை ஒரு கட்டுக்கோப்புடைய மொழி என்ன அந்தஸ்துடன் பரிணமித்தன. அத்தகைய இலக்கண வரையறையை உருவாக்கத் தவறிய வழக்க மொழிகள் இந்த பூமிப்பந்தில் இருந்து டாவின்சின் தெரிவுக்கோட்டாட்டுக்கு அமைய தூக்கி எறியப்பட்டு தக்கன மட்டும் பிழைத்துக்கொண்டன. பிற்காலங்களில் இலக்கணங்களை வரையறையாகவும் சமூகப் பழக்கவழக்கங்களையும் கலாச்சாரங்களையும் மக்களுக்கு வலியுறுத்த பல இலக்கியங்கள் எழுந்தன. இவ்வாறாக வளந்த மொழிப்பிரயோகம் தமக்குள் பல பல புதிய விடயங்களை உள்வாங்கி புதிய உலகின் வளர்ச்சிக்கேற்ப தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டன.
கணணிப் பொறியியலில் ஒரு சிறந்த கருத்து ஒன்று உள்ளது. அதாவது OCP concept(The Open-Closed Principle states “software entities (classes, modules, functions, etc.) should be open for extension, but closed for modification”). என்னைப் பொறுத்தவரை இந்தக் தத்துவம் அனேகமாக எங்கும் பிரயோகிக்கப் படக்கூடிய ஒரு சிறந்த தத்துவம். அதாவது எந்தவொரு விடையமும் புதிதாக உருவாகுகின்ற புதிய அம்சங்களைத் தங்களுக்குள் உள்வாங்கக் கூடிய நீட்சித்தன்மையைக் கொண்டிருக்க வேண்மும். அதேநேரம் ஏற்கனவே இருக்கின்ற பலராலும் ஏற்றுக் தொள்ளப்பட்ட மிகநிண்ட பயன்பாடுகொண்ட எந்தப் பழமையான விடயங்களையும் மாற்றிவிடக்கூடாது. அவ்வாறு தமக்குள் ஒரு நெகிழ்ச்சித்தன்மையற்ற நீட்சித்தன்மையை அவை கொண்டிருக்குமானால் அவை நீண்ட காலத்திற்கு தனித்துவமாக தமக்கான புழழுடன் தப்பித்து நிலைத்து நிற்கும். தமிழ் மொழியினை எடுத்துக்கொண்டோமானால் அது இந்த தத்துவத்திற்கு சிறப்பாக அமைந்தொழுகுவதனால்த்தான் அது பல ஆயிரம் ஆண்டுகாலம் நிலைத்து நிற்கின்றது, இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என்பது மறுத்துரைக்க முடியாத உண்மை.
பல்வேறு பரிணாம வளர்ச்சிப் படிகளைக் கடந்து பல சாதனைகளையும் பல நுட்பமான கருத்துப் போர்களங்களையும் தனக்குள் நிகழ்த்தி இன்று தனக்கென தனித்துவமான இலக்கண மரபுகளோடு பயணித்துக் கொண்டிருக்கும் செம்மொழியாம் தமிழ்மொழினைத் தாய்மொழியாகக் கொண்டதனை, எப்போதும் அந்த இறைவன் எனக்களித்த வரப்பிரசாதமாக நினைப்பவன் நான். அதுவும் எனது எண்ணங்களையும் உணர்வுகளையும் பிசறின்றி மற்றவர்களோடு பகிர்ந்து தொள்வதற்கு உரிய வரப்பிரசாதத்தை அடைவதற்கு முற்பிறவியில் என்ன தவம் செய்தேனோ..?
எல்லாம் சரி விடயத்திற்கு வருவோம். இப்போது எனக்கு அளிக்கப்பட்ட இந்த விருதினை நான் இன்னும் ஆறு பதிவாளர்களுக்கு அளிக்க வேண்டும்.யார் யார் என்னை மிகவும் கவர்ந்த சுவாரஸ்ய பதிவர்கள் எனத் தேடியபோது பலருடைய வலைப்பூக்கள் என் ஞாபகத்திற்கு வந்தன. என்ன செய்ய, விருது ஆறு பதிவாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது விதியாம். சரி நான் மிகவும் வாசிக்கும் என்னைக் கவர்ந்த பதிவாளர்கள் ஆறுபேரிக்கு இந்த வலைப்பூக்களுக்கு சுவாரஸ்ய பதிவர் விருதினை அளிக்கின்றேன்.
1 – திவ்யாவின் – மனசுக்குள் மத்தாப்பூ
என்னை தனது அழகாக எழுத்துக்களால் மிகவும் கவர்ந்த பதிவர். குறும்புத் தனமான காதல் ததும்பும் இனிய கதைகளை இணையத்தில் தருவதில் இவருக்கு நிகர் இவர்தான்.
2 – லோஷன்னின் – லோஷனின் களம்
பல புதிய விடையங்களை தருவதில் முன்நிற்பவர். கிரிக்கட்டின் உடனடித் தகவல்களை விமர்சனங்களோடு சுடச்சுடத் தருபவர்.
3 – சேவியரன் கவிதைச் சாலை
அழகான காதற்கவிதைகள்.. அழது அழது அத்தனையழகு. இவரது கவிதைகளில் அப்படி ஒரு மயக்கம்.
4 – ஆதிரையின் – கடலேறி
ஏறி வரும் இவன் ஒரு ஜனநாயகவாதி. சரித்திரம், விஞ்ஞானம் ஈழம் என அனைத்தையும் விறுவிறுப்புக் குறைவின்றி தருபவர்.
5 – மதுவதனன் மௌ வின் – நா
வித்தியாசமான பதிவுகளில் அசத்துபவர். இவரது வலைப்பூவின் பெயரைப் போலவே இவரது எழுத்துக்களும் வித்தியாசமானவை.
6 – தூயாவின் – தூயா
உரிமைக்குரல் உரிமையோடும் உணர்வோடும் ஒலிக்கும் அருமையான பதிவர்.
வாழ்த்துகளுடன் எனக்கு வந்த பந்தினை இப்போது இவர்களுக்கு பரிமாற்றிவிட்ட ஒரு தெளிவான நிம்மதியுடன் விடைபெறுகின்றேன்.
Categories: சுயதம்பட்டம், வாழ்த்துக்கள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
Thanks a lot for the Award!!!
நன்றிகள் நண்பரே
ஹா.. எனக்குமா.. நன்றி சயந்தன்…
வாழ்க்கையே சுவாரசியமாய் இருக்க.. இன்னொரு சுவாரசியமாய்.. சுவாரசிய வலைப்பதிவர் விருது..
நன்றி..
அனைவருக்கும் வாழ்த்துக்கள் கலக்குங்க..! 🙂
Well done!!!!
keep it up dear!!!!
Well done!!!!
keep it up dear!!!!
நன்றி.. நன்றி..